பண்டிகை காலத்தை முன்னிட்டு முன்னணி இ-காமர்ஸ் பிளாட்ஃபார்ம்கள் அனைத்திலும் அதிரடி ஆஃபர் சேல் நடைபெற்று வருகிறது. வீட்டு உபயோக பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் என பலவற்றுக்கும் சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
வருடத்திற்கு ஒருமுறை ஆன்லைனில் நடைபெறும் மிகப்பெரிய விற்பனை திருவிழா என்பதால் யூஸர்கள் போட்டி போட்டு கொண்டு பொருட்களை வாங்கி குவிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அமேசானில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் என்ற பெயரில் விற்பனை திருவிழா நடைபெற்று வரும் நிலையில், ஃபிளிப்கார்ட்டில் பிக் பில்லியன் டேஸ் விற்பனை நடைபெற்று வருகிறது.
சமீபத்தில், உத்தரபிரதேசத்தின் கௌசாம்பி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பிக் பில்லியன் டே விற்பனையின் போது ஃபிளிப்கார்ட்டில் கைக்கடிகாரத்தை ஆர்டர் செய்துள்ளார், ஆனால் அந்த கடிகாரத்திற்கு பதிலாக அவருக்கு மாட்டு சாண கேக்குகள் வந்துள்ளது. இதனால் அவர் அதிர்ச்சியடந்துள்ளார்.பின்னர் டெலிவரி பாயை அழைத்து விவரம் கூறி பார்சலை கொடுத்த பின்னர் அவர் தவறை ஒப்புக்கொண்டு பணத்தை திருப்பிக்கொடுத்துள்ளார்.
முன்னதாக பீகாரில் ஒரு நபர் ட்ரோன் கேமராவை ஆர்டர் செய்ததாகவும், அதற்கு பதிலாக ஒரு கிலோ உருளைக்கிழங்கு கிடைத்ததாகவும் கூறினார். அது தொடர்பாக வைரலான வீடியோவில், ஒன் டைம் பாஸ்வேர்டை (OTP) வழங்குவதற்கு முன், ஓபன் பாக்ஸ் டெலிவரி என்ற நடைமுறைப்படி அந்த பாக்ஸை திறக்குமாறு டெலிவரி நிர்வாகியிடம் அந்த நபர் கேட்கிறார்.நிர்வாகி பெட்டியைத் திறந்தபோது அதில் உருளைக்கிழங்குகள் இருந்துள்ளன. மேலும் அந்த வீடியோவிலேயே ஆன்லைன் சில்லறை விற்பனையாளர் மோசடி செய்ததாக நிர்வாகி ஒப்புக்கொண்டார்.
View this post on Instagram
அதேபோல் ஒருவர் ஆர்டர் செய்த லேப்டாப்பிற்குப் பதிலாக டிடர்ஜென்ட் பார்களைப் பெற்ற மற்றொரு சம்பவம் இணையத்தில் வெளிவந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.