Home /News /trend /

உலகிலேயே வயதான கொரில்லாவின் 65வது பிறந்த நாள் கொண்டாட்டம் - வைரல் வீடியோ

உலகிலேயே வயதான கொரில்லாவின் 65வது பிறந்த நாள் கொண்டாட்டம் - வைரல் வீடியோ

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

பூங்கா நிர்வாகம் 65 என எழுதப்பட்ட பிரத்யேக கேக்கை இலை அலங்காரத்துடன் சேர்த்து ஃபாடோவிற்கு கொடுத்துள்ளனர்.

உலகின் மிக வயதான கொரில்லா, ஃபாடோ, ஜெர்மனியில் உள்ள ஒரு விலங்கியல் பூங்காவில் தனது 65வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளது.

மனிதர்களைப் போல் அவ்வப்போது விலங்கியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கும் பிறந்தநாள் கொண்டாடப்படுவது உண்டு. அதுவும் வேகமாக அழித்து வரும் உயிரினங்கள் என்ற கொண்டாட்டம் கோலகலமாக இருக்கும். ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில், விலங்கின் இருப்பிடத்தை அலங்கரித்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவது வழக்கம். அன்றைய தினம் அந்த விலங்கிற்கு மிகவும் பிடித்தமான உணவுவகைகள் வழங்கப்படும். இதுதொடர்பான போட்டோஸ் மற்றும் வீடியோக்கள் வெளியாகி அன்றைய தினம் முழுவதும் இணையத்தில் வைரலாகும்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு ஜெர்மனியில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்றில் உலகிலேயே மிகவும் வயதான கொரில்லாவிற்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. கொரில்லாக்கள் சராசரியாக 45 முதல் 65 வருடங்கள் வாழக்கூடியவை. ஆனால் பெர்லினில் உள்ள விலங்கியல் பூங்காவில் 65 வயதான ஃபாடோ என்ற பெண் கொரில்லா உயிர் வாழ்ந்து வருகிறது. இதுதான் உலகிலேயே மிகவும் வயதான கொரில்லா ஆகும்.

1957ம் ஆண்டு 2 வயதாக இருக்கும் போது விலங்கியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்ட ஃபாடோ அங்கு செல்ல இளவரசி போல் வளர்ந்து, இன்று மகாராணி போல் கோலாகலமாக பிறந்தநாள் கொண்டாடியுள்ளது. கொரில்லா மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஒரு மாலுமியால் கொண்டு வரப்பட்டுள்ளது. அவர் அதனை முதலில் பிரான்ஸ் நாட்டிற்கு கொண்டு சென்றுள்ளார், தனது கடனை திரும்பிச் செலுத்த முடியாமல் திண்டாடிய மாலுமி கொரில்லாவை மார்சேயில் உள்ள ஒரு பப் உரிமையாளருக்கு விற்றுள்ளார். அப்போது தான் பெர்லின் விலங்கியல் பூங்கா நிர்வாகத்தால் பப் உரிமையாளரிடம் இருந்த இளம் கொரில்லாவான ஃபாடோ மீட்கப்பட்டுள்ளது.

also read : 85 வயதில் இப்படி ஒரு சாதனையா! அசர வைக்கும் பாட்டி..
 பூங்கா நிர்வாகம் 65 என எழுதப்பட்ட பிரத்யேக கேக்கை இலை அலங்காரத்துடன் சேர்த்து ஃபாடோவிற்கு கொடுத்துள்ளனர். அதுவும் அந்த கேக்கை மிகவும் ருசித்து சாப்பிட்டுள்ளது. இதுகுறித்து விலங்கியல் பூங்கா நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்த சிறந்த பிறந்தநாள் கேக்கை வழங்கிய எங்கள் பராமரிப்பாளர்களுக்கு நன்றி. ஃபாடோ அதை மிகவும் விரும்பியது. #பிறந்தநாள் வாழ்த்துக்கள் #கொரில்லா #ZooBerlin" எனபதிவிட்டுள்ளனர். அத்துடன் ஃபாடோ பிறந்தாள் கேக்கை எப்படி சாப்பிடுகிறது என்ற வீடியோவையும் இணைந்துள்ளனர்.



அந்த வீடியோவில், பெர்ரி பழங்களால் 65 என எழுதப்பட்ட கேக்கை ஃபாடோ ரசித்து, ருசித்து சாப்பிடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்த விலங்கியல் பூங்காவில் பணியாற்றும் என்பவர் கூறுகையில் கிறிஸ்டியன் ஆஸ்ட் கூறுகையில், "கேக்கின் அடிப்பகுதி அரிசியால் ஆனது, நாங்கள் குவார்க், காய்கறிகள் மற்றும் பழங்களை அலங்காரத்திற்கு பயன்படுத்தினோம்" என குறிப்பிட்டுள்ளார்.

65 வயதான போதும் துடிப்பாக இருக்கும் பெண் கொரில்லாவான ஃபாடோ தங்களுடன் இருப்பது மிகவும் மகிழ்ச்சியை கொடுப்பதாகவும், இதுபோல் இன்னும் பல பிறந்தநாளை ஃபாடோ தங்களுடன் கொண்டாட வேண்டும் என்றும் விலங்கியல் பூங்கா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். zoo berlin என்ற ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள ஃபாடோ பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோவை இதுவை 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கண்டு ரசித்துள்ளனர்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Viral Video

அடுத்த செய்தி