முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / ஜொமோட்டோ உணவு டெலிவரி ஊழியரை காலணியால் தாக்கிய இளம்பெண் - அதிர்ச்சி வீடியோ

ஜொமோட்டோ உணவு டெலிவரி ஊழியரை காலணியால் தாக்கிய இளம்பெண் - அதிர்ச்சி வீடியோ

Viral | இந்த சம்பவம் குறித்து உரிய முறையில் விசாரணை செய்து அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜொமோட்டோ நிர்வாகம் தெரிவித்துள்ளது

  • Last Updated :
  • Chennai, India

நாட்டில் எளிய  நிலையில் உள்ள மக்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. அந்த வகையில், பொது இடத்தில் வைத்து  ஜொமோட்டோ உணவு டெலிவரி ஊழியரை பெண் ஒருவர் காலணியால் அடித்து துஷ்பிரயோகம் செய்யும் காட்சி சமூக ஊடகங்களில் பேசும் பொருளாகி உள்ளது.

இதுதொடர்பான செய்தியை பதிவிட்ட ட்விட்டர் பயனர் (@bogas04), ஜொமோட்டோ  செயலி மூலம் உணவு ஆர்டர் செய்திருந்தாகவும், அதனை வழங்க வந்த டெலிவரி ஊழியரை பெண் ஒருவர் செருப்பால் அடித்து உணவை வாங்கிக் கொண்டார், என்று தெரிவித்தார்.

மேலும், " நான் உடனடியாக, ஜொமோட்டோ வாடிக்கையாளர் சேவை  மையத்தை தொடர்பு கொண்டு விவரங்களை அளித்தேன்.  உங்கள் டெலிவர் ஊழியர் தாக்கப்பட்டார் என்பதை எடுத்துறைத்தேன். அவர்கள், டெலிவரி பார்ட்னரை 'Rider Support' சேவையைத் தேர்வு செய்யுமாறு தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட நபர் தொடர்பு கொண்டு பேசினார். ஆனால், மறுபுறத்தில் பேசிய நபர்கள் மொழியை புரிந்து கொள்ளவில்லை என்றுள்ளனர். டெலிவரி  ஊழியர்ர் தனது பணியைக் குறித்தும், வாழ்வைக் குறித்தும் மிகுந்த அச்சம் கொண்டிருந்தார்" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் வாசிக்க: உயர் கல்வி மாணவர்களுக்கான உதவித் தொகை.. இந்த தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

இந்த சம்பவம் குறித்து உரிய முறையில் விசாரணை செய்து அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜொமோட்டோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அப்பெண்ணின் செயலை நியாயப்படுத்த முடியாது என்றும், பொது இடத்தில் வர்க்க ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் இத்தகைய போக்கு கண்டிக்கத்தக்கது என்றும் ட்விட்டர் பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

First published:

Tags: Zomato