Trending : உக்ரேனிய சர்க்கஸில் பல ஆண்டு சிறைவாசத்திற்கு பிறகு சுதந்திர காற்றை சுவாசிக்கும் "உலகின் தனிமையான கரடி"

"உலகின் தனிமையான கரடி

COVID-19 தொற்றுநோய் மற்றும் அதனால் போடப்பட்ட ஊரடங்கு காரணமாக அனைத்து பொது நிகழ்ச்சிகளையும் சர்க்கஸ் நிறுவனம் ரத்து செய்தது.‘உலகின் தனிமையான கரடி’ என்று குறிப்பிடப்படும் அந்த விலங்கு ஃபோர் பாவ்ஸால் என்ற உரிமை அமைப்பால் மீட்கப்பட்டது.

  • Share this:
உக்ரைனில் 12 வயதான கரடி ஒன்று அதன் உரிமையாளர்களால் பல ஆண்டுகளாக சர்க்கஸில் பயன்படுத்தப்பட்டு வந்தது. பல கால சிறைவாசத்திற்கு பிறகு சுவிட்சர்லாந்தின் ஆல்பைன் பாரடைஸில் தனது முதல் குளிர்கால வாழக்கையை தற்போது சுதந்திரமாக அனுபவித்து வருகிறது.

ஜம்போலினா என்ற பெயர் கொண்ட அந்த பெண் கரடி, சர்க்கஸ் உரிமையாளர்களால் பராமரிக்க முடியாததால் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. ஏனெனில் COVID-19 தொற்றுநோய் மற்றும் அதனால் போடப்பட்ட ஊரடங்கு காரணமாக அனைத்து பொது நிகழ்ச்சிகளையும் சர்க்கஸ் நிறுவனம் ரத்து செய்தது.

மேலும் ‘உலகின் தனிமையான கரடி’ என்று குறிப்பிடப்படும் அந்த விலங்கு ஃபோர் பாவ்ஸால் என்ற உரிமை அமைப்பால் மீட்கப்பட்டது. அமைப்பின் ஊழியர்கள் கரடியை உக்ரைனில் உள்ள உரிமையாளர்களிடமிருந்து அழைத்துச் சென்று 1,500 மைல் தொலைவில் சுவிட்சர்லாந்தின் அரோசா மலைத்தொடரில் உள்ள ஒரு புதிய இடத்திற்கு அழைத்து வந்தனர்.

ALSO READ | வாஷிங்மெஷினுக்குள் ஒளிந்த நரி - சோறுபோட்டு விரட்டிய தம்பதி!

28,000 சதுர மீட்டர் சுவிஸ் இயற்கை இருப்புநிலையில் புதிய வாழ்க்கையைத் தொடங்க தற்போது அந்த கரடிக்கு அழகிய வாய்ப்பு கிடைத்துள்ளது. பல ஆண்டுகளாக கூண்டிலேயே அடைத்து வைக்கப்பட்டதால், ஜம்போலினா பதட்டமாகவும், பயமாகவும், தயக்கமாகவும் இருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் நல்ல குளிர்கால தூக்கத்திற்குப் பிறகு, ஆல்பைனை ரசிக்க கரடி தயாராக இருப்பதாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் அரோசா பியர் லேண்டின் விஞ்ஞான இயக்குனர் டாக்டர் ஹான்ஸ் ஷ்மிட் அதன் நடத்தையை முற்றிலும் இயற்கையானது என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் சந்தேகம் என்பது ஒரு முக்கிய உயிர்வாழும் உத்தி என்று அவர் கூறினார். மேலும் விலங்குகளை பராமரிப்பவர்கள் கூறியதாவது, ஜம்போலினா அந்த சுற்றுசூழலை பழகிக் கொண்டு, அங்கிருந்த குளத்தை நோக்கிச் சென்று குளித்ததாக கூறியுள்ளார்.

ALSO READ | சுறாவுக்கே சுளுக்கு பாடம் - யூடியூபை கலக்கும் வீடியோ!

மேலும் பராமரிப்பவர்கள் கரடியை தைரியமான புத்திசாலி என்று வர்ணித்தனர். மேலும் சிறிது நேரத்திற்குப் பிறகு கரடி வெளிப்புற பகுதியில் சுற்றி தெரிந்ததைக் கண்டு மிகவும் வியந்ததாக பராமரிப்பு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இயற்கை நிலப்பரப்புடன் பழகியவுடன் ஜம்போலினாவுக்கு மேலும் மீட்கப்பட்ட இரண்டு கரடிகளை அறிமுகப்படுத்த அவர்கள் திட்டமிட்டுள்ளதாக டாக்டர் ஹான்ஸ் ஷ்மிட் தெரிவித்துள்ளார். புதிதாக மீட்கப்பட்ட அந்த இரண்டு கரடிகள் தற்போது கவனிப்பு மற்றும் கண்காணிப்பில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இயற்கை நிலப்பரப்பில் ஜம்போலினாவின் முதல் படிகள் பல பார்வையாளர்களால் கண்டு ரசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சுவிட்சர்லாந்தில் உள்ள நிறுவனத்தின் மேலாளர் கூறியதாவது, இதுபோன்ற தருணங்கள் தனக்கு “கூஸ்பம்ப்களை” தருவதாக விவரித்தார். ஏனெனில் இந்த அமைப்பு எவ்வாறு புதிய உயிர்களைத் காக்க முடியும் என்பது பற்றி யோசித்தால் நம்பமுடியாத அளவிற்கு அழகாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

ALSO READ | 'முதல் இடம் பிடித்த ஜெகமே தந்திரம் ட்ரெய்லர்...புகழுக்கு குவியும் வாழ்த்து '- இன்றைய ட்ரெண்டிங் வீடியோ

ஃபோர் பாவ்ஸ் உக்ரேனில் ஒரு மீட்பு மையத்தைக் கொண்டிருந்தாலும், அங்கு மொத்தம் 22 கரடிகள் உள்ளன. இது அதிகப்பட்ச எண்ணிக்கை ஆகும். எனவே, அவர்கள் உதவிக்காக சுவிஸ் ரிசர்வ் வங்கியை நாடியதாக கூறியுள்ளனர்.

 உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

 
Published by:Sankaravadivoo G
First published: