• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • ரஸ்க்கை காலால் மிதித்து, நாக்கால் நக்கி பாக்கெட் போடும் ஊழியர் - அதிர்ச்சி வீடியோ

ரஸ்க்கை காலால் மிதித்து, நாக்கால் நக்கி பாக்கெட் போடும் ஊழியர் - அதிர்ச்சி வீடியோ

அதிர்ச்சி வீடியோ

அதிர்ச்சி வீடியோ

ரஸ்க் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் ரஸ்குகளை பேக் செய்யும் போது ஊழியர் ஒருவர் தரையில் ஒரு தட்டில் வைக்கப்பட்டுள்ள ரஸ்களை தனது காலால் மிதித்து அதனை பாக்கெட்டில் அடைக்கும் போது நாக்கால் நக்கி பாக்கெட்டில் அடைத்தார். இதற்கு இணையத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

  • Share this:
    ரஸ்க்கை பாக்கெட் செய்யும் தொழிற்சாலையில் ஒன்றில் அதனை பாக்கெட்டில் அடைக்கும் போது அங்கு பணிபுரிந்த தொழிலாளர் ஒருவர் செய்த காரியம் இணையவாசிகளை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

    ரஸ்க் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் ரஸ்குகளை பேக் செய்யும் போது ஊழியர் ஒருவர் தரையில் ஒரு தட்டில் வைக்கப்பட்டுள்ள ரஸ்களை தனது காலால் மிதித்து அதனை பாக்கெட்டில் அடைக்கும் போது நாக்கால் நக்கி பாக்கெட்டில் அடைத்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. தொழிலாளி அதை வேண்டுமென்றே செய்தார் என்பது அந்த வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது.



    மக்கள் நம்பி வாங்கும் உணவுப்பொருளை இவ்விதம் செய்ததற்கு இவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என இணையவாசிகள் இடையே கண்டனக் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன.இதே போன்று கடந்த ஆகஸ்ட் மாதம் பானிபுரி கடை நடத்தும் நபர் வேலை செய்துகொண்டே சிறிய கப்பில் சிறுநீர் கழித்து அதை பானிபூரி தொழிலுக்கு பயன்படுத்தும் நீரில் கலக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.



    அந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். இருப்பினும், சாலையோர கடைகளில் உணவு உண்ண விரும்புபவர்கள் மத்தியில் இது பேரச்சத்தை ஏற்படுத்தியது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: