முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / இப்படி கூட நடக்குமா! 2 கர்ப்பப்பை கொண்ட பெண்ணிற்கு ஒரே நேரத்தில் இரண்டிலும் கரு உருவான சம்பவம்..

இப்படி கூட நடக்குமா! 2 கர்ப்பப்பை கொண்ட பெண்ணிற்கு ஒரே நேரத்தில் இரண்டிலும் கரு உருவான சம்பவம்..

காட்சி படம்

காட்சி படம்

Women Becomes Pregnant In Two Uteruses : 2 கர்ப்பப்பையிலும் ஒரே நேரத்தில் கர்ப்பமான பெண்ணிற்கு 22 வாரங்களிலேயே குழந்தை பிறந்துள்ளது.

  • Trending Desk
  • 1-MIN READ
  • Last Updated :

ஒரு குழந்தையை பெற்றெடுப்பது என்பது நாம் நினைப்பதையும் விடவும் மிக கடினமான ஒன்றாகும். சாதாரண முறையில் கருத்தரிக்கும் பெண்களுக்கே இந்த நிலை என்றால், கருத்தரிப்பில் பல்வேறு சிரமங்கள் கொண்ட பெண்களுக்கு இது இன்னமும் சவாலான ஒன்றாக இருந்து விடும். இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு தான் அமெரிக்காவை சேர்ந்த 24 வயதான மேகன் பிப்ஸ் என்கிற பெண்மணிக்கு நடந்துள்ளது.

இவர் பிறப்பிலேயே 2 கர்ப்பப்பையுடன் பிறந்துள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரண்டு கர்ப்பப்பையிலும் கரு உருவாகி உள்ளது. இவருக்கு இரட்டை குழந்தைகள் உருவாகி உள்ளதை நினைத்து சந்தோஷப்பட்டுள்ளார். ஆனால், இரு கர்ப்பப்பைகளிலும் ஒரே நேரத்தில் இரு கரு உருவானதை மருத்துவர்கள் கண்டறிந்து மேகனுக்கு தெரிவித்துள்ளனர். இது போன்ற அசாதாரணமான கருத்தரிப்பு நிகழ்வுகள் தாய் மற்றும் குழந்தையின் உயிருக்கே ஆபத்தாக முடிந்ததுண்டு.

அந்த வகையில் மேகனுக்கு 22 வாரங்களிலேயே பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனே நெப்ராஸ்கா மருத்துவமனையில் இவரை அனுமதித்துள்ளனர். அவர் சற்றும் எதிர்பாராத விதமாக குறை மாதத்தில் குழந்தை டெலிவரி ஆகியுள்ளது. அவற்றில் ஒரு குழந்தை பிறக்கும்போதே இறந்து விட்டது. இன்னொரு குழந்தை உயிருடன் இருந்தது. இருப்பினும் அதற்கு கூடுதல் கவனம் தேவைப்பட்டுள்ளது. இந்த இரண்டு குழந்தைகளையும் வெளியில் எடுக்கும்போது 1 கிலோவிற்கும் குறைவான எடையை கொண்டிருந்தனர்.

also read : KFC சிக்கனில் கோழியின் தலை! இன்ஸ்டாகிராமில் அதிர்ச்சி பதிவு வெளியிட்ட பெண்!

இந்த குழந்தைக்கு ரீஸ் என்று பெயர் சூட்டியுள்ளனர். சில வாரங்கள் குழந்தைகள் பாதுகாப்பு அறையில் இந்த குழந்தை இருந்தது. அதற்கு பின்னர் தான் தாயுடன் சேர்க்கப்பட்டது. இது போன்று நிகழ்வும் என்று மேகன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர் ஆரம்பத்தில் தனது வலப்பக்கத்தில் உள்ள கர்ப்பப்பை செயல்படாமல் உள்ளது என்று நினைத்துள்ளார். ஆனால் கருத்தரித்த சில வாரங்களிலேயே அவரது கர்ப்பப்பைக்குள் ஏதோ நடக்கிறது என்று உணர்கிறார். இதை அறிந்து கொண்டு உடனே மருத்துவரிடம் சென்றுள்ளார். அப்போது தான் இரு கர்ப்பபையில் தனி தனியாக கருக்கள் வளர்க்கிறது என்று அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

also read : காதலுக்கு எல்லையில்லை : ஆந்திராவை சேர்ந்த இளைஞனை திருமணம் செய்த துருக்கி பெண்..

பெண்ணின் உடலுக்குள் இது போன்று 2 கர்ப்பப்பைகள் இருப்பது மிகவும் அபூர்வம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதை மருத்துவ ரீதியாக 'யூடிரைன் டிடெல்பிஸ்" (uterine didelphys) என்று அழைக்கின்றனர். 50 மில்லியன் பெண்களில் ஒருவருக்கு தான் இது போன்று ஒரே நேரத்தில் இரு கர்ப்பப்பையிலும் கரு உண்டாகுமாம்.

also read ; திருமணத்தின் போது தூங்கி விழுந்த மணப்பெண் - வைரலான வீடியோ!

உயிருடன் பிறந்த அந்த ஒரு குழந்தையும் இனி நல்ல முறையில் உயிர் பிழைத்து வாழ்வது சற்று கடினமான ஒன்று என்று ஆரம்பத்தில் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் பல்வேறு பாதுகாப்பு முறைகளை மேற்கொண்டு வந்ததால் அந்த குழந்தை தற்போது நலமாக உள்ளார். இருப்பினும் சில ஆரோக்கிய குறைபாடுகள் அந்த குழந்தைக்கு உள்ளது. எனவே இனி வரும் காலங்களிலும் குழந்தையை மிகவும் பாதுகாப்பாக பார்த்துக்கொண்டால் மட்டுமே நலமாக இருப்பார் என்று கூறியுள்ளனர்.

First published:

Tags: Viral