• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • பலூன்களுடன் வீட்டிற்குள் பறந்த குழந்தை -வைரலாகும் வீடியோ

பலூன்களுடன் வீட்டிற்குள் பறந்த குழந்தை -வைரலாகும் வீடியோ

பலூனுடன் பறந்த குழந்தை

பலூனுடன் பறந்த குழந்தை

ஒரு குழந்தையின் முதுகில் பலூன்கள் கட்டப்பட்டதால் அந்த குழந்தை 'பறப்பது' போன்ற ஒரு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

  • Share this:
    ட்விட்டரில் 'மேக் அண்ட் பெக்கி காமெடி' என்ற பக்கத்தில், ஷேர் செய்யப்பட்டுள்ள அந்த வீடியோவில், ஒரு வீட்டில் பெண் ஒருவர் வருகிறார் , அப்போது ஒரு அறையின் கதவு பகுதியில் பலூன்கள் கட்டப்பட்டவாறு குழந்தை மேலே பறப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறார். உடனடியாக அனைவரையும் அழைக்க குரல் கொடுத்தவாறே அந்த குழந்தையின் அருகில் ஓடுகிறார். அப்போது குழந்தை காற்றில் போல இருக்கிறது. இது ஒரு ஆபத்தான சூழ்நிலையாக மாறக்கூடும், இதனால் குழந்தை கீழே விழுந்துவிடக்கூடாது என்பதற்காக அந்த குழந்தையை மீட்க விரைந்து ஓடுகிறார். "ஐயோ கடவுளே! எமர்சன் உடனடியாக இங்கு வா", அவளை சீக்கிரம் பிடிக்க வேண்டும் என கூறியவாறே அந்த பெண் ஓடுகிறார்.

    இருப்பினும், அந்த வீடியோவில் ஒரு திருப்பம் உள்ளது! அவள் குழந்தைக்கு அருகே சென்று பிடிக்க செல்கையில் , குழந்தைக்குப் பின்னால் இரண்டு கைகள் காணப்படுகின்றன. ஆம், ஒருவர் குழந்தைக்கு பின்னால் நின்று குழந்தையை பறக்குமாறு செய்துள்ளார். இறுதியில், அது ஒரு குறும்புத்தனமாக வீடியோ என்பது தெரியவந்தது. எமர்சன் என்பவர் தான் குழந்தையை காற்றில் பறப்பது போல தூக்கிக்கொண்டு பின்னால் நின்று கொண்டிருந்தார். குழந்தையை எமர்சன் பிடித்திருப்பதை பார்த்த பின்னர் தான் அந்த பெண் நிம்மதியடைந்தார்.



    அந்த குழந்தையின் தந்தையான எமர்சன் வேடிக்கையாக இருப்பதற்காக இதனை செய்துள்ளார். ட்விட்டரில் 'குழந்தை பறக்கிறது' என்ற தலைப்புடன் 'மேக் அண்ட் பெக்கி காமெடி' என்ற பக்கத்தில் இந்த வீடியோ கிளிப் ஷேர் செய்யப்பட்டிருந்தது.



    நகைச்சுவையான இந்த வீடியோ ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் இந்த டிவீட்டை 45,300 பேர் ரீட்வீட் செய்துள்ளனர். 5.3 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ள இந்த வீடியோவை 1,78,400 பேர் லைக் செய்துள்ளனர்.


    மேலும் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அந்த பெண் உண்மையில் பயந்துவிட்டார் என கமெண்ட் செய்திருந்தனர். அந்த பெண் ஏமாந்தாலும், வீடியோ குறும்புத்தமாக உள்ளது என ஒருவர் குறிப்பிட்டுள்ளார். குழந்தை காற்றில் பறக்கவில்லை என்பது முன்னரே தெரிந்தது என்றும் சிலர் கூறினர். இருப்பினும், அது ஒரு பொம்மைதான் என்றும் அது குழந்தை அல்ல என்றும் ஒரு யூசர் கமெண்ட் செய்திருந்தார். மேலும் நெட்டிசன்களில் சிலர் அந்த குழந்தையின் தந்தையை 'கவனக்குறைவாக' இருப்பதற்காக 'விமர்சித்தனர்'.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: