Home /News /trend /

உலகிலேயே இதுதான் பெரிய பேனா! கின்னஸ் சாதனை படைத்த நபர்...

உலகிலேயே இதுதான் பெரிய பேனா! கின்னஸ் சாதனை படைத்த நபர்...

உலகின் பெரிய பேனா..

உலகின் பெரிய பேனா..

World Largest Ball Pen : நாம் 5 ரூபாய்க்கு வாங்கும் பால் பாயிண்ட் பேனாவை போலவே இந்த பேனாவிலும் எழுத முடியுமாம்.

”கத்தி முனையை விட பேனா முனை கூர்மையானது’’ என்பது பழமொழி. அத்தகைய சிறப்பு மிகுந்த பேனாவை மையமாக வைத்து கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளார் ஹைதராபாதை சேர்ந்த ஆச்சாரியா மகுருனி ஸ்ரீநிவாஸா என்பவர்.

ஸ்ரீநிவாஸா மற்றும் அவரது குழுவினர் இணைந்து கடந்த 2011ஆம் ஆண்டில் மிகப் பெரிய அளவிலான பால் பாயிண்ட் பேனா ஒன்றை உருவாக்கினர். அந்தப் பேனாவுக்கு தற்போது கின்னஸ் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதுதொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராம் தளத்தில் வெளியாகியுள்ளது. கின்னஸ் அமைப்பு அந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் ஸ்ரீநிவாஸா மற்றும் அவரது குழுவினர் பேனாவை சுமந்து செல்கின்றனர்.

பேனா எழுதுமா?

வெறுமனே பிரம்மாண்ட தோற்றத்திற்காக மட்டும் இவர்கள் இந்தப் பேனாவை தயாரித்து விடவில்லை. நாம் 5 ரூபாய்க்கு வாங்கும் பால் பாயிண்ட் பேனாவை போலவே இந்த பேனாவிலும் எழுத முடிகிறது. என்ன ஒரு வித்தியாசம் என்றால், தனியொரு நபர் இந்தப் பேனாவை வைத்து எழுதிவிட முடியாது. சுமார் 5, 6 பேர் கொண்ட குழுவின் துணையோடு தான் இந்தப் பேனாவில் எழுத முடியும்.

எத்தனை கிலோ எடை, எவ்வளவு நீளம்?

கின்னஸ் அமைப்பு வெளியிட்டுள்ள வீடியோவில் ஸ்ரீநிவாஸா மற்றும் அவரது குழுவினர், ஏதோ பீரங்கியை சுமப்பதைப் போல பேனாவை தோளில் சுமந்து தூக்கி வருகின்றனர். மாபெரும் பேப்பர் ஒன்றில் அந்தப் பேனாவை கொண்டு எழுதிக் காண்பித்தனர்.



இந்த பேனா குறித்த விவரங்களையும் கின்னஸ் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. உலகிலேயே மிகப் பெரியதாக கருதப்படும் இந்த பேனா 5 மீட்டர் நீளம் அல்லது 18 அடி நீளம் கொண்டதாகும். சுமார் 37.23 கிலோ அளவில் பேனா உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய புராணக் கதைகளில் கூறப்படும் பிரம்மாண்டத்தின் அடிப்படையில் ஸ்ரீநிவாஸா குழுவினர் இந்தப் பேனாவை உருவாக்கினர் என்று கின்னஸ் அமைப்பு தெரிவிக்கிறது.

also read : இந்த ஓவியத்தில் ஒளிந்திருக்கும் 13 முகங்களை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்..



 
 

 

 


View this post on Instagram


 

 

 

 

A post shared by Guinness World Records (@guinnessworldrecords)





பேனாவுக்கு வெளியே அமைந்துள்ள வெண்கல தகடு என்பது 9 கிலோ எடை கொண்டதாகும். இதற்கு முன்பு 1.45 மீட்டர் அல்லது 4 அடி 9 இன்ச் அளவில் தயாரிக்கப்பட்டதே மிகப் பெரிய பேனாவாக இருந்தது. அந்த சாதனையை இவர்கள் முறியடித்துள்ளனர். அதே சமயம், கின்னஸ் அமைப்பின் விதிமுறைகளின்படி இந்தப் பேனாவில் எழுதவும் முடிகிறது.

பாராட்டும் நெட்டிசன்கள் : 

இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவை பல லட்சக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர். சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுகுறித்த ஆச்சரியங்களை வெளியிட்டிருப்பதுடன், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர். வீடியோவைப் பார்த்ததுமே இது ஏதோ பெரிய ஆயுதம் என நினைத்ததாக நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார்.



இதற்கு முன்பு, எந்தக் காலச் சூழ்நிலையிலும், எப்படி வைத்து எழுதினாலும் இங்க் வரும் வகையில் பேனா ஒன்றை அமெரிக்காவில் உள்ள அமைப்பு ஒன்று உருவாக்கியது. குறிப்பாக, விண்வெளி ஆராய்ச்சியின்போது இந்த வகை பேனா பயன்படுகிறது.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Trending, World record

அடுத்த செய்தி