Home /News /trend /

ஜிம்மில் தலைகீழாக சிக்கிய பெண்... சரியான நேரத்தில் உதவிய ஸ்மார்ட் வாட்ச் - வைரல் வீடியோ

ஜிம்மில் தலைகீழாக சிக்கிய பெண்... சரியான நேரத்தில் உதவிய ஸ்மார்ட் வாட்ச் - வைரல் வீடியோ

உடற்பயிற்சி செய்து தலைகீழாக சிக்கிக்கொண்ட பெண்

உடற்பயிற்சி செய்து தலைகீழாக சிக்கிக்கொண்ட பெண்

Viral Video | தலைகீழாக உடலை நிறுத்தும் பயிற்சியில் ஈடுபட்ட போது மீண்டும் உடலை சரியான நிலைக்குக் கொண்டுவர முடியாமல் தவித்துள்ளார். அந்த வீடியோ இப்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • int, IndiaUSUSUSUS
    உடல் எடையைக் குறைப்பதற்காக நம்மில் பலர் உடற்பயிற்சி நிலையங்களுக்குச் செல்வது வழக்கம். அப்படித்தான் அமெரிக்காவை சேர்ந்த இளம் பெண் ஒருவர், ஜிம்மில் வழக்கமான பயிற்சி மேற்கொண்ட போது, தலைகீழாக சிக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அப்படி என்ன தான் அங்கு நடந்தது தெரியுமா?

    அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தைச் சேர்ந்த கிறிஸ்டின் ஃபால்ட்ஸ் என்ற இளம் பெண் தன்னுடைய உடல் எடையை குறைப்பதற்கு மற்றும் முதுகுவலியைச் சரிசெய்வதற்கான உடற்பயிற்சியைத் தினந்தோறும் வீட்டிற்கு அருகில் உள்ள ஜிம்மிற்கு சென்று வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இதோடு தான் செய்யும் ஒவ்வொரு பயிற்சிகளையும் வீடியோவாக எடுப்பதோடு அதனை இணையத்திலும் பதிவிடுவார். டிக்டாக்கில் வீடியோக்களையும் வெளியிடுவதால் இவரை பலர் பின் தொடர்கிறார்கள். இது போன்று தினமும் ஜிம்மிற்கு சென்று பயிற்சி மேற்கொண்ட போது தான் தலைகீழாக மாட்டிக்கொண்டிருக்கிறார்.

    தலைகீழாக மாட்டிக்கொண்டது எப்படி?....

    24 மணி நேரமும் ஜிம் செயல்படும் என்பதால் உடற்பயிற்சி மேற்கொள்ள அதிகாலை 3 மணிக்கு சென்றிருக்கிறார். வழக்கம் போல தான் செய்யும் பயிற்சியை வீடியோ எடுப்பதற்காக போனில் வீடியோவை ஆன் செய்து டேபிளில் வைத்துள்ளார். அப்போது அவர் முதுகுவலிக்காக சிகிச்சை மேற்கொண்டுள்ளார். “தலைகீழாக உடலை நிறுத்தும் பயிற்சியில் ஈடுபட்ட போது மீண்டும் உடலை சரியான நிலைக்குக் கொண்டுவர முடியாமல் தவித்துள்ளார்“. அதிகாலை என்பதால் ஜிம்மில் இருந்த ஒன்றிரண்டு பேரும் வெளியில் சென்றுவிட்டனர். இதனால் யாருடைய உதவியும் அவருக்குக் கிடைக்கவில்லை.

    Read More : தண்ணீருக்குள் ஹை ஹீல்ஸ் கேட்வாக்.. அசத்தும் நீச்சல் வீராங்கனை - வைரலாகும் வீடியோ!


    தலைகீழாக தொங்கிய நிலையிலிருந்து மீள முடியாமல் தவித்த அவர் யாருக்காவது போன் செய்து உதவிக்கு அழைக்கலாம் என நினைத்துள்ளார். ஆனால் போனும் டேபிள் மீது இருந்துள்ளதால் ஒன்றும் செய்ய முடியவில்லை. முன்னதாக போனில் வீடியோவை ஆன் செய்து வைத்திருந்தால் தலைகீழாக நிற்கும் கிறிஸ்டோபர் உதவிக்காக தவிக்கும் அனைத்தும் பதிவாகியது.

    இந்த சூழலில் தான், என்ன செய்வது? யாரிடம் உதவிக் கேட்பது என்று சிரமத்தில் தவித்த நிலையில் தான், தனது கையில் இருந்த ஸ்மார்ட்வாட்ச் இருப்பது ஞாபகம் வந்துள்ளது. உடனடியாக காவல்துறை அவசர அழைப்பு எண்ணான 911க்கு ஸ்மார்ட் வாட்ச் மூலம் போன் செய்திருக்கிறார்..“ தான் ஜிம்மிற்கு வழக்கமான உடற்பயிற்சி செய்த போது தலைகீழாக சிக்கிக்கொண்டேன் என்றும், இங்கு யாரும் அருகில் இல்லை. எனவே தலைகீழாக சிக்கிக்கொண்ட எண்ணை உடனடியாக காப்பாற்றுங்கள்“ என உதவி கேட்டிருக்கிறார்.

    இந்த அழைப்பை ஏற்று உடடினயாக உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்ற போலீசார், தலைகீழாக சிக்கிக் கொண்ட பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். சில நிமிடங்களிலேயே உடற்பயிற்சிக் கருவியில் தலைகீழாக சிக்கிக் கொண்டவரை பத்திரமாக மீட்டனர். இதோடு இது போன்று ரிஸ்கான உடற்பயிற்சிகள் மேற்கொள்ளும் போது போதிய உதவி எதுவும் இல்லாமல் மேற்கொள்ளக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



    தற்போது இந்த சம்பவம் தொடர்பான சிறிய வீடியோ கிளிப் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக சுமார் 12 நிமிடங்களுக்கு உலகை வேறு கோணத்தில் பார்த்துள்ளார் எனவும், நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் செய்யும் அனைத்து விஷயங்களையும் டிக் டாக் வீடியோவாக பதிவிட்டால் இப்படித்தான் நடக்கும் என்பது போன்ற கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

     
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Trending, Viral

    அடுத்த செய்தி