ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தைப் பற்றி நம்மில் பலர் அறிந்திருந்தாலும், பெண்கள் சமத்துவ தினம் என்று ஒன்று இருப்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை.
ஆம் இன்று தான் பெண்கள் சமத்துவத்திற்கான நாள். அமெரிக்காவில் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கிய தினத்தின் நினைவாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
பெண்களின் சமத்துவம் என்பது கல்வி, வேலை, ஊதியம், வாய்ப்புகள், வாக்களிக்கும் உரிமை, அரசியல் என்று அனைத்திலும் ஆண்களுக்கு சமமாக பெண்களையும் நடத்துவதாகும். சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்பது போல் எல்லா வாய்ப்புகளிலும் சம உரிமை வேண்டும் என்று பெண்கள் தங்களுக்காக போராடத் தொடங்கினர்.
தண்ணீரில் மிதக்கும் ஓவியம் பற்றித் தெரியுமா?.. ஜல் சஞ்சி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்
1900 களின் முற்பகுதியில், பின்லாந்து, நியூசிலாந்து மற்றும் யுனைடெட் கிங்டம் உள்ளிட்ட பல நாடுகள் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை சட்டப்பூர்வமாக்கின. இந்த இயக்கம் உலகம் முழுவதும் தொடர்ந்து பரவியது. அமெரிக்காவில், அரசியலமைப்பின் 19 வது திருத்தம் முதன்முதலில் 1878 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அது ஒப்புதல் அளிக்கப்படாமல் கிடப்பில் வீசப்பட்டது.
முதலாம் உலகப் போரில் பெண்களின் ஈடுபாடு அவர்களின் பங்களிப்புகள் பெண்களின் வாக்குரிமை பெற போதுமான ஆதரவைப் பெற்றது. இறுதியாக அமெரிக்க அரசியலமைப்பின் பத்தொன்பதாவது திருத்தம் ஜூன் 4, 1919 அன்று அமெரிக்க காங்கிரஸால் நிறைவேற்றப்பட்டது. ஆகஸ்ட் 18, 1920 அன்று அங்கீகரிக்கப்பட்டது.ஆகஸ்ட் 26,1920 அன்று அனைத்து அமெரிக்க பெண்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்கிறது.
ஆகஸ்ட் 26, 1970 அன்று பத்தொன்பதாம் திருத்தத்தின் 50 வது ஆண்டு நிறைவின் போது, பெண்களுக்கான தேசிய அமைப்பு (NOW) சம உரிமைக்கு ஆதரவாக பெண்கள் நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு "சமத்துவத்திற்கான வேலைநிறுத்தத்திற்கு" அழைப்பு விடுத்தது.
சென்னையில் 367 பள்ளிகளில் விளையாட்டு மைதானம் இல்லை: முதன்மைக் கல்வி அதிகாரி அறிக்கை
37 வது அமெரிக்க ஜனாதிபதியான ரிச்சர்ட் நிக்சன், இந்த தேதியை அதிகாரப்பூர்வமாக பெண்கள் உரிமைகள் தினமாக அறிவித்தார். அப்போதிருந்து, ஒவ்வொரு அமெரிக்க ஜனாதிபதியும் ஆகஸ்ட் 26 ஐ பெண்கள் சமத்துவ தினமாக அறிவிக்கும் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். இந்த ஆண்டு 102 ஆம் நிறைவைக் கொண்டாடுகிறது.
இந்தியாவில் பெண்கள் சமத்துவ தினம்:
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் அமெரிக்க சட்டத்தில் இருந்து மருவி எழுதப்பட்டதால் 1947 இல் இருந்தே பெண்களுக்கு ஓட்டுரிமையை வழங்கியது. 1950 இல் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று நிறுவப்பட்டது.
இன்றைய கால கட்டத்தில் இந்தியாவில் பெண்கள் பெரிய அளவில் வெளியே வந்து தங்களுக்கான வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். இருந்தபோதும் இன்னும் சில இடங்களில் இன்னும் சமவுரிமை வேண்டி போராடி வருகின்றனர். அதை ஊக்குவித்து சமூகத்தில் சமநிலை கொணர இந்தியாவிலும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gender equality, United States of America, Women Empower