முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / 'சின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு'.. உலக கருணை தினம் இன்று!

'சின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு'.. உலக கருணை தினம் இன்று!

உலக கருணை தினம்

உலக கருணை தினம்

உலக கருணை தினத்தின் வரலாறு 1997 ஆம் ஆண்டு உலகம் முழுவதிலுமிருந்து கருணை அடிப்படையிலான சமூக செயல்முறைகளைக் கொண்டுவரும் நோக்கில் ஜப்பானின் டோக்கியோவில் உலக கருணை இயக்கத்தால் நடத்தப்பட்ட முதல் மாநாட்டில் தொடங்கியது

  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai |

இந்த உலகில் கருணைக்கு மேல் எதுவும் இல்லை. நாளுக்கு நாள் கொடூரமான குற்றங்கள் மற்றும் செயல்பாடுகள் அதிகரித்து வருவது உண்மைதான் என்றாலும், இரக்கம் இன்னும் உலகை ஆளுகிறது என்பதை மறுக்க முடியாது.

கருணையின் உணர்ச்சியே ஒரு நபர் நல்லவரா கெட்டவரா என்பதை வரையறுக்கிறது. விலங்குகளைக் காட்டிலும் மனிதர்களை வேறுபடுத்தி காட்டுவது உணர்ச்சிகளால் தான். மனிதநேயம், இரக்கம் , ஆகியவற்றை உள்ளடக்கிட கருணையைக் கொண்டாடும் தினம் இன்று….

முக்கியத்துவம்

நவம்பர் 13 அன்று உலகம் முழுவதும் கருணையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவே இந்த உலக கருணை தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் கருணையுடன் செய்யப்படும் ஒவ்வொரு வகையான செயலையும் ஊக்குவிக்கிறது. கருணையால் உலகமும் அதன் மக்களும் எப்படி மாறுகிறார்கள் அவர்களது வாழ்க்கையில் அந்த மாற்றம் எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்த இந்த நாள் பெரிதும் உதவியாக இருக்கிறது.

தீம்

2022 ஆம் ஆண்டின் உலக கருணை தினத்தின் கருப்பொருள் "முடிந்தவரை அன்பாக இருங்கள்" (Be kind whenever possible) என்பதாகும். இந்த தீம் தலாய் லாமாவின் மேற்கோளால் ஈர்க்கப்பட்டது.

இதையும் பாருங்க: தமிழர்களின் ஆயுதத்துடன் அடக்கம் செய்யப்பட்ட எகிப்திய மன்னன் துட்டன்காமூன் உடல்!

வரலாறு

உலக கருணை தினத்தின் வரலாறு 1997 ஆம் ஆண்டு உலகம் முழுவதிலுமிருந்து கருணை அடிப்படையிலான சமூக செயல்முறைகளைக் கொண்டுவரும் நோக்கில் ஜப்பானின் டோக்கியோவில் உலக கருணை இயக்கத்தால் நடத்தப்பட்ட முதல் மாநாட்டில் தொடங்கியது. அப்போது கனடா, ஆஸ்திரேலியா, நைஜீரியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இது கடைபிடிக்கப்பட்டது.

1998 ஆம் ஆண்டு முதல் , ஆண்டுதோறும் கருணை தினம் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அன்று முதல் கருணை இயக்கம் ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. யுகே (2005), சிங்கப்பூர் (2009)ஆஸ்திரேலியா (2012), பிரான்ஸ் (2015), அமெரிக்கா (2018), என்று விரிந்து 2019 இல் உலக கருணை இயக்கம் 27 நாடுகளை அடைந்தது. பல தசாப்தங்களின் நீண்ட பயணத்திற்குப் பிறகு, உலக கருணை இயக்கம் இறுதியாக சுவிட்சர்லாந்தில் அதிகாரப்பூர்வ NGO ஆக அங்கீகரிக்கப்பட்டது.

அதன் மூலம் ஆண்டுதோறும் கருணையின் முக்கியத்துவம் உலக அளவில் பரப்பப்பட்டு வருகிறது.

First published:

Tags: Japan