ஆத்தி... இது சிங்கப்பெண்ணாச்சே...இரு கைகளால் சிலம்பம் சுற்றும் தமிழச்சி!

ஆத்தி... இது சிங்கப்பெண்ணாச்சே...இரு கைகளால் சிலம்பம் சுற்றும் தமிழச்சி!
ஆத்தி! இது சிங்கப்பெண்ணாச்சே...ட்விட்டரில் குவியும் வாழ்த்து!
  • Share this:
இரண்டு கைகளால் சிலம்பம் சுற்றும் பெண் ஒருவர் இணையத்தில் வாழ்த்து பெற்று வருகின்றார்.

பொங்கல் விளையாட்டு போட்டிகளாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிலம்பம், கபடி , வழுக்கு மரம் ஏறுதல் , உறியடித்தல், இளவட்ட கல் தூக்குதல் , ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகள் வைக்கப்பட்டன. சில இடங்களில் வித்யாசமாக மனைவியை தூக்கி கொண்டு ஓடும் கணவர் போட்டிகளும் நடத்தப்பட்டது.

இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். இந்நிலையில் கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் வைத்து பொங்கல் விழா சிறப்பாக கொண்டப்பட்டது.


இதனிடையே பொங்கல் சிறப்பாக முடிந்தாலும் பொங்கல் அன்று நடத்தப்பட்ட ஜல்லிகட்டு போட்டியின் சுவாரசிய வீடியோக்கள் இன்றளவும் இணையத்தில் வளம் வந்தவாறு உள்ளன.

அதில் கல்லூரி மாணவி ஒருவர் தனது இரு கைகளால் சிலம்பம் சுற்றும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஆத்தி! இது சிங்கப்பெண்ணாச்சே...என்ற படி நெட்டிசன்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

First published: January 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading