Home /News /trend /

உலக மனிதநேய தினம் இன்று ! தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்

உலக மனிதநேய தினம் இன்று ! தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்

மனிதநேய தினம்

மனிதநேய தினம்

2003 ஆம் ஆண்டு,ஆகஸ்ட் மாதம் 19ம் நாள், இராக்,பாக்தாத் நகரில் வெடித்த குண்டில், மனித நேயப் பணிகளில் ஈடுபட்டிருந்த சேர்சியா வியரா டி மெல்லோ மற்றும் அக்குழுவில் மேலும் 20 பேரும் உயிரிழந்தனர்.

  • 2 minute read
  • Last Updated :
  • Chennai |
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். அந்த மனித நேயம் எல்லாம் என்றும் இருக்கிறதா என்று ஐயம் கொள்ளும் நிலையிலேயே உலகம் சென்றுகொண்டு இருக்கிறது. அந்த மனித நேயத்தை நினைவுறுத்தி, மேம்படுத்த உருவாக்கப்பட்ட தினம் இன்று.

உலக மனிதநேய தினம் 2022:

மக்கள் நெருக்கடியால் பாதிக்கப்படும் போதெல்லாம், அவர்களுக்கு உதவி செய்பவர்கள் உள்ளனர். உலகெங்கிலும் உள்ள மனிதாபிமான நோக்கங்களை மதிக்கவும், மனித நலனை மேம்படுத்தவும், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 அன்று உலக மனிதாபிமான தினம் அனுசரிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய கருப்பொருளுடன் இந்நாளைக் கொண்டாடுகிறது, இது நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட மக்களின் உயிர்வாழ்வு, நல்வாழ்வு, கண்ணியம், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்காக வாதிடும் மனிதாபிமான அமைப்புகளின் உறுப்பினர்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

உலக மனிதநேய தினம் துவங்கிய வரலாறு

பிரேசில் நாட்டைச் சேர்ந்த சேர்சியொ வியரா டி மெல்லோ , 37 வருடங்கள் ஐ.நா. சபையின் மனித நேயப் பணிகளில் தொண்டாற்றியவர். மிகச் கடினமான போர் சூழல்களில் சிக்கித் தவிக்கும் சாதாரண குடிமக்கள் படும் வேதனைகளை வெளிக் கொண்டு வந்தவர். அவர்களுக்கான நிவாரணங்களைக் கொண்டு சேர்ப்பதில் பெரும்பங்கு ஆற்றியவர்.

ஸ்மைல் ப்ளீஸ்... உலக புகைப்பட தினம் இன்று.....!

2003 ஆம் ஆண்டு,ஆகஸ்ட் மாதம் 19ம் நாள், இராக், பாக்தாத் நகரில் வெடித்த குண்டில், மனித நேயப் பணிகளில் ஈடுபட்டிருந்த சேர்சியா வியரா டி மெல்லோ மற்றும் அக்குழுவில் மேலும் 20 பேரும் உயிரிழந்தனர்.

டி மெல்லோ அவர்களின் நண்பர்களும் குடும்பத்தினரும் 2006 ஆம் ஆண்டு சேர்சியொ வியரா டி மெல்லோ ஃபௌண்டேஷனைத் துவங்கினர். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 ம் நாள் மனித நேய தினமாக அனுசரித்து, சொற்பொழிவுகள், மனிதநேயத் தொண்டுப்பணிகளின் தேவை, களநிலவரங்கள், மனிதநேயப் பணியில் ஈடுபடும் தொண்டர்களைக் கௌரவித்தல் முதலியவற்றை செய்து வந்தது.

2008 இல் ஸ்வீடன் நாட்டின் முன்மொழிதலுடன், ஐ.நா.பொது சபை, ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19 ம் நாள் உலக மனித நேய தினமாக அனுசரிக்கப்படும் என அறிவித்தது.WHD என்பது மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் (OCHA) பிரச்சார திட்டமாக செயல்பட்டு வருகிறது.

கால்நடைகளை விட குறைவான விலைக்கு குழந்தைகள் கடத்தப்பட்டு விற்பனை - நோபல் பரிசு பெற்ற சத்யார்த்தி வேதனை

இந்த ஆண்டின் தீம்:

உலகெங்கிலும் உள்ள மனிதாபிமான தேவைகள் மிக உயர்ந்த கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த ஆண்டு உலக மனிதாபிமான தினத்தின் (WHD) கருப்பொருள், "ஒரு குழந்தையை வளர்க்க ஒரு கிராமம் தேவை" என்ற பழமொழியை அடிப்படையாகக் கொண்டது.

கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்குத் தேவையான சுகாதாரம், தங்குமிடம், உணவு, பாதுகாப்பு மற்றும் தண்ணீர் போன்றவற்றை அவசர அடிப்படையில் வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. #ItTakesAVillage மற்றும் #worldhumanitarianday என்ற ஹேஷ்டேக்குகளுடன்தங்கள் பணிகளை சமூக ஊடகங்களில் பகிரலாம்.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Humanitarian, United Nation

அடுத்த செய்தி