ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

நிரந்தர வேலையை உதறித் தள்ளிய பெண் - டெலிவரி ஏஜெண்டாக வாரம் 90 ஆயிரம் சம்பாதிக்கிறார்!

நிரந்தர வேலையை உதறித் தள்ளிய பெண் - டெலிவரி ஏஜெண்டாக வாரம் 90 ஆயிரம் சம்பாதிக்கிறார்!

கடந்த ஆண்டு விமான நிலைய வேலையை உதறி தள்ளிவிட்டு முழுநேர டெலிவரி ஏஜெண்டாக பணியாற்ற தொடங்கினார்

கடந்த ஆண்டு விமான நிலைய வேலையை உதறி தள்ளிவிட்டு முழுநேர டெலிவரி ஏஜெண்டாக பணியாற்ற தொடங்கினார்

கடந்த ஆண்டு விமான நிலைய வேலையை உதறி தள்ளிவிட்டு முழுநேர டெலிவரி ஏஜெண்டாக பணியாற்ற தொடங்கினார்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • international, IndiaAmericaAmericaAmerica

  நல்ல வேலை, கை நிறைய சம்பளம் என்பதெல்லாம் எல்லோருக்கும் கிடைத்திடாத வரம் என்றால் அது மிகையல்ல. ஏனென்றால், நம் கண்முன்னே நிறைய வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன என்றாலும் கூட, நம் தகுதி, அனுபவம் மற்றும் திறமைக்கு ஏற்ற ஊதியத்துடன் கூடிய மிகச் சரியான வேலை அமைவது மிகக் கடினம். எல்லாம் சரியாக அமைந்தாலும் கூட, சில இடங்களில் மேல் அதிகாரிகளின் கெடுபிடிகள் காரணமாக பணிச்சூழல் கெட்டுவிடும்.

  குறிப்பாக, படித்து முடித்த கையோடு வேலை தேடுபவர்களுக்கு நல்லதொரு வேலை அமைய நிறைய காலம் பிடிக்கும். நிலையாக ஒரு இடத்தில் இருக்க முடியாது. அடுத்தடுத்த வாய்ப்புகளை தேடி பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

  சரி, நல்ல வேலை வேண்டும், வேண்டும் என்று கூறி எத்தனை காலம் தான் நாம் ஓடிக் கொண்டே இருக்க முடியும்? அப்படியொரு வேலையே நமக்கு கிடைக்கும் வாய்ப்பு இல்லை என்றால் என்ன செய்வது? இருக்கின்ற வேலையை உதறித் தள்ளிவிட்டு, நமக்கு பிடித்தமான, சௌகரியமான ஏதோ ஒன்றை தேடிச் சென்றுவிடுவோம் அல்லவா.

  அப்படித்தான் பிரிட்டனை சேர்ந்த பெண் ஒருவர் செய்திருக்கிறார். இதில், ஆச்சரியம் என்னவென்றால் நிரந்தர வேலையில் இருந்தபோது அவர் சம்பாதித்ததை விட இப்போது கொஞ்சம் கூடுதலாகவே சம்பாதிக்கிறார்.

  அட்லாண்டா மார்டின் என்ற பெண்மணி, காட்விக் விமான நிலையத்தில் விமானங்களை ஒழுங்குமுறைப்படுத்தும் பணிகளை செய்து வந்தார். 22 வயதான இந்தப் பெண்ணுக்கு கூடுதல் வருமானம் ஈட்ட வேண்டும் என்ற ஆசை வேறு இருந்தது.

  இதனால் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பகுதிநேர டெலிவரி ஊழியராக பணியாற்றத் தொடங்கினார். இதற்கிடையே, ஒரு குழந்தைக்கு தாயாகி விட்டதால் இரண்டு வேலைகளையும் சமாளிக்க முடியாமல் திணறி வந்தார். அதே சமயம், முழுநேர டெலிவரி ஊழியராக மாறினால் இப்போது சம்பாதிப்பதை விட கூடுதலாக வருமானம் ஈட்ட முடியும் என்று கணக்கீடு செய்தார்.

  முழுநேர டெலிவரி ஏஜெண்ட் பணி

  இரண்டு ஆண்டுகள் பகுதிநேர டெலிவரி ஊழியராக பணியாற்றி வந்த நிலையில், கடந்த ஆண்டு விமான நிலைய வேலையை உதறி தள்ளிவிட்டு முழுநேர டெலிவரி ஏஜெண்டாக பணியாற்ற தொடங்கினார்.

  நாளொன்றுக்கு 11 மணி நேரம் வேலை செய்யும் நிலையில், வாரத்திற்கு 1000 பவுண்டுகளை சம்பாதித்து வருகிறார். அதாவது, இந்திய மதிப்பில் ரூ.90 ஆயிரம் ஆகும்.

  Read More: இத்தனை நாள் இது தெரியாம போச்சே! சிக்கன் 65 சென்னையில கண்டுபுடிச்சதாம்!

  விமான நிலையத்தில் பணியாற்றியபோது கிடைத்த ஊதியத்தைக் காட்டிலும் இப்போது கூடுதலான வருமானம் கிடைக்கிறது என்றும், தன் மனம் இஷ்டப்படும் வகையில் சுலபமாக வேலை செய்ய முடிகிறது என்றும் அட்லாண்டா தெரிவித்தார்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Job, UK, Viral News