இந்தியாவை ஆட்சி செய்யும் ஆணாதிக்கம்: பெண் சமத்துவத்தை அடைய நீண்ட காலம் தேவை - சமூக ஆர்வலர்கள் கருத்து!

கோப்புப் படம்

வழக்கமாக எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய யோகிதா, பெண்களுக்கு சமத்துவத்தை கற்பிப்பது மற்றும் அதன் முக்கியத்துவத்தை புரிய வைப்பது தான் ஒரு பெரிய சவாலாக இருக்கிறது.

  • Share this:
பல்வேறு துறைகளில் பெண்கள் செய்த சாதனைகள் மற்றும் முன்னேற்றங்களை குறிக்கும் விதமாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 26 (நேற்று) பெண்கள் சமத்துவ தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கும் மேலாக உலகளவில் பெண்கள் சமூகத்தில் தங்களுக்கு சமஉரிமை அளிக்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். பாலின அடிப்படையிலான பாகுபாட்டிற்கு எதிராக தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்து அனைத்து துறைகளிலும் சம வாய்ப்புகளுக்காக பெண்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் ஆட்சி கைமாறியுள்ளதால் பெண்களின் அடிப்படை உரிமைகள் பறிபோவதை பார்க்கும் நேரத்தில், இந்தியாவில் பெண்கள் நடத்தப்படும் விதம் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் உரிமைகளை பற்றி சிந்திப்பது அவசியமாகிறது. இதற்காக கற்பழிப்பிலிருந்து தப்பி பிழைப்பவர்களுக்கு ஆதரவை வழங்குவது மற்றும் அவர்களின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட சமூக பணிகளில் தங்களை ஈடுபடுத்தி கொண்டுள்ள இரு பெண்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதில் யோகிதா பாயனா (Yogita Bhayana) என்பவர் பாலியல் பலாத்காரத்தில் உயிர் பிழைத்தவர்களுக்கு ஆதரவளிக்கும் மற்றும் அவர்களுக்கு நீதி கிடைக்க உதவும் ஒரு அமைப்பின் தலைவராக உள்ளார். இவர் இதுவரை 200-க்கும் மேற்பட்ட வீடற்ற தங்குமிடங்களை நிறுவி ஆதரவற்ற பெண்களுக்கு உதவி செய்துள்ளார். பெண்களின் சமத்துவம் பற்றி யோகிதா பாயனா தன்னுடைய அனுபவபூர்வ கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார். இது பற்றி பேசிய யோகிதா, "பெண்களுக்கான சமத்துவம் என்பது ஒரு மிக நீண்ட கால கனவு. ஆனால் இந்த கனவை நாங்கள் எட்ட இந்த நாடு இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது என்று குறிப்பிட்டார்.

ஏனென்றால் இங்கே ஆணாதிக்க மனப்பான்மை எல்லாவற்றையும் ஆளுகிறது என்றார். அவர் வழக்கமாக எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய யோகிதா, பெண்களுக்கு சமத்துவத்தை கற்பிப்பது மற்றும் அதன் முக்கியத்துவத்தை புரிய வைப்பது தான் ஒரு பெரிய சவாலாக இருக்கிறது. பெண்கள் அதனுடன் வாழக் கற்றுக் கொண்டு சமத்துவமின்மையை அனுபவிக்கத் தொடங்குகிறார்கள். பெண்கள் தங்களுக்கு சமத்துவம் கொடுக்கப்படாத வாழ்க்கை முறையை ஏற்று கொண்டு அதனுடனே வாழக் கற்றுக் கொண்டு விடுகிறார்கள்.

Also read... ரூ.25 லட்சம் மதிப்புள்ள உணவின் மீது இருமிய பெண் - அடுத்து நடந்த பரிதாபம்?

ஒரு பெண் தனது வயிற்றில் சுமக்கும் பெண் கருவை கலைக்க, மற்றொரு பெண்ணை அவளை கட்டாயப்படுத்தும் பல சம்பவங்கள் நாட்டில் நடந்து கொண்டு தான் இருக்கிறன என்றார். பணியிடங்களில் பெண்களை பாதுகாக்க வலுவான சட்டம் இருந்தாலும், அவை சில பெண்களால் தவறாகப் பயன்படுத்தப்படும் சூழழும் இருக்கிறது. குடும்ப வன்முறை, பாலியல் துஷ்பிரயோகம் போன்றவற்றிலிருந்து பெண்களைப் பாதுகாக்க இருக்கும் சட்டங்களை தங்கள் சொந்த நலன்களுக்காக தவறாக சிலர் பயன்படுத்தி ஒட்டுமொத்த சமூகத்திற்கும் தீங்கு விளைவிப்பதாக இந்த சமூக ஆர்வலர் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்கள் மட்டுமின்றி நாட்டின் அனைத்து துறைகளிலும் அதிகமான பெண் பிரதிநிதிகளை சேர்க்க நடவடிக்கை தேவை என்றார்.

பணியிட உரிமைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் சமூக ஆர்வலரான சுதா ஜா (Sudha Jha) என்பவர் பேசுகையில், பெரும்பாலான பெண்களுக்கு அவர்களின் உரிமைகள் பற்றி எந்த விழிப்புணர்வும் இன்றி துன்புறுத்தலை எதிர்கொள்கிறார்கள் என்று கூறினார். இதனை தவிர்க்க சட்ட உதவி வழங்கும் மன்றங்களுடன் பெண்களை நாங்கள் இணைக்கும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். பல பெண்கள் காவல்நிலையம் செல்ல தயங்குவதால் அவர்களுக்கு பெண்கள் உதவி எண் 181 பற்றி தெரியப்படுத்துகிறோம் என்றார்.
Published by:Vinothini Aandisamy
First published: