வீடியோ காலில் அலுவலக மீட்டிங்கில் இருந்த கணவனுக்கு முத்தம் கொடுக்க வந்த மனைவி: அதிர்ந்து போன கணவர் - வைரல் வீடியோ!

கணவனுக்கு முத்தம் கொடுக்க வந்த மனைவி

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ் ஆன நபராக விளங்கும் மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா இந்த வீடியோவை பகிர்ந்து தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் கிண்டலடித்து பதிவிட்டுள்ளது கவனத்தை கவர்ந்துள்ளது.

  • Share this:
ஜூம் வீடியோ காலில் அலுவலக மீட்டிங்கில் இருந்த கணவருக்கு, மனைவி முத்தம் கொடுக்க முயன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

கொரோனா பரவல் ஏற்பட்டதையடுத்து உலக நாடுகளில் அனைவருமே வீட்டில் இருந்து அலுவலக வேலை பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கலந்துரையாடல்கள், மீட்டிங் போன்றவையும் ஜூம், கூகுள் உள்ளிட்ட வீடியோ கான்ஃபெரன்ஸ் தளங்கள் வாயிலாகவே நடைபெற்று வருகின்றன.

மிகவும் சீரியசான மீட்டிங்குகள் வீட்டில் இருந்தே பார்க்க வேண்டியிருப்பதால் வீட்டு சூழல்கள் சில நேரங்களில் மீட்டிங்கிற்கு இடையூராக மாறிவருகின்றன. சில நேரங்களில் ஆச்சரியமூட்டும், அதிர்ச்சியூட்டும், விநோத சம்பவங்களும் நடைபெறுகின்றன.

சமீபத்தில் இது போன்றதொரு சம்பவம் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றது. அதில் வீட்டிலிருந்தே ஜூம் செயலி வழியாக அலுவலக மீட்டிங்கில் கலந்து கொண்டிருக்கும் கணவரை நெருங்கி வந்த, மனைவி மீட்டிங் நடந்து கொண்டிருந்ததை அறியாமல் அவருக்கு முத்தமிட முயல்கிறார்.

மனைவியின் செயலால் செய்வதறியாது திகைத்த கணவர் சூழலை சமாளிக்கும் பொருட்டு அருகில் வந்த மனைவியை விலக்கி விட்டு, இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது, நீ என்ன செய்கிறாய் என தன் மனைவிக்கு மீட்டிங் குறித்து தெரியப்படுத்துகிறார். உடனே நிலைமையை உணர்ந்த மனைவியும் ஏதோ வேலை இருப்பதாக பாசாங்கு செய்து சமாளித்துவிடுகிறார்.இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ் ஆன நபராக விளங்கும் மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா இந்த வீடியோவை பகிர்ந்து தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் கிண்டலடித்து பதிவிட்டுள்ளது கவனத்தை கவர்ந்துள்ளது.

ஆனந்த் மஹிந்திரா வெளியிட்டுள்ள பதிவில், “இந்த ஆண்டின் சிறந்த மனைவியாக இந்த பெண்ணை பரிந்துரைக்கிறேன். கணவர் அதிக முகமகிழ்ச்சியுடன் இருந்திருந்தால், நான் அவர்களை இந்த ஆண்டின் சிறந்த ஜோடி என்று பரிந்துரைத்திருப்பேன், ஆனால் கணவரின் கூச்சம் காரணமாக அந்த வாய்ப்பு பரிபோய்விட்டது” என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.ஆனந்த் மஹிந்திரா போன்று பலரும் தங்களின் கற்பனைக்கு எட்டிய கருத்துக்களை நகைச்சுவையாக பகிர்ந்து வருகின்றனர். இதுவரை இந்த வீடியோவை ட்விட்டரில் 4 லட்சத்திற்கும் மேலான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

கழிவறையில் இருந்து வீடியோ மீட்டிங்கில் பங்கேற்றது போன்ற முந்தைய வைரல் வீடியோக்களை ஓரங்கட்டும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது.
Published by:Arun
First published: