ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

கோயிலுக்குள் குத்தாட்டம்.. ரீல்ஸுக்காக டான்ஸ்! வீடியோ எடுத்த பெண்கள் மீது பாய்ந்த நடவடிக்கை!

கோயிலுக்குள் குத்தாட்டம்.. ரீல்ஸுக்காக டான்ஸ்! வீடியோ எடுத்த பெண்கள் மீது பாய்ந்த நடவடிக்கை!

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

உஜ்ஜைன் கோவிலில் நின்று கொண்டு சினிமா பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ வைரலானது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madhya Pradesh, India

போன் வந்ததில் இருந்தே எங்கே போனாலும் போட்டோ, எங்கே இருந்தாலும் அந்த சூழலில் ஒரு வீடியோ என்று மனிதர்களின் அலப்பறைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. செல்போனால் சில உயிரிழப்புகள் கூட ஏற்படுகின்றன. இந்த நிலையில் ரீல்ஸ் மோகத்தில் இரு பெண்கள் தற்போது சிக்கலில் மாட்டியுள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள மஹாகாலேஷ்வர் கோயில் வளாகத்தில்  பாதுகாப்பு படையில் உள்ள பெண்கள் இருவர் பாலிவுட் பாடலுக்கு நடனமாடும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

"ஜீனே கே பஹானே லகோன்" மற்றும் "பியார் ப்யார் கர்தே கர்தே" போன்ற பாலிவுட் ஹிட் பாடல்களுக்கு கருப்பு உடை அணிந்த இரண்டு பெண்கள்  நடனமாடியுள்ளனர்.

இதையும் படிங்க: “காணாமல் போன 1 டாலர் எங்கே? மண்டையை குழப்பும் கணக்கு..முடிஞ்சா விடை சொல்லுங்க..!

கோவில்கள் புனித தலமாக கருதப்படுகிறது. அதற்கு இழுக்கு விளைவிக்கும் எந்த செயலும் அனுமதிக்கப்படாது. அதேபோல் சில கோவில்களில் போன் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உஜ்ஜைன் கோவிலில் நின்று கொண்டு சினிமா பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.

உஜ்ஜைன் ADM சந்தோஷ் தாகூர் மற்றும் மகாகல் கோவில் நிர்வாகி சந்தீப் சோனி இந்த விஷயத்தை கவனத்தில் கொண்டு, அந்த இரண்டு பெண் பாதுகாப்பு பணியாளர்களை உடனடியாக பணியிலிருந்து நீக்கினர்.

உஜ்ஜைன் ஏ.டி.எம் சந்தோஷ் தாகூர் கூறுகையில், மகாகால் கோயிலில் பணிபுரிபவர்கள் நடன வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டது குறித்து ஊடகங்களில் செய்திகள் மூலம் தெரியப்படுத்தப்பட்டதாகவும், இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

First published:

Tags: Madhya pradesh, Ujjain S12p22, Viral Video