ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ஹாஸ்பிடல் ரூமில் தனது பட்டப்படிப்பை பெற்ற பெண்.! கல்லூரி முதல்வருக்கு குவியும் பாராட்டு

ஹாஸ்பிடல் ரூமில் தனது பட்டப்படிப்பை பெற்ற பெண்.! கல்லூரி முதல்வருக்கு குவியும் பாராட்டு

ஜடா சைல்ஸ் குழந்தையுடன் பட்டமளிப்பு விழாவில்!

ஜடா சைல்ஸ் குழந்தையுடன் பட்டமளிப்பு விழாவில்!

Trending Graduation | நானே நேரில் வந்து உன் கையில் நீ படித்து முடித்துள்ள படிப்பிற்கான பட்டத்தை வழங்குகிறேன் என்று கூறி ஜடா சைல்ஸ் அட்மிட் செய்யப்பட்டிருந்த ரூமிற்கே வந்து கையில் பட்டத்தை வழங்கி பாராட்டு தெரிவித்து விட்டார் கிம்ப்ரோ.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

கல்லூரி படிப்பை முடிக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் மற்றும் அவர்களது பெற்றோருக்கும் மறக்க முடியாத நாளாக அமைவது பட்டமளிப்பு விழா தான். மூன்று வருடமோ அல்லது நான்கு வருடமோ கஷ்டப்பட்டு படித்து சாதித்த பெருமையை பட்டமளிப்பு விழாவில் படித்த படிப்பிற்கான பட்டத்தை கைகளில் வாங்கும் போது தான் மாணவர்கள் உணர்வார்கள்.

குறிப்பாக தாங்கள் பட்டம் வாங்குவதை பார்த்து பெற்றோர்களின் முகத்தில் தெரியும் பூரிப்பே மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நாளை சிறப்பானதாக மாற்றும். விழா மேடையில் ஏறி, தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் பட்டம் பெறுவதை எந்த ஒரு கல்லூரி மாணவராலும் மறக்க முடியாது.

இருப்பினும், ஒரு அமெரிக்கப் பெண்ணுக்கு, அவரது பட்டமளிப்பு விழா மருத்துவமனை ரூமில் நடந்துள்ளது, எனினும் இந்த தருணம் மிகுந்த சிறப்பு வாய்ந்தது. ஏனென்றால் இதற்கு பின்னால் உள்ள காரணம் உண்மையிலேயே இனிமையானது மற்றும் இதயத்தை கவர்ந்தது. லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸை சேர்ந்த (Jada Sayles) என்ற பெண் டிலார்ட் பல்கலைக்கழகத்தில் 4 வருடங்கள் படித்து முடித்து உள்ளார். கடந்த மே 14-ஆம் தேதி பல்கலைகழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இவர் பங்கேற்றிருக்க வேண்டும்.

Read More : உங்கள் மூளைக்கு வேலை கொடுக்கும் படம்! இதை உற்று பார்த்து பதில் சொன்னால் நீங்கள் கில்லாடி தான்

ஆனால் சரியாக பட்டமளிப்பு விழாவிற்கு ஒரு நாள் முன்னதாக அதாவது மே 13-ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஜடா சைல்ஸை மருத்துவமனையில் அட்மிட் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஏனென்றால் கர்ப்பிணியாக இருந்த ஜடா சைல்ஸ்-க்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பட்டமளிப்பு விழாவிற்கு தன்னால் வர இயலாது என்பதை கல்லூரித் தலைவர் வால்டர் எம். கிம்ப்ரோவுக்கு மெசேஜ் மூலம் தெரிவித்தார். இதனிடையே பிரசவ வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜடா சைல்ஸிற்கு நல்லபடியாக குழந்தையும் பிறந்தது.

இதன் பிறகு நடந்தது தான் உண்மையிலேயே நம் அனைவர் மனதையும் கவர கூடியது. கல்லூரிக்கு நேரில் வர இயலாத ஜடா சைல்ஸிற்காக அவரது பட்டமளிப்பு விழாவை அவரது மருத்துவமனை அறையிலேயே நடத்த ஏற்பாடு செய்தார் கல்லூரித் தலைவர் கிம்ப்ரோ. ஆம், நீ பட்டமளிப்பு விழாவிற்கு வர முடியாவிட்டால் என்ன.! நானே நேரில் வந்து உன் கையில் நீ படித்து முடித்துள்ள படிப்பிற்கான பட்டத்தை வழங்குகிறேன் என்று கூறி ஜடா சைல்ஸ் அட்மிட் செய்யப்பட்டிருந்த ரூமிற்கே வந்து கையில் பட்டத்தை வழங்கி பாராட்டு தெரிவித்து விட்டார் கிம்ப்ரோ.

ஜடா சைல்ஸ் தனது பட்டமளிப்பு விழாவின் புகைப்படங்களையும், பிறந்த குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மே 16 அன்று வெளியிடப்பட்ட ட்வீட் இதுவரை 1.49 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்றுள்ளது. "விழா மேடை முழுவதும் நடந்து நான் பட்டம் பெற போகிறேன் என்று நினைத்தேன், அதற்குப் பதிலாக என் குழந்தையைப் பெற்றேன். எனது பட்டப்படிப்பு மற்றும் பட்டத்தை என்னிடம் கொண்டு வந்து சேர்த்ததற்காக பல்கலைகழகம் மற்றும் கல்லூரி முதல்வருக்கு பெரிய நன்றிகள்" என்று ட்விட் செய்துள்ளார் ஜடா சைல்ஸ்.

டில்லார்ட் பல்கலைக்கழகத்தின் தலைவரான வால்டர் எம். கிம்ப்ரோவும் இந்த பட்டமளிப்பு விழாவின் வீடியோக்களை ஷேர் செய்து உள்ளார். தனது மாணவருக்காக மருத்துவமனைக்கே சென்று பட்டமளிப்பு விழாவை நடத்திய கிம்ப்ரோவுக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

First published:

Tags: Trending, Viral