• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • பீட்சாவின் நடுவில் ஒரு சின்ன டேபிள் இருப்பது ஏன்? - வைரலான வீடியோ!

பீட்சாவின் நடுவில் ஒரு சின்ன டேபிள் இருப்பது ஏன்? - வைரலான வீடியோ!

பீட்சா

பீட்சா

பீட்சாவில் பயன்படுத்தும் சிறிய பிளாஸ்டிக் டேபிளை பீட்ஸா ஸ்டூல் அல்லது பீட்ஸா டேபிள் என்று சொல்வோம்; இதை பீட்ஸாவின் நடுவில் வைப்பதால் அது அந்த அட்டையின் மேல் பகுதியில் படாமல் இருக்கும்.

  • Share this:
உணவு பிரியர்களுக்கு மேற்கத்திய உணவுகளில் மிகவும் பிடித்தமான உணவாக கருதப்படுவது இந்த பீட்சா தான். இத்தாலி நாட்டை பூர்வீகமாக கொண்ட பீட்சா, உலகளவில் இன்றும் பிரபலமான உணவாக கருதப்படுகிறது. இதன் ருசியும், இதில் சேர்க்கப்படும் வண்ணமயமான டாப்பிங்ஸ் என்று சொல்லப்படும் காய்கறிகள், இறைச்சிகள் போன்றவை இதை சாப்பிட வேண்டும் என்கிற ஆர்வத்தை நமக்கு தூண்டுகிறது. பல வகையான பீட்சாக்கள் உலகளவில் இருந்தாலும் சீஸ் சேர்த்த பீட்சாக்கள் தான் அதிக பேருக்கு பிடித்தமானவை.

எந்த வகையான பீட்சா வாங்கினால் அதன் நடுவில் ஒரு சின்ன டேபிள் அல்லது நாற்காலியை வைத்து தருவது வழக்கம். இதை ஏன் தருகின்றனர் என பலருக்கும் இன்றளவும் தெரியாது. சிலர் இதற்கான காரணத்தை அறிந்திருக்க கூடும். இவ்வாறு பீட்சாவின் மீது சின்ன சின்ன பொருட்களை வைத்து தருவதற்கான வேடிக்கையான காரணத்தை இன்ஸ்டாகிராமில் ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

பீட்சாவில் பயன்படுத்தும் சிறிய பிளாஸ்டிக் டேபிளை பீட்சா ஸ்டூல் அல்லது பீட்சா டேபிள் என்று சொல்வோம்; இதை பீட்சாவின் நடுவில் வைப்பதால் அது அந்த அட்டையின் மேல் பகுதியில் படாமல் இருக்கும். இதனால் பீட்சா நாம் எதிர்பார்த்த படியே எந்தவித பாதிப்பும் இல்லாமல் அழகாக நம்மை வந்து சேரும். எனவே எந்தவித சேதமும் இல்லாமல் பீட்சாவை நாம் சாப்பிடுவதற்காகவே இந்த பீட்சா டேபிளை அதில் வைத்துள்ளனர்.

ஆனால், இதற்கான புதுவித அர்த்தத்தை கண்டறிந்து இன்ஸ்டாகிராம் யூசர் ஒருவர் காமெடி வீடியோவாக தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஷாசப் ஃபரூக்கி என்பவர் பீட்சாவை தனது நண்பருடன் சாப்பிடும் வீடியோ ஒன்றை பகிர்ந்து அதில், "இந்த வயதில் தான் இது எதற்கு பயன்படுகிறது என்று நான் தெரிந்து கொண்டேன்" என்கிற கேப்ஷனை சேர்த்து பதிவிட்டுள்ளார்.



 




View this post on Instagram





 

A post shared by Shazab (@shazabfarooqui)






மேலும் எவ்வாறு பீட்சா டேபிளை பயன்படுத்த வேண்டும் என்கிற வேடிக்கையான விஷயத்தையும் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். அதில், பீட்ஸாவை கட் செய்வதற்காக இந்த டேபிளை பயன்படுத்தும் போது தனது நண்பர் ஒருவர் அந்த பீட்சாவை அவரிடம் இருந்து எடுக்க பார்க்கிறார். அதை அறிந்த ஷாசப் உடனே அந்த பீட்ஸா டேபிளை பயன்படுத்தி மீதமுள்ள பீட்சாவின் மீது வைத்து அதை காப்பாற்றுகிறார். இருப்பினும் அவரது நண்பர் பாதி பீட்சா துண்டை அதிலிருந்து எடுத்து கொள்கிறார். "இந்த பீட்சா டேபிள் பீட்சாவை கட் செய்வது மட்டுமில்லாமல் அதை காக்கவும் பயன்படும் என்பது இன்று எனக்கு தெரிந்தது" என ஷாசப் கமெண்ட் செய்துள்ளார்.

Also read... வெளிநாட்டு வீதிகளில் நடமாடும் ரோபோக்கள்... உணவு டெலிவரிக்காக புதிய முயற்சி!

இந்த வேடிக்கையான வீடியோவை சுமார் 20 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். சிலர் இதை பார்த்துவிட்டு காமெடியான கமெண்ட்களையும் பதிவு செய்துள்ளனர். ஒருவர் "இந்த பீட்சா டேபிள் பொம்மைகள் வைப்பதற்காக இருக்கும்" என கமெண்ட் செய்துள்ளார். மற்றொரு யூசர் "இதை பல் குத்த பயன்படுத்த வேண்டும் என நான் நினைத்தேன்" என்று பதிவிட்டுள்ளார். எப்படி இருந்தாலும் இது போன்ற வேடிக்கையான வீடியோக்கள் நெட்டிசன்களுக்கு நன்றாக பொழுதுபோக்க உதவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: