வன உயிரியியல் பூங்காவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் அங்கிருக்கும் வனவிலங்குகள் உடன் புகைப்படம் எடுத்து மகிழ்வது வழக்கமான ஒன்று. இந்த அனுபவம் சில நேரங்களில் மகிழ்ச்சியாக இருந்தாலும் கவனக்குறைவான நேரத்தில் மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும். அதுப்போன்ற சம்பவம் ஒன்று தான் தற்போது அரங்கேறி அதிர்ச்சியை அளித்துள்ளது.
தி மிரர் பத்திரிக்கையின் தகவல்படி, வன உரியியல் பூங்காவில் பெண் ஒருவர் பழுப்பு நிற ஆக்டோபஸ் ஒன்றை உள்ளங்கையில் வைத்து புகைப்படம் எடுத்துள்ளார். இதையடுத்து கையில் கிடைத்த ஆக்டோபஸ் குறித்து இணையத்தில் தேடி உள்ளார். அதில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த பழுப்பு நிற ஆக்டோபஸ் சயனைடை விட 1000 மடங்கு விஷம் கொண்டது. ஒரு நிமிடத்தில் 26 பேரை கொல்லும் விஷத்தன்மை கொண்டதாகும்.
இந்த ஆக்டோபஸ் கடித்தால் அவர்களை காப்பாற்றுவதற்கு ஒரே வழி உடனடியாக அவர்களுக்கு செயற்கை சுவாசம் கொடுப்பது மட்டும் தான். இந்த ஆக்டோபஸின் விஷத்தன்மை உடலில் பரவினால் குமட்டல், மங்கலான பார்வை, வாந்தி, குருட்டுத்தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த பெண்ணுக்கு எந்தவித சிக்கலும் அந்த ஆக்டோபஸால் ஏற்படவில்லை.
கெய்லின்மாரி என்ற அந்த பெண் இந்த அதிர்ச்சி சம்பவத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த தகவல்களை பார்த்து பீதியடைந்த பெண் தனது தந்தைக்கு அழைத்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த பெண்ணின் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.