முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / தன்னையே திருமணம் செய்துகொண்ட பெண்... ஒரே நாளில் விவகாரத்து

தன்னையே திருமணம் செய்துகொண்ட பெண்... ஒரே நாளில் விவகாரத்து

சுய திருமணம் செய்துகொண்ட பெண்

சுய திருமணம் செய்துகொண்ட பெண்

சமூக வலைத்தளத்தில் ஒரு பெண் தன்னையே திருமணம் செய்துகொண்டதாகத் திருமண ஆடையில் புகைப்படங்களுடன் பதிவிட்டார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பெண்கள் தன்னை தனே திருமணம் செய்து கொள்வது தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகிவருகிறது. அப்படி சோஃபி மௌரே என்ற 25 வயதான நபர் தன்னையே திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் புகைப் படத்துடன் பதிவிட்டார்.

அதனைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் இதற்கு மேல் என்னால் இதைத் தொடர முடியாது என்று கூறியுள்ளார். அவரின் இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் நகைச்சுவையான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

அவர் திருமணம் குறித்த பதிவில், தன்னை திருமணம் செய்துகொள்வதற்காகத் திருமண ஆடை மற்றும் கேக் போன்றவற்றைத் தானே தயார் செய்தாக கூறியுள்ளார். மேலும் திருமண உடையில் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் தன்னால் இந்த திருமணத்தைத் தொடர முடியாது என்று கூறி பதிவிட்டுள்ளார். இனி சுயதிருமணம் வேண்டாம் என்றும் விவகாரத்து எப்படி பெறுவது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அவரின் இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் வேடிக்கையாகப் பதிலளித்து வருகின்றனர்.

Also Read : தலை நிறைய ஷேவிங் கீரீம்... டென்னிஸ் பந்தை கேட்ச் பிடித்து விநோதமாக கின்னஸ் சாதனைப் படைத்த நபர்...

சிலர் வேண்டும் என்றால் வக்கீல் வைத்து விவகாரத்து எடுத்துக்கொள்ளுங்கள். உன்னையே உன்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லையா என்றெல்லாம் நகைச்சுவையாகக் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

First published:

Tags: Twitter, Viral