திருமணம் என்பது குடும்பங்கள் இணைந்து கொண்டாடும் ஒரு மங்களகரமான நிகழ்வாகும். உறவுகள் அனைவரும் ஒன்று கூடி ஒரு திருமணத்தில் மகிழ்ச்சியாக இருப்பது என்பது அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று தான். ஆனாலும், சில சமயங்களில் நமக்கு மிகவும் நெருக்கமானவர்களின் திருமணத்தை தவிர்க்க முடியாத சில காரணங்களால் நாம் தவற விடுவதும் உண்டு. கிட்டத்தட்ட அது போல ஒரு நிகழ்வு தான் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
அதாவது தன்னுடைய சகோதரனின் திருமணத்தில் தவிர்க்க முடியாத காரணத்தினால் கலந்து கொள்ள முடியாமல் இருந்த பெண் ஒருவர், கடைசி நேரத்தில் யாரும் எதிர்பாராத விதமாக அதிரடி என்ட்ரி கொடுத்து அனைவரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி உள்ள அந்த வீடியோவில், கூட்டத்தில் உள்ள ஒரு பெண்மணி மெதுவாக நகர்ந்து திருமண மேடையை அடைகிறார். அந்தப் பெண்மணிதான் சமீபத்தில் UK-க்கு வேலைக்காக இந்தியாவில் இருந்து சென்றவர். மேலும் மணமகனின் சகோதரியும் ஆவார். தவிர்க்க முடியாத சில காரணங்களால் நவம்பர் 8ம் தேதி அவர் இந்தியாவில் இருந்து புறப்பட வேண்டி இருந்தது. அதே சமயத்தில் அந்த பெண்மணியின் சகோதரரின் திருமணமானது நவம்பர் 26 ஆம் தேதி நிச்சயிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தங்களுடைய நண்பர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகு, தன்னுடைய சகோதரனின் திருமணத்திற்கு வருகை தந்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி தர முடிவு செய்துள்ளார் அந்த பெண்மணி. மேலும் இதைப்பற்றி தன்னுடைய சகோதரர்களுக்கும் ரகசியமாக தெரிவித்துள்ளார். அதாவது அவரின் எண்ணமானது தன்னுடைய பெற்றோருக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதாகும்.
இந்த காரியத்தை செய்து முடிக்க மீண்டும் யுகே-வில் இருந்து இந்தியாவிற்கு மிக நீண்டதொரு பயணத்தை மேற்கொண்டு தங்களுடைய நண்பரின் குடும்பத்தாரோடு ரகசியமாக தங்கி உள்ளார். பிறகு திருமணம் நடக்கும் சில நிமிடங்களுக்கு முன்னரே கூட்டத்தில் கலந்து மேடையில் தோன்றி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். Officialhumansofbombay என்ற இன்ஸ்டாகிராம் வலை பக்கத்தில் இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
View this post on Instagram
“அந்த சமயத்தில் அனைவருடைய முகத்தில் ஏற்பட்ட உணர்ச்சிகளை, நாம் என் வாழ்நாளில் மறக்கவே மாட்டேன். நான் சாகரையும் அவனது மனைவி சிவானியையும் கட்டி அணைத்துக் கொண்டேன். பிறகு மேடையில் இருந்து இறங்கி முதல் வரிசையில் அமர்ந்து என்னுடைய சகோதரரின் திருமணத்தை மிகவும் மகிழ்ச்சிகரமாக கண்டு களித்தேன். இவ்வாறு ஒரு இன்ப அதிர்ச்சியை வெற்றிகரமாக செய்ததற்காக மிகவும் பெருமைப்படுகிறேன். அவன் என்னுடைய சகோதரர் மட்டுமல்லாமல் எனது மிகச் சிறந்த நண்பன். அவனுடைய மகிழ்ச்சிக்காக நான் எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்ய தயாராக உள்ளேன்” என்று அந்த பெண்மணி அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இவரின் இந்த செயலுக்கு ஆதரவாக நெகிழ்ச்சியுடன் பலர் தங்களது கருத்துக்களை பதிவிட்டாலும், திருமண நேரத்தில் மணமகனும் மணப்பெண்ணும் தான் முக்கியமானவர்கள். இந்த சமயத்தில் நீங்கள் எவ்வாறு செய்தது அவர்களின் முக்கியத்துவத்தை கெடுத்து, அனைவரும் உங்களை கவனிக்கும்படி செய்து விட்டது. இது தவறு! என பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Viral, Viral Video