• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • தன்னுடைய 91வது பிறந்தநாளை நடனமாடி உற்சாகமாக கொண்டாடிய பாட்டி - கியூட் வீடியோ!

தன்னுடைய 91வது பிறந்தநாளை நடனமாடி உற்சாகமாக கொண்டாடிய பாட்டி - கியூட் வீடியோ!

கியூட் வீடியோ!

கியூட் வீடியோ!

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ‘91 வயதில் இப்படியும் நடனம் ஆட முடியுமா? ஆச்சரியமாக இருக்கிறது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • Share this:
91 வயது உள்ள மூதாட்டி ஒருவர் தன்னுடைய பிறந்தநாளில் டான்ஸ் ஆடிய வீடியோ அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஒவ்வொரு தொழில்நுட்பமும் வளர்ந்து மனிதனை அடுத்தடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கின்றன. மனிதனின் இத்தகைய வளர்ச்சி நல்லதாக இருந்தாலும், ஒரு பக்கம் மனிதனுக்கு தீங்கினை உண்டாக்குகிறது. நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் இந்த சூழலில், உணவு மற்றும் மனிதன் வாழத் தேவையான அடிப்படை விஷயங்களான காற்று,நீர் என அனைத்தும் மாசாகி வருகிறது. மனிதனுடைய சராசரி ஆயுட்காலமும் குறைந்து கொண்டே வருகிறது.

இத்தகைய சூழலில் 60 வயதிற்கு மேல் வாழ்வோமா என்ற சந்தேகம் அனைவரிடமும் எழுந்துள்ளது. நாம் வாழும் சுற்றுசூழலே நம்முடைய ஆயுட்காலத்தை நிர்ணயிக்கின்றது. இப்படிப்பட்ட கால கட்டத்தில் 91 வயதுடைய மூதாட்டி ஒருவர் பிறந்தநாளுக்கு நடனம் ஆடுகிறார் என்பதை நம்ப முடிகிறதா? உண்மை தான்.

சமீபத்தில் ட்விட்டரில் பகிரப்பட்ட வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் 91 வயது நிரம்பிய மூதாட்டி ஒருவர் தன்னுடைய குடுப்பதினருடன் பிறந்தநாளை கொண்டாடுகிறார். உட்கார்ந்து கொண்டு அவர் கொண்டாடவில்லை. நடனம் ஆடிக்கொண்டு பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த வீடியோவையோ அந்த பாட்டியின் பேரன் அவரது ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார்.

இந்த காணொளியினை காண …

 



 

அதில், ‘என் பாட்டி 91 வது பிறந்தநாளைக் கொண்டாடுவதில் நாங்கள் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாக உணர்கிறோம். 91 வயதிலும் அவரது இந்த எனெர்ஜி எங்களை கொண்டாட வைக்கின்றது. அவருடன் சேர்ந்து நாங்களும் நடனமாட விரும்புகிறோம். நாங்கள் அனைவரும் உங்களை மிகவும் நேசிக்கிறேன் பாட்டி’ என்று கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார்.

ட்விட்டரில் இந்த வீடியோவை பார்த்த பலரும் அதனை ஷேர் செய்து வந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ ட்ரெண்டானது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ‘91 வயதில் இப்படியும் நடனம் ஆட முடியுமா? ஆச்சரியமாக இருக்கிறது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதுவரை இந்த வீடியோவை 23,000க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் கருத்து தெரிவித்த நபர் ஒருவர், 91 வயது பாட்டி நடமாடுவதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது, பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாட்டி. நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி’ என்று பதிவிட்டார்.



இதேபோல ஜப்பானை சேர்ந்த 116 வயதான மூதாட்டி ஒருவர் சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். அவர் பெயர் காநே ஆகும். இவர் தான் உலகின் மிகவும் வயதான நபர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். 1903 ஆம் ஆண்டு ஜனவரி 2இல் பிறந்தார்.



116 வயது ஆன போதும் மற்றவர்கள் உதவி சிறிதுமின்றி நகரும் நாற்காலியில் செல்கிறார். இந்த வயதிலும் கணித புதிர்கள் மற்றும் உட்கார்ந்த படியே விளையாடும் விளையாட்டுகளை தன்னுடைய கொள்ளு பேரன் மற்றும் பேத்திகளுடன் விளையாடி வருகிறார்’ என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: