ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

வெயிலில் சென்றால் நிறம் மாறும் வெள்ளை நிற ஆடை.. வைரலாகும் மேஜிக் டிரஸ் வீடியோ!

வெயிலில் சென்றால் நிறம் மாறும் வெள்ளை நிற ஆடை.. வைரலாகும் மேஜிக் டிரஸ் வீடியோ!

வைரலாகும் மேஜிக் டிரஸ் வீடியோ!

வைரலாகும் மேஜிக் டிரஸ் வீடியோ!

வெயிலில் சென்றவுடன் சூரிய ஒளியில் வெள்ளை நிறம் எவ்வளவு விரைவாக பிங்க் நிறமாக மாறியது என்பதைக் கண்ட நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இன்றைக்கு எந்த துறையை எடுத்தாலும் ஏதாவது புதுவிதமான முயற்சியை மேற்கொள்ளக்கூடிய சூழல் நிலவுகிறது. குறிப்பாக ஆடை கலாச்சாரங்கள் நாளுக்கு நாள் நம்ப முடியாத அளவிற்கு வேகமாக வளர்வதோடு பல வினோதமான டிசைன்களையும் நமக்காகத் தருகிறது. அதிலும் இன்றைக்குள்ள சோசியல் மீடியாக்களின் வளர்ச்சியினால் உலகில் எந்த மூலையில் வினோதமான சில விஷயங்கள் கண்ணில் பட்டாலும் போதும்.. நொடியில் நெட்டிசன்களிடம் வைரலாகி விடுகிறது.

  இந்த சூழலில் தான் Izzi என்ற இணையப் பயனர் ஒருவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது இணைய வாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்படி என்ன தான் அந்த வீடியோ மற்றும் புகைப்படத்தில் இருந்தது தெரியுமா? Izzi என்ற இணைய பயனாளி உடுத்திருந்த வெள்ளை நிற ஆடை ஒன்று வெயிலில் பார்க்கும் போது இளஞ்சிவப்பு நிறமாக மாறுகிறது.

  மேலும் வெயிலில் சென்றவுடன் சூரிய ஒளியில் வெள்ளை நிறம் எவ்வளவு விரைவாக பிங்க் நிறமாக மாறியது என்பதைக் கண்ட நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பகிரப்பட்டத்திலிருந்து இணையத்தில் வைரலாகிறது. இதுவரை25.1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ரீல்ஸை பார்த்துள்ளனர், மேலும் 2.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அதை லைக் செய்துள்ளனர்.

  Read More : படித்தவுடன் கொடுத்துவிடவும்... 84 ஆண்டுகளுக்கு பின் புத்தகத்தை திருப்பி கொடுத்த நபர்..

   ஆனாலும் வெள்ளை நிற ஆடை எப்படி மாறும்? என்ன தான் புதிய பேஷன் ஆடையில் உள்ளது என்பதைத் தெரிந்துக் கொள்வதற்கு நெட்டிசன்கள் பல கேள்விகளை முன் வைக்கின்றனர். இது எப்படி சாத்தியம்? என்று யாராவது விளக்க முடியுமா? என்று பயனர் ஒருவர் கேள்விக் கேட்டுள்ளார்.

  மற்றொரு பயனர் என்ன ஒரு வேடிக்கையாக உள்ளது என்றும், நான் பார்த்ததில் அருமையான விஷயம் இது தான் என்றும், ஃபோட்டோகிராமிக் சாயத்தைப் பயன்படுத்தி இருக்கலாம் என்பது போன்ற கருத்துக்களை இணையத்தில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் இன்னமும் இதற்கான விடைகள் சரியாக இணையத்தில் கிடைக்கவில்லை.

  பொதுவாக பேஷன் உலகில் மக்களை வியப்பில் ஆழ்த்தும் படியான ஆடைகளை வடிவமைக்க வேண்டும் என்றால், தெர்மோக்ரோமிக் மைகள் அல்லது வெப்பநிலை உணர்திறன் பொருள்கள் பயன்படுத்துகின்றனர். இவை பகல் அல்லது இரவு நேரங்களில்சூரிய ஒளி அல்லது நிழல் போன்ற ஒளி நிலைகளைப் பொறுத்து ஆடைகளின் நிறங்கள் மாறலாம் என கூறப்படுகிறது.
   
  View this post on Instagram

   

  A post shared by IZZI (@izzipoopi)  மேலும் வெப்பம்/கதிர்வீச்சு நீக்கப்பட்ட பிறகு சாயங்கள் அவற்றின் இயற்கையான நிறத்திற்குத் திரும்புகின்றன என்ற தகவலும் இணையத்தில் ஒருபுறம் பகிரப்படுகிறது. என்ன இருந்தாலும் இன்றைக்கு பேஷன் உடைகளை மிஞ்சுவதற்கு ஆளில்லை என்று தான் கூற வேண்டும்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Trending, Viral