பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட விபரீதம் - வைரலாகும் புகைப்படங்கள்!

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட விபரீதம்

அடுக்கு கேக் தயார் செய்யும் போது, மரத்துண்டு, உலோகம் அல்லது பிளாஸ்டிக் குச்சிகளை பயன்படுத்துகின்றனர்.

  • Share this:
சமீப காலமாக பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது கேக்கை முகத்தில் பூசுவது வித்தியாசமான பாரம்பரியமாகிவிட்டது. இதில் கேக் வீணாகிறது, அழகான கேக் முற்றிலும் அலங்கோலமாகுவது மட்டுமின்ற இந்த வேடிக்கையான செயல்களால் பிறந்தநாள் கொண்டாட்டமானது மிகவும் ஆபத்தானதாக மாறுகிறது.

சமீபத்தில், சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நடந்த விபரீதமான விஷயம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த புகைப்படத்தில் ஒரு பெண்ணின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது கேக்கில் அவரது முகத்தை வைத்ததால் பிரச்னை ஏற்பட்டிருப்பது தெரிகிறது. புகைப்படத்தில் அவர் கண்ணுக்கு மேலே ஒரு காயம் ஏற்பட்டிருப்பதைக் காணலாம். பேஸ்புக்கில் இந்த சம்பவம் குறித்த மூன்று புகைப்படங்களை அன்டோனியோ லாகிங்கர் என்பவர் ஷேர் செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த புகைப்படங்களில் முதலில், பிறந்தநாளன்று வெட்டிய கேக்கில் ஒரு மரக்குச்சி ஒன்று நீண்டு கொண்டிருப்பதைக் காணலாம். இரண்டாவதாக, ஒரு மரக்குச்சி பெண்ணின் கண் இமைகளுக்கு சற்று மேலே உள்ளது. மூன்றாவது புகைப்படத்தில், அந்த பெண்ணிற்கு ஏற்பட்ட காயத்தின் மீது கட்டு போடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தனது பிறந்தநாளைக் கொண்டாட கேக் வெட்டியபோது இந்த கொடூரமான சம்பவம் நடந்ததாக அன்டோனியோ லாகிங்கர் குறிப்பிட்டுள்ளார்.

அப்போது, ​​அவளுடைய நண்பர்கள் அவளுடைய முகத்தை கேக்கில் அமுக்கியுள்ளனர். அப்போது அது ஒரு அடுக்கு கேக் என்பதால், அதிலிருந்த மரக்குச்சி ஒன்று அவளது கண் பகுதியில் சிக்கி, உடனடியாக இரத்தம் வெளியேறத் தொடங்கியது. அவள் திடீரென வலியால் துடித்ததால், அவளது நண்பர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவரது கண் பகுதியில் இருந்த மரக்குச்சியை அகற்றினர். மருத்துவர்களின் கூற்றுப்படி, காயமடைந்த இடத்திலிருந்து சில அங்குல தூரத்தில் தான் அவரது கண் இருப்பதாகும், அதிர்ஷ்டவசமாக அவர் தப்பித்துள்ளனர், இல்லையென்றால் அவரது கண் பார்வை இழக்கும் நிலை ஏற்பட்டிருக்கும் என தெரிவித்தனர்.

Also read... 100 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு விஜயம் செய்த மாண்டரின் வாத்துகள்: வைரல் வீடியோவை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா!

கேக் விற்பனையாளர்கள் சிலர், அடுக்கு கேக் தயார் செய்யும் போது, மரத்துண்டு, உலோகம் அல்லது பிளாஸ்டிக் குச்சிகளை பயன்படுத்துகின்றனர். இதனால் இதுபோல அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் இதுபோல செய்யக்கூடாது. இப்போது வரை, இந்த பதிவு 4.5 லட்சத்திற்கும் மேற்பட்ட முறை பகிரப்பட்டுள்ளது. இந்த போஸ்டிற்கு கமெண்ட் செய்துள்ள நெட்டிசன்கள், கேக்கை வீணாக்குவது தவறானது என கமெண்ட் செய்துள்ளனர். மேலும் அதிஷ்டவசமாக அந்த பெண்ணின் கண்களில் படவில்லை, இல்லையேற்றால் பார்வை பறிபோகும் நிலை ஏற்பட்டிருக்கும் என கருத்து தெரிவித்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Published by:Vinothini Aandisamy
First published: