Home /News /trend /

World Elephant day: யானைகளைப் பாதுகாத்துக் கொண்டாடும் தினம் இன்று...

World Elephant day: யானைகளைப் பாதுகாத்துக் கொண்டாடும் தினம் இன்று...

யானை

யானை

யானைகள் இயற்கை சூழலுக்கு இன்றியமையாதவை. ஏனெனில் அவை தனக்கு மட்டுமின்றி, மற்ற உயிரினங்களுக்கான சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பராமரிக்கவும் உதவுகின்றன.

  • News18 India
  • 2 minute read
  • Last Updated :
நமது சுற்றுச்சூழல் அமைப்பில் யானைகளின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் நோக்கத்துடன் உலக யானைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12 அன்று அனுசரிக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் எண்ணற்ற யானைகள் தந்தங்களுக்காக வேட்டையாட படுத்தல், வாழிட இழப்பு, ரயில் அல்லது மின்சார வேலிகள் ஆகியவற்றால் அழிந்து வருகின்றன. யானைகள் சந்திக்கும் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் அவற்றை அதன் இயற்கை சூழலிலேயே பாதுகாப்பதற்காகவும் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

உலக யானை தினம்: வரலாறு
2012 ஆம் ஆண்டில் இரண்டு கனடிய திரைப்பட தயாரிப்பாளர்களான பாட்ரிசியா சிம்ஸ் மற்றும் மைக்கேல் கிளார்க்கும், தாய்லாந்தை தளமாகக் கொண்ட யானை மறு அறிமுகம் அறக்கட்டளையுடன் இணைந்து முதன் முதலாக யானைகள் தினத்தைக் கொண்டாடினர்.

2012 ஆம் ஆண்டு முதல், உலக யானைகள் தினத்தை பாட்ரிசியா சிம்ஸ் தலைமை தாங்கி வருகிறார். உலக யானைகள் சங்கம் என்ற அமைப்பையும் உருவாக்கி நடத்தி வருகிறார். யானைகள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் மற்றும் சர்வதேச அளவில் அவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை அவரது அமைப்பு பரப்பி வருகிறது.

International youth day 2022: தலைமுறைகளுக்கு இடையிலான ஒற்றுமையைக் கொண்டாடும் சர்வதேச இளைஞர் தினம்.

யானைகள் இயற்கை சூழலுக்கு இன்றியமையாதவை. ஏனெனில் அவை தனக்கு மட்டுமின்றி, மற்ற உயிரினங்களுக்கான சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பராமரிக்கவும் உதவுகின்றன. யானைகளின் இழப்பு சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும். இது இயற்கையின் கட்டமைப்பை பலவீனப்படுத்தும்.

யானைகளால் எதிர்கொள்ளும்  அச்சுறுத்தல்கள் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது. நேஷனல் ஜியோகிராஃபிக் படி, கடந்த 75 ஆண்டுகளில் யானைகளின் எண்ணிக்கை 50 சதவீதம் குறைந்துள்ளது. 20,000 முதல் 40,000 ஆசிய யானைகள் மட்டுமே எஞ்சியுள்ளன.

அதே போல் இந்திய வனவியல் அறிக்கைபடி, தெற்கு கர்நாடகா பகுதியில் 2017 கணக்கெடுப்பின்படி, சுமார் 6,049 யானைகள் காடுகளில் வசிப்பதாகவும், யானைகள் அதிக அளவில் செறிவூட்டப்பட்டதாகவும் இருந்தது.

ஆனால், மனிதர்களின் காடுகள் ஆக்கிரமிப்பால், நாகரஹோளே, பந்திப்பூர், குடகு மற்றும் ஹாசன்-சக்லேஷ்பூர் பெல்ட்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மனித-யானை மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த 22 ஆண்டுகளில் ஹாசன் கோட்டத்தில் மட்டும் 74 வன விலங்குகளை இந்த நிறுவனம் பிடித்து மறுவாழ்வு அளித்துள்ளது. யானைகளின் இறப்பு விகிதமும் அதிகரித்துள்ளது.

ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களின் மாநில விலங்காக யானை உள்ளது. இந்த மாநிலங்களில் அதிகம் காணப்படும் யானைகளைப் பாதுகாக்கவே முயல்கிறது.

1992 ஆம் ஆண்டு இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தால் ‘ப்ராஜெக்ட் எலிஃபண்ட்’ தொடங்கப்பட்டது. இது மாநிலங்கள் தோறும் உள்ள ஆசிய யானைகளின் எண்ணிக்கையை பாதுகாக்கவும், வனவிலங்கு மேலாண்மை முயற்சிகளுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Elephant, Elephant rejuvenation camp

அடுத்த செய்தி