• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • பெட்ரோல் நிலைய கழிப்பறையில் ஆண்குழந்தை பெற்றெடுத்த பெண்

பெட்ரோல் நிலைய கழிப்பறையில் ஆண்குழந்தை பெற்றெடுத்த பெண்

பொதுக்கழிப்பிடத்தில் பிறந்த ஆண் குழந்தை

பொதுக்கழிப்பிடத்தில் பிறந்த ஆண் குழந்தை

பெட்ரோல் நிலையத்தில் உள்ள கழிப்பறை ஒன்றில் நிறைமாத கர்பிணி ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

  • Share this:
    ஜூலை மாதத்தில், கைட்லின்  தனது கணவர் செர்ஜியோவுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது, ​​கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை உணர்ந்து, அமெரிக்காவின் டெக்சாஸின் பீஸ்லியில் பெட்ரோல் நிலையத்தில் உள்ள கழிப்பறை ஒன்றில் நிறுத்த முடிவு செய்தார்.

    கைட்லின் தான் கர்ப்பமாக இருப்பது தெரிந்தும் குழந்தை பேருக்கான நேரம் வரவில்லை என்பதால் எப்போதும் போல் கழிப்பறையை பயன்படுத்த எண்ணி உள்ளார். குழந்தை வெளியில் வருவதற்கான அறிகுறி எதையும் அவர் உணரவில்லை என தெரிவித்துள்ளார்.

    ஆனால் அவள் கழிப்பிடத்தில் நுழைந்த பிறகு, அவளுக்கு வலிகள் ஏற்பட ஆரம்பித்தன, அவள் பிரசவத்தில் இருப்பதை உணர்ந்துள்ளார். வெறும் 10 நிமிடத்திற்குள் தனது குழந்தையை பெற்றெடுத்துள்ளார். மிகவும் நம்பமுடியாத விஷயம் என்னவென்றால், கைட்லினுக்கு கழிப்பறைக்குள் எந்த உதவியும் இல்லை. தகவல்களின்படி, அவளால் எவ்வித வலியும் இன்றி குழந்தையை முழுமையாகப் பெற்றெடுக்க முடிந்தது. எவரும் உதவ இல்லாத போது கழிப்பறைக்குள் இயற்கையாக குழந்தை வெளியில் வந்த செயல் அந்நாட்டில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Woman toilet run at petrol station
    பொதுக்கழிப்பிடத்தில் பிறந்த ஆண் குழந்தை


    கைட்லின் தனது கைக்குழந்தையுடன் கழிப்பறையை விட்டு வெளியே வந்த பிறகுதான், ஓய்வறையில் இருந்த அவரது கணவரிடம் தந்தையாகி விட்டதாக சொல்லச் சொன்னார். எதிர்பாராத பிரசவத்திற்குப் பிறகு, கைட்லின் மற்றும் அவரது குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இருவரும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.



    இது குறித்து கைட்லின் தெரிவிக்கையில், நாங்கள் சென்று கொண்டிருக்கையில் எனக்கு எனது அடிவயிற்றில் அழுத்தம் தருவது போல் இருந்தது. நான் சிறுநீர் கழிப்பதற்காக கழிவறைக்கு சென்றேன். ஆனால் சற்று நேரத்தில் குழந்தை பிறந்து விட்டதாக ஏபிசி செய்திக்கு தெரிவித்துள்ளார்.



    பலரும் இது குறித்து கமெண்ட்ஸ் தெரிவிக்கையில், மருத்துவமனை செலவு மிச்சம் என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: