Home /News /trend /

அமெரிக்க பெண்ணுக்கு வித்தியாசமான நோய் - மருத்துவர்கள் குழப்பம்!

அமெரிக்க பெண்ணுக்கு வித்தியாசமான நோய் - மருத்துவர்கள் குழப்பம்!

சம்மர்

சம்மர்

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த சம்மர் என்ற 24 வயது பெண், கடந்த ஆண்டு சாலை விபத்தில் சிக்கியுள்ளார். கடுமையான காயங்கள் மற்றும் எலும்பு முறிவுகளை சந்தித்த அவர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சாலை விபத்தில் சிக்கிய அமெரிக்க பெண்ணுக்கு அரிதான நோய் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த சம்மர் என்ற 24 வயது பெண், கடந்த ஆண்டு சாலை விபத்தில் சிக்கியுள்ளார். கடுமையான காயங்கள் மற்றும் எலும்பு முறிவுகளை சந்தித்த அவர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், கோமாவுக்கு சென்றதை உறுதி செய்தனர். இரண்டு வாரங்கள் தொடர் சிகிச்சைக்குப் பின் கோமாவில் இருந்து திரும்பினாலும், சம்மரால் பேச முடியவில்லை. சைகை மொழியில் மற்றவர்களுடன் உரையாடியுள்ளார்.

விபத்து நடந்த நாள் குறித்து சம்மருக்கு நினைவில் இல்லை. சிகிச்சையில் இருக்கும்போதே பேச்சுப் பயிற்சியும் எடுத்துள்ளார். அவரது குரல் முன்பு போல் இருக்கவில்லை. மிகவும் மெதுவாக பேசியதை மருத்துவர்கள் கவனித்துள்ளனர். தொடர்ந்து இதேபோல் சம்மர் பேசியது மருத்துவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. அதாவது, அவர் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் பேசும் ஆங்கில உச்சரிப்பில் பேசியுள்ளார். இதற்கு முன்பு ஒருமுறைகூட அவர் நியூசிலாந்து சென்றதில்லை. ஆனால், சம்மர் எப்படி நியூசிலாந்து மக்கள் பேசும் உச்சரிப்பில் பேசுகிறார்? என அவரிடமே கேட்டுள்ளனர்.

அவர்களின் கேள்வி சம்மருக்கும் புதிதாக இருந்துள்ளது. "நான் நன்றாக தான் பேசுகிறேன். எப்போதும் போல் பேசுகிறேன். அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தவள் நான். எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை. எனக்கு ஆண் நண்பர் ஒருவர் இருந்தார். அவர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். அவருடன் இருக்கும்போது பிரிட்டீஷ் ஆங்கில உச்சரிப்பில் பேசுவதாக என்னைக் கூறுவார்கள். மற்றவர்கள் கூறுவது எனக்கே வியப்பாக இருக்கும். சில நேரங்களில் ரஷ்ய மொழி உச்சரிப்பிலும் பேசியிருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Also read... டிஎஸ்பி மகளுக்கு சல்யூட் செய்த டிஐஜி தந்தை - வைரலான புகைப்படம்!

சம்மரிடம் பெற்ற தகவல்கள் குறித்து ஆலோசனை நடத்திய மருத்துவர்கள், அவருக்கு அரிதினும் அரிதான நோய் இருக்கலாம் எனக் கூறியுள்ளனர். அதாவது, அந்நியமொழி உச்சரிப்பு நோய் சம்மருக்கு இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். சம்மருக்கு சிகிச்சை அளித்த நர்ஸ் ஒருவர் பேசும்போது, " சம்மர் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பியபோது அவரால் முதலில் பேச முடியவில்லை.

பின்னர் பேச்சுப் பயிற்சி எடுத்துக் கொண்டார். பேச ஆரம்பிக்கும்போது அவரின் ஆங்கில மொழி உச்சரிப்பு வித்தியாசமாக இருந்தது. நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? அமெரிக்கரா என நான் பல முறை அவரிடம் கேட்டிருக்கிறேன். என்னுடைய கேள்வி அவருக்கு வியப்பாக இருக்கும். ஏன் இப்படி கேட்கிறீர்கள், நான் இங்கே பிறந்து வளர்ந்தவள் என கூறுவார். மொழி உச்சரிப்பை பார்த்தால், சம்மர் அமெரிக்கர் எனக் கூற முடியாது. அவரின் மொழி உச்சரிப்பு வித்தியாசமாக இருக்கும் என தெரிவித்தார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Trending

அடுத்த செய்தி