ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

மெட்ரோ ரயிலில் குழந்தையுடன் தரையில் அமர்ந்திருந்த பெண்: கண்டுகொள்ளாத சக பயணிகள்- வைரல் வீடியோ

மெட்ரோ ரயிலில் குழந்தையுடன் தரையில் அமர்ந்திருந்த பெண்: கண்டுகொள்ளாத சக பயணிகள்- வைரல் வீடியோ

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

நீங்கள் கருணை உள்ளம் கொண்டவராகவும், பிறருக்கு உதவும் மனம் உள்ளவராகவும் இருப்பதற்கு உங்களிடம் பெரும் பணமோ, செல்வமோ தேவையில்லை. உதவி தேவைப்படும் ஒருவருக்கு கொஞ்சம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருந்தாலே போதுமானது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

நீங்கள் கருணை உள்ளம் கொண்டவராகவும், பிறருக்கு உதவும் மனம் உள்ளவராகவும் இருப்பதற்கு உங்களிடம் பெரும் பணமோ, செல்வமோ தேவையில்லை. உதவி தேவைப்படும் ஒருவருக்கு கொஞ்சம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருந்தாலே போதுமானது.

ஆனால், இன்றைய உலகில் இந்தக் குணம் மெல்ல, மெல்ல மறைந்து வருகிறது. குறிப்பாக, மனிதர்கள் அனைவரின் கவனமும் மொபைல் பார்ப்பதில் குறியாக உள்ள நிலையில், சக மனிதர்கள் மீது அவர்களது பார்வை திரும்புவதில்லை.

இணையத்தில் அண்மையில் வெளியாகியிருக்கும் வீடியோ ஒன்று இதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. மெட்ரோ ரயிலில் கைக்குழந்தையுடன் பயணித்த பெண் பயணி ஒருவர், இடம் கிடைக்காமல் தரையில் அமர்ந்திருக்க, சக பயணிகள் அனைவரும் தங்களது வேலைகளில் பிஸியாக இருந்திருக்கின்றனர்.

ஐஏஎஸ் அதிகாரி அவனீஷ் ஷரன் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். உடனடியாக வைரலாகிய அந்த வீடியோவை இதுவரையில் 7 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்த்திருக்கின்றனர். சக மனிதனுக்கு தேவையான சின்னஞ்சிறு உதவியைக் கூட செய்ய முடியாத, கல்நெஞ்சம் படைத்த உலகமாக இந்தச் சமூகம் மாறி வருகிறது என்பது சற்று அதிர்ச்சிக்குரிய விஷயமாகத்தான் இருக்கிறது.

பொறுப்பற்றதனத்தின் உச்சம்

கையில் குழந்தையுடன் வந்த தாய்க்கு, உட்காருவதற்கு இடம் அளிக்காமல் இருந்தது சமூகத்தின் பொறுப்பற்றத் தனத்தை காட்டுகிறது என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து டிவிட்டர் பயனாளர் ஒருவர் வெளியிட்டுள்ள கமெண்டில், “உங்களோடு இனியும் நான் ஒத்து போக முடியாது. ஒரு சமூகமாக நாம் பிறரின் வலியை உணரும் குணத்தை படிப்படியாக இழந்து வருகிறோம். நான் கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்தவன். பஸ் அல்லது ரயிலில் முதியவர்கள் அல்லது கையில் குழந்தையுடன் பெண் ஏறுகின்ற சமயங்களில், அவர்களுக்காக எழுந்து நின்று இடம் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டவர்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

உண்மை இதுவல்ல

டிவிட்டரில் மற்றொரு பதிவாளர் வெளியிட்டுள்ள கமெண்டில், "இந்த வீடியோ ஏற்கனவே வெளிவந்த பழைய வீடியோ தான். அந்த ரயிலில் பயணித்த சக பயணிகள் அந்தப் பெண்ணுக்கு இடம் அளிக்க முன்வந்தார்கள். ஆனால், கையில் குழந்தை நழுவிக் கொண்டே இருக்கும் என்பதால் கீழே அமர்வதுதான் சௌகரியமானது எனக் கூறி, அந்தப் பெண் தான் உதவியை ஏற்க மறுத்துவிட்டார்’’ என்று விளக்கம் அளித்துள்ளார்.

Also see... ராசியான பொருள் கைய விட்டு போகாது - டிவிட்டரில் வைரலாகும் ஆஸ்திரேலிய பெண்ணின் கதை

ஆனால், வேறுபல நெட்டிசன்கள் இந்த பதிலை நிராகரித்துள்ளனர். இறுதியாக இந்த சம்பவத்தின் உண்மையான பின்னணி என்ன என்பது தெரியாமல் இருக்கிறது. அதே சமயம், அந்த பெண்ணுக்கு இடம் மறுக்கப்பட்டிருந்தாலும் அது தவறு தான் அல்லது அந்தப் பெண் சாதாரணமாக அமர்ந்திருந்ததை வீடியோ எடுத்து, தவறான சித்தரிப்புடன் முதலில் பகிர்ந்து கொண்ட அந்த முகம் தெரியாத நபர் செய்த செயலும் தவறுதான். எப்படியாகினும் இதில் ஏதோ ஒரு பாடத்தை நாம் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

First published:

Tags: Metro Rail, Viral Video