ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

’உலகம் கைவிட்டுவிட்டது’ ஆப்கன் சிறுமியின் கண்ணீர் வீடியோ!

’உலகம் கைவிட்டுவிட்டது’ ஆப்கன் சிறுமியின் கண்ணீர் வீடியோ!

ஆப்கன் சிறுமியின் கண்ணீர் வீடியோ

ஆப்கன் சிறுமியின் கண்ணீர் வீடியோ

சிறுமி ஒருவர் வெளியிட்ட வீடியோவில், ‘உலகம் எங்களை கைவிட்டுவிட்டது, எங்கள் இறப்பை உலகம் தடுக்கவில்லை. மெதுவாக நாங்கள் வாழ்ந்தோம் என்ற வரலாறும் மறைந்துவிடும்’ என கண்ணீருடன் அவர் கூறும் வார்த்தைகள் நெஞ்சை உருகச்செய்கின்றன.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்க படைகள் ஆப்கானில் இருந்து வெளியேறியதால், வெகுண்டெழுந்த தாலிபான்கள், ஆறு நாட்களில் நாட்டை தங்கள் வசப்படுத்தியுள்ளனர். தலைநகர் காபூலைக் கைப்பற்றிய அவர்கள், அதிகாரப்பூர்வமாக ஆட்சிக் கட்டலில் அமர உள்ளனர். தாலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசை பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் அங்கீகரித்துவிட்டன. தாலிபான்களின் ஆட்சியைப் பொறுத்து அங்கீகரிப்பதாக ரஷ்யா தெரிவித்திருக்கும் கருத்து, அந்நாடும் ஏறக்குறைய தாலிபான்கள் ஆட்சியை அங்கீகரித்துவிட்டதாக கருதப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் வசிக்கும் பூர்வகுடி மக்கள் மற்றும் பிறநாட்டினரிடையே பெரும் பதற்றமும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. கும்பல் கும்பலாக அந்நாட்டை விட்டு வெறியேறி வருகின்றனர். வேறு நாடுகளுக்கு தஞ்சமடைய காபூல் விமான நிலையத்தில் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் இரவு பகலாக காத்துக்கிடக்கின்றனர். ஆப்கானிஸ்தானில் தங்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டதால், வேறு நாட்டுக்கு அகதிகளாக இடம்பெயர்வதைத் தவிர, வேறு வழியில்லை எனக் கூறி வருகின்றனர். இது தொடர்பாக நெஞ்சை உருக்கும் பல வீடியோக்கள் இணையத்தில் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிறுமி ஒருவர் வெளியிட்ட வீடியோவில், ‘உலகம் எங்களை கைவிட்டுவிட்டது, எங்கள் இறப்பை உலகம் தடுக்கவில்லை. மெதுவாக நாங்கள் வாழ்ந்தோம் என்ற வரலாறும் மறைந்துவிடும்’ என கண்ணீருடன் அவர் கூறும் வார்த்தைகள் நெஞ்சை உருகச்செய்கின்றன. இந்த வீடியோவை ஈரான் நாட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மற்றும் பெண் பத்திரிக்கையாளரான மஷி அலினிஜாத் வெளியிட்டுள்ளார். அதில், ஆப்கானிஸ்தான் பெண்களுக்காக என் இதயம் நொறுங்கியுள்ளது. அவர்களை காப்பாற்றுவதில் இருந்து உலகம் தோல்வியடைந்துவிட்டது. வரலாறு இதை எழுதும்’ என உருக்கமாக எழுதியுள்ளார்.

அவரின் இந்தப் பதிவு சில மணி நேரங்களில் சுமார் 12 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. பலரும் ஆப்கானில் ஏற்பட்டிருக்கும் இக்கட்டான சூழ்நிலைக்கு தங்களின் வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர். தாலிபான்கள் ஆட்சியை, இஸ்லாமியர்களே வெறுப்பதற்கு காரணம், பெண்களுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகளை அவர்கள் கடந்த காலங்களில் விதித்துள்ளனர். இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்களை குடும்பத்தினர் மற்றும் பெண்கள் முன்னிலையிலேயே கடுமையான தண்டனைகளுக்கு உட்படுத்துவார்கள். பெண்கள் பொதுவெளியில் தனியாக நடமாடக்கூடாது.

Also read... தாலிபான்.. பெண்களின் பாதுகாப்பு: உலக நாடுகளுக்கு மலாலா வேண்டுகோள்

பர்தா கட்டாயம் அணிந்திருக்க வேண்டும், பள்ளிக்குச் செல்ல அனுமதியில்லை போன்ற கட்டுப்பாடுகளை தாலிபான்கள் கடுமையாக அமல்படுத்தினர். தற்போதும் அவர்கள் ஆட்சிக்கட்டிலில் அமர உள்ளதால், மீண்டும் அந்த சட்டங்கள் நடைமுறைப்படுத்துவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக மக்களிடையே பெரும் அச்சம் எழுந்துள்ளது. இதனால், ஆப்கானிஸ்தானைவிட்டு லட்சக்கணக்கான மக்கள் வெளியேறுகின்றனர். இது குறித்து விளக்கம் கொடுத்துள்ள தாலிபான்கள், பெண்கள் பள்ளி மற்றும் வேலைக்குச் செல்ல அனுமதிக்கபடுவார்கள் என தற்போது கூறியுள்ளனர். ஐ.நா தகவலின்படி, கடந்த மே மாதம் வரை சுமார் 2,50,000 ஆப்கானிஸ்தானியர்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவித்துள்ளது.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Afghanistan, Taliban