• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • 100 வயது அடைந்த தாத்தாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பேத்தி - வைரலாகும் ட்வீட்!

100 வயது அடைந்த தாத்தாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பேத்தி - வைரலாகும் ட்வீட்!

100 வயது அடைந்த தாத்தாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பேத்தி

100 வயது அடைந்த தாத்தாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பேத்தி

இந்த படத்தை பார்த்த பலரும் அவர்களின் சொந்த குடும்பத்தை சேர்ந்த வயதானவர்களின் படங்களை வரிசையாக பகிர்ந்தார்.

  • Share this:
100 வயதான தன் தாத்தாவிற்கு பேத்தி பிறந்தநாள் வாழ்த்து சொன்னது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

தற்போதைய கால கட்டத்தில் மனிதனின் சராசரி ஆயுட்காலம் குறைந்து கொண்டே வருகிறது. உலகமயமாக்கல் காரணமாக உலகில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகின்றது. உணவு முதல் இருப்பிடம் வரை என அனைத்திலும் நவீன வசதிகள் வந்துகொண்டே இருக்கின்றன. வருங்காலத்தில் உணவுக்காக போர் வந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இப்படி பல்வேறு வகைகளாக உலகம் மாறி கொண்டு வருகிறது. தொழில்நுட்பத்தில் நாம் முன்னேறிக்கொண்டே சென்றாலும், நாம் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்கிறோமா? என்பது கேள்விக்குறியே.

மனிதனின் சராசரி ஆயுட்காலம் 30 ஆண்டுகளுக்கு முன்பு 90 என்றார்கள். தற்போது 70 வயதே பெரிது என்று சொல்கிறார்கள். இந்த அளவுக்கு உணவில் கலப்படம் ஆகியுள்ளது. அந்த காலத்தில் கம்பு, கேழ்வரகு, தானியங்கள் என்று உணவு வகைகள் இருந்தன. தற்போது அவை காலப்போக்கில் மாறி, பாஸ்ட்புட் கலாச்சாரம் பெருகி உள்ளது. இது போன்ற பாஸ்ட்புட் உணவுகள் எடுத்துக்கொள்வதால், உடலில் பல்வேறு உபாதைகள் ஏற்படுகிறது. உடல் நலத்தை பாதிக்கிறது. தற்போது அதிக வயதானவர்களை பார்ப்பதே அரிதாக இருக்கிறது. 100 வயது நிரம்பிய ஒருவர் தான் தற்போதைய ட்விட்டர் ட்ரெண்டிங் .

ட்விட்டர்,இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பல்வேறு செய்திகள் வைரலாவது உண்டு. குழந்தைகள் விளையாடுவது, விலங்குகள் மற்றும் பறவைகளின் அட்டகாசம்,சிரிப்பை வரவைக்கும் காணொளி என பல்வேறு வகைகள் இதில் இருக்கிறது. பேத்தி ஒருவர் தன்னுடைய 100 வயது நிரம்பிய தாத்தாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், இந்த ட்வீட் இணையத்தில் வைரலானது. இந்த ட்வீட்டை பார்த்த பலரும் தன்னுடைய வயதான பாட்டி, தாத்தா புகைப்படங்களை பகிர்ந்தனர். இது தான் வைரலானதுக்கு முக்கியமான காரணம் ஆகும். இவர் வெளியிட்ட இந்த ட்விட்டர் பதிவு 16,000 ரீடிவீட்களையும், 2.70 லட்சம் லைக்குகளையும் பெற்றுள்ளது.

ட்விட்டர் பதிவை காண…



இந்த படத்தை பார்த்த பலரும் அவர்களின் சொந்த குடும்பத்தை சேர்ந்த வயதானவர்களின் படங்களை வரிசையாக பகிர்ந்தார். தன் தாத்தா பிறந்தநாளில் வெளியிடப்பட்ட பதிவு இவ்வளவு பெரிய வரவேற்பைப் பெறும் என்று அவர் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார். ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ கூறிய அனைவருக்கும் நன்றி கூறினார். 100 வயதில் தாத்தாவின் ஆரோக்கியத்தைக் கண்டு ட்விட்டர் யூசர்கள் பலர் ஆச்சரியப்பட்டனர்.

‘இவருக்கு 100 வயதா? பார்த்தல் 60 அல்லது 70 வயது உள்ளவரை போல காணப்படுகிறாரே’ என்றும், ‘இந்த வயதில் இவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறார். மகிழ்ச்சியான செய்தி’ என்றும் நெட்டிசன்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: