• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • பேஸ் மாஸ்க் பயன்படுத்தியதால் ஷ்ரெக்கைபோல தோற்றமளிக்கும் பெண்!

பேஸ் மாஸ்க் பயன்படுத்தியதால் ஷ்ரெக்கைபோல தோற்றமளிக்கும் பெண்!

ஷ்ரெக்கை போல தோற்றமளிக்கும் பெண்

ஷ்ரெக்கை போல தோற்றமளிக்கும் பெண்

டிக்டாக்கில் வீடியோ போஸ்ட் செய்து வரும் கோடா சமீபத்தில் ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ள நிலையில் அவரது பாலோயர்ஸ்கள் அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

  • Share this:
அலுவலகத்தில் வேலை செய்யும் அனைவருக்கும் நேர்காணல் என்றால் எவ்வளவு முக்கியமானது என்பது தெரிந்திருக்கும். ஒரு நேர்காணலுக்கு செல்லும் ஒவ்வொரு நபருக்கும் மிக முக்கியமான பகுதி தங்களை பற்றிய விவரத்தை கூறும் சுய விளக்க பகுதி ஆகும்.

நேர்காணலின் போது ஒருவர் தன்னை எவ்வாறு அறிமுகப்படுத்துகிறார் என்பது அவர் மீதான நம்பிக்கை, வேலையை வழிநடத்துவதில் உள்ள திறமை ஆகியவற்றை வெளிக்கொண்டுவரும் ஒரு பகுதியாகும். ஒவ்வொருவரும் நேர்காணலில் தங்களிடம் உள்ள சிறப்பான விஷயங்களை வழங்க வேண்டும் என நினைப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

நேர்காணலுக்கு கிளம்பும் நேரத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாக இருந்தாலும் சில சந்தர்ப்பங்களில் சொதப்பல் ஆகிவிடுவது சிலருக்கு வழக்கமாக உள்ளது. அந்த வரிசையில் கோடா என்ற பெண்ணும் இணைந்துள்ளார். டிக்டாக்கில் வீடியோ போஸ்ட் செய்து வரும் கோடா சமீபத்தில் ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ள நிலையில் அவரது பாலோயர்ஸ்கள் அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ALSO READ |  வயலினில் அசத்தும் கொல்கத்தா கலைஞர் - திறமையை அங்கீகரிக்க நெட்டிசன்கள் வலியுறுத்தல்!

சமூக வலைத்தளங்களில் பல்வேறு அழகு சார்ந்த தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதை நாம் அதிகம் காண முடிகிறது. க்ரீம், லோஷன், பேஸ் மாஸ்க், என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. தற்போது டிக்டாக் போன்ற ஆப்ஸ்களில் கூட பிரபலமான நபர்களை வைத்து இந்த தயாரிப்புகளை ப்ரோமோட் செய்வதை நாம் பார்க்கிறோம். அப்படி ஒரு ஆர்கானிக் தயாரிப்பு விளம்பரத்தை பார்த்த கோடா அதனை வாங்கியுள்ளார்.சமீபத்தில் தான் வாங்கிய குளோரோபில் பேஸ் மாஸ்க் ஒன்றை முகத்தில் அப்ளை செய்துள்ளார். நேர்காணலுக்கு செல்வதற்கு முன்னர் தான் அழகாக காட்சியளிக்க வேண்டும் என்பதால் கோடா அதனை பயன்படுத்தி பார்க்க முடிவு செய்துள்ளார். இந்த மாஸ்க் உங்கள் சருமத்தை சுத்திகரிக்கின்றன, டானை நீக்கி உங்கள் சருமத்தை பிரகாசமடைய செய்யும் என விளம்பரத்தில் கூறியதை நம்பி பயன்படுத்தியுள்ளார்.

ALSO READ | 28 மனைவிகள் முன் 37-வது திருமணம் செய்த பலே தாத்தா - வைரல் வீடியோ

அதில் உங்கள் கிரீமுடன் கலந்து பயன்படுத்துங்கள் என கூறியதால் கோடாவும் அவரது க்ரீமுடன் இந்த குளோரோபில் எனும் பச்சை நிறத்தில் இருந்த கலவையை ஒன்றாக கலந்து பயன்படுத்தியுள்ளார். ஆனால் கோடா சற்றும் எதிர்பார்க்காத வகையில் அவர் அந்த கலவையை தண்ணீரில் கழுவிய பின்னரும் அவரது முகத்தில் இருந்த பச்சை நிறம் நீங்கவில்லை. சோப்பு, பேஸ் வாஷ் பயன்படுத்தினாலும் அந்த நிறம் மறையவில்லை.பாங்க் ஆப் அமெரிக்காவில் ஒரு வேலை நேர்காணலுக்கு முந்தைய நாள் முகத்தில் இந்த மாஸ்க்கை பயன்படுத்திய கோடாவிற்கு ஒரு பயங்கரமான அனுபவம் ஏற்பட்டது, அவள் முகத்தை தொடர்ந்து கழுவினாலும் பச்சை நிறத்தை அகற்ற முடியவில்லை. இதனால் அவரால் நேர்காணலில் பங்கேற்கவும் முடியவில்லை. இந்த சம்பவத்தை ஒரு வீடியோவாக பதிவு செய்த கோடா, டிக்டாக்கில் பகிர்ந்துள்ளார்.

ALSO READ | 24,000 ஆண்டுகள் பழமையான சிறிய உயிரினிங்களை மீண்டும் ஆய்வகத்தில் உயிர்ப்பித்த ரஷ்ய விஞ்ஞானிகள்!

அந்த வீடியோவின் தலைப்பில், கோடா, சக டிக்டோக் யூசர்களிடம் இந்த பச்சை வண்ணத்திலிருந்து விடுபட டிப்ஸ்கள் கேட்டுள்ளார். எனினும் எதுவும் வேலை செய்யவில்லை. இதனால் கோடா தனது உண்மையான சரும நிறத்தை மீட்டெடுக்க முடியாமல் அவதியடைந்து வருகிறார்.

சிலர் அவரது முகம் தற்போது தி மைட்டி பூஷ் தொடரில் வரும் ஷ்ரெக் எனும் பச்சை மனிதனை நினைவுபடுத்துவதாக குறிப்பிட்டுள்ளனர். இந்த வீடியோவை தற்போது வரை 2,40,000க்கும் அதிகமான பார்வையிட்டுள்ளனர். நெட்டிசன்களில் ஒருவர் பலர் வேலைக்கு சென்ற பிறகுதான் இதுபோன்ற விஷயங்களை முயற்சி செய்கின்றனர் என நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: