கனவுகண்ட நம்பர் மூலம் லாட்டரியில் 637 கோடி ரூபாய் பரிசாக வென்ற பெண்: கொரோனாவால் வேலையிழந்தவருக்கு அடித்தது ஜாக்பாட்!

லாட்டரியில் வென்ற Deng Pravatoudom

கனவில் வந்த நம்பர்கள் இப்போது அவரின் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றியுள்ளது.

  • Share this:
கனவுகள் மனிதனோடு பின்னிப் பிணைந்தவை. மனதில் இருக்கும் ஆசைகள் கனவுகளாகப் பரிணமிக்கும் என்றும், ஆழ்மனதில் புதைந்திருக்கும் எண்ணங்களின் வாசனைகளே கனவுகளுக்குக் காரணம் என்றும் பல்வேறு கருத்துக்கள் உண்டு. அந்த வகையில் ஒருவரின் கனவில் வந்த நம்பர்கள் இப்போது அவரின் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றியுள்ளது.

டெங் பிரவடவுடம் என்ற 57 வயதான பெண் 20 வருடங்களுக்கு முன் தனது கணவரின் கனவில் வந்த லாட்டரி நம்பரை விடாமல் ஆடி வந்த நிலையில் தற்போது ஜாக்பாட் அடித்துள்ளது. இந்த செய்தியை Ontario Lottery and Gaming நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதில் டெங் பிரவடவுடமிற்கு லாட்டரியில் 60 மில்லியன் டாலர் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. ( இந்திய மதிப்பில் சுமார் 637 கோடி ரூபா)ய் கடந்த டிசம்பர் 1ம் தேதி, அந்த பெண்மணி கொரோனா தொற்றுநோயால் வேலை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் வாழ்க்கையை மிகவும் சிக்கனமாக ஓட்டிவந்தார். ஒரு நாள் தனது வீட்டு பில்களை கட்டுவதற்கு பேங்கிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டிலிருந்த கணவர் லாட்டரி டிக்கெட்டுகளை சரிபார்க்கும்போது ஷாக் ஆகிவிட்டார். 60 மில்லியன் டாலர் லாட்டரியில் வெற்றி பெற்றிருப்பதை அறிந்து உற்சாகமடைந்த அவர், உடனடியாக இந்த செய்தியை தனது மனைவிக்கு தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து 60 மில்லியன் டாலர் பரிசுத்தொகைக்கு உரிய செக்கை வாங்கிய பின்னர் இதுகுறித்து பேட்டியளித்த டெங் பிரவடவுடம், " லாட்டரியில் 60 மில்லியன் டாலர் பரிசு கிடைத்த செய்தியை கேட்டு நான் கொஞ்ச நேரம் காற்றில் பறப்பது போல உணர்ந்தேன், அதே நேரம் என் கண்களில் இருந்து கண்ணீர் ஆர்ப்பரித்தது, முதலில் என்னால் இதனை நம்ப முடியவில்லை," என்று கூறினார். மேலும் லாட்டரியில் ஜாக்பாட் அடித்ததால் அந்த பணத்தை கொண்டு "நான் ஒரு வீட்டை வாங்கப் போகிறேன், அதோடு வாய்ப்பிருந்தால் இந்த கோவிட்டுக்குப் பிறகு, நான் உலகப் பயணம் செய்யப் போகிறேன்" என்று மகிழ்ச்சி வெள்ளத்தில் பிரவடவுடம் கூறினார்.

பிரவடவுடம் 1980ல் தனது 14 சகோதர, சகோதரிகளுடன் லாவோஸிலிருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்தார். பல தசாப்தங்களாக, அவரும் அவரது கணவரும் தங்கள் குடும்பத்தினருக்காக கடுமையாக உழைத்துள்ளதாக அவர் கூறினார். என் குடும்பத்திற்கு ஒரு உள்ளூர் தேவாலயம் நிதியுதவி செய்தது, அப்போது எங்களிடம் பொருள் எதுவும் இல்லை, அவர்கள் பல ஆண்டுகளாக எங்களுக்கு வழங்கிய பெரும் ஆதரவுக்கு நான் இப்போது நன்றி கூறுகிறேன் என்றும் நானும் எனது கணவரும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுத் தொழிலாளர்களாக நீண்ட நேரம் பணியாற்றியுள்ளோம், இப்போதும் எங்கள் குடும்பத்திற்காக எங்களால் முடிந்ததை சேமிக்க முயற்சிக்கிறோம்.

கொரோனா தொற்றுநோய் காரணமாக, கடந்த மாதம் நான் பனியாற்றி வந்த நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டேன். அதிர்ஷ்டவசமாக நாங்கள் பெற்ற இந்த லாட்டரி பணம் நிச்சயமாக எங்கள் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் என்றார். எங்கள் பிள்ளைகள், 'அம்மா, அப்பாவும் நீங்கள் இருவரும் கடந்த 40 ஆண்டுகளாக மிகவும் கடினமாக உழைத்து எங்களுக்காக பல தியாகங்களைச் செய்திருக்கிறீர்கள், எனவே இந்த மகிழ்ச்சி உங்களுக்கு அவசியமான ஒன்று தான்" என்று கூறியதாக பிரவடவுடம் கண்ணீருடன் தனது மகிழ்ச்சியான தருணத்தை வெளிப்படுத்தினார்.
Published by:Arun
First published: