சர்வதேச அமைதி தினம் செப்டம்பர் 21 அன்று அனுசரிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அகிம்சை மற்றும் போர்நிறுத்தத்தை கடைபிடித்து நாடுகள் மற்றும் மக்களிடையே அமைதியை ஊக்குவிக்க இந்த நாளைக் கொண்டாடுகிறது.
நோக்கம்:
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, உண்மையான அமைதி என்பது வன்முறை இல்லாததை மட்டும் உள்ளடக்கியது அல்ல. ‘அனைத்து மக்களும் அமைந்து செழிக்க முடியும் என்று நினைக்கும் சமூகத்தை உருவாக்குவது’ ஆகும். எந்த பிரிவினை வேறுபாடும் பாராமல் அனைவரும் சமமாக நடத்தப்படும் உலகத்தை உருவாக்க முயல்கிறது.
வரலாறு:
ஐக்கிய நாடுகள் சபை 1981 ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியம் மற்றும் கோஸ்டாரிகாவால் கூட்டாக நிதியுதவி செய்த ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதில் "எல்லா மனித இனத்திற்கும் அனைத்து வேறுபாடுகளுக்கும் மேலாக அமைதிக்காக உறுதியளிக்கவும், அமைதி கலாச்சாரத்தை உருவாக்க பங்களிக்கவும் உலகளாவிய பகிரப்பட்ட தேதி அறிவிக்கப்பட்டது.
பின்னர் 2001 இல் அதிகாரப்பூர்வ தேதி செப்டம்பர் 21 என அறிவிக்கப்பட்டது. அதுவரை, ஒவ்வொரு ஆண்டும் பொதுச் சபையின் தொடக்க அமர்வான செப்டம்பர் மூன்றாவது செவ்வாய் அன்று அனுசரிக்கப்பட்டது.
அமைதி மணி:
இந்நாளை நினைவுகூரும் வகையில், நியூயார்க் நகரில் உள்ள ஐநா தலைமையகத்தில் ஐக்கிய நாடுகளின் அமைதி மணி ஒலிக்கப்படுகிறது. 1954 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் ஜப்பான் சங்கத்தால் அமைதி மணி நன்கொடையாக வழங்கப்பட்டது.
60க்கும் மேற்பட்ட வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் உட்பட உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், போப் மற்றும் மக்கள் வழங்கிய நாணயங்கள் மற்றும் பதக்கங்களிலிருந்து மணி வார்க்கப்பட்டது. புத்தர் பிறந்த இடத்தைக் குறிக்கும் ஹனாமிடோ (மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு சிறிய கோயில்) மாதிரியாக மணி கோபுரம் வடிவமைக்கப்பட்டது.
இன்ஸ்டாகிராமில் பிழையைக் கண்டறிந்த இந்திய மாணவருக்கு ரூ.38 லட்சம் பரிசு!
அமைதி மணி வருடத்திற்கு இரண்டு முறை: வசந்த காலத்தின் உத்தராயணம் மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 21 சர்வதேச அமைதி தினத்தன்று ஒலிக்கப்படுகிறது. அமைதிக்கான சர்வதேச தினத்தன்று, ஐக்கிய நாடுகளின் செயலாளர், நிரந்தர தூதரகங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஐநா செயலக அதிகாரிகள் முன்னிலையில், உலக அமைதிக்காக பிரார்த்தனை செய்ய மணியை அடிக்கிறார்.
இந்த வருடத்தின் கருப்பொருள்:
இந்த வருடம் “இனவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவோம். அமைதியைக் கட்டியெழுப்புவோம்.” என்ற நோக்கத்துடன் செயல்பட இருக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.