உலகின் மிகப் பெரிய முயல் திருடப்பட்டது... கண்டுபிடித்து தருவோருக்கு ₹1 லட்சம் பரிசு அறிவிப்பு

உலகின் மிகப் பெரிய முயல் திருடப்பட்டது... கண்டுபிடித்து தருவோருக்கு ₹1 லட்சம் பரிசு அறிவிப்பு

முயலை கண்டுபிடித்து தருவோருக்கு ₹1 லட்சம் பரிசு

இங்கிலாந்தில் அன்னெட் எட்வர்ட்ஸ் என்பவர் வளர்க்கும் முயல் உலகின் மிகப்பெரிய முயல். 2010 ம் ஆண்டு மிக நீண்ட காலம் வாழும் என பெயர்பெற்றது. கண்டுபிடித்து தருவோருக்கு 1 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  இங்கிலாந்தில் மிக நீண்ட காதுகள் கொண்டு சாதனை படைத்த 4 அடி முயல் திருடப்ப சம்பவம் நடந்துள்ளது.

  டேரியஸ் என பெயர் கொண்டு அழைக்கப்பட்ட அந்த முயல், உலகின் மிகப்பெரிய முயல்களில் ஒன்று. இந்த வார இறுதியில் காணாமல் போனது. இது குறித்து மெர்சியா காவல்துறை திங்களன்று வெளியிட்ட அறிக்கையில்,"வொர்செஸ்டர்ஷையரின் ஸ்டோல்டனில் உள்ள ஒரு வீட்டில் இருந்து விருது பெற்ற முயல் திருடப்பட்டதைத் தொடர்ந்து தகவல்களுக்காக நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம். முயல் 4 அடி அளவு கொண்டதாக இருப்பதால் மிகவும் தனித்துவமானது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  தனது பெரிய நீளத்திற்காக 2010 கின்னஸ் உலக சாதனை படைத்த டேரியஸ், சனிக்கிழமை இரவு மத்திய இங்கிலாந்தில் உள்ள ஒரு தோட்டத்தில் இருந்து திருடப்பட்டுள்ளது.இது குறித்து டேரியஸின் உரிமையாளர் அன்னெட் எட்வர்ட்ஸ் தனது இணையதளப் பக்கத்தில், முயலை கண்டு பிடித்து தருபவர்களுக்கு £1,000 (1,03,611.42 Indian Rupee ) வெகுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.  எனக்கு இது மிகவும் சோகமான நாள், டேரியஸுக்கு இப்போது இனப்பெருக்கம் செய்ய வயதாகிவிட்டது. எனவே தயவுசெய்து அவரை மீண்டும் என்னிடம் சேருங்கள் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.  விலங்கு பாதுகாப்பு சேவைகளின் விசாரணைத் தலைவரான செல்லப்பிராணி துப்பறியும் ஜேக்கப் லாயிட், என்.பி.சி நியூஸிடம் இது குறித்து தெரிவிக்கையில், இங்கு நாய் மற்றும் பிற விலங்கு திருட்டுகள் அதிகமாக உள்ளன. பணத்திற்காக இதனை செய்கின்றனர். யாரோ இந்த முயலின் மதிப்பை அறிந்து இவ்விதம் செய்துள்ளனர். இது ஒரு குற்றம். செல்லப்பிராணி திருட்டு என்பது ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் ஒரு கிரிமினல் குற்றமாகும்.அது எங்கு நடந்தாலும் அதை எதிர்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
  Published by:Sankaravadivoo G
  First published: