Home /News /trend /

தேர்வு எழுதுவதற்காக வெள்ளப்பெருக்கில் ஆற்றைக் கடந்த மாணவி - முழு அளவு மூழ்கியும் விடாமல் முயன்று கடந்த காணொளி காட்சி!

தேர்வு எழுதுவதற்காக வெள்ளப்பெருக்கில் ஆற்றைக் கடந்த மாணவி - முழு அளவு மூழ்கியும் விடாமல் முயன்று கடந்த காணொளி காட்சி!

ஆற்றைக் கடந்த தத்தி கலாவதி மாணவி

ஆற்றைக் கடந்த தத்தி கலாவதி மாணவி

ஆற்றின் வேகத்தின் காரணமாக அந்த மாணவி மூழ்கும் நிலையிலும் சகோதரர்கள் மாணவியைத் தோளில் தூக்கி சென்ற காட்சி நெகிழ செய்துள்ளது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Andhra Pradesh, India
    ஆந்திராவில் தேர்வு எழுதச் செல்வதற்காக வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட ஆற்றில் தனது சகோதரர்களின் உதவியுடன் இறங்கிப் போராடிக் கடந்து சென்ற மாணவியின் காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது.

    கடந்த சில நாட்களாக ஆந்திர பகுதியில் தொடர் மழை  பெய்து வருகிறது. இதன் காரணமாக  முக்கியமான ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. விசாகப்பட்டினம் சம்பாவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் 21 வயதான தத்தி கலாவதி என்ற மாணவி தேர்வு எழுவதற்காக அந்த ஆற்றை நீச்சல் தெரியாமலேயே தனது சகோதரர் மற்றும் உறவினர் உதவியுடன் மூழ்கும் அளவு ஓடும் ஆற்றைக் கடந்து சென்றுள்ளார். தற்போது அந்த காணொளி இணையத்தில் வைரலாக வருகிறது.

    விசாகப்பட்டினம் கஜபதிநகரம் மண்டலத்தில் மரிவலசை கிராமத்தில் வசிப்பவர் 21 வயதான மாணவி தத்தி கலாவதி. இவருக்குச் சனிக்கிழமை அன்று விசாகப்பட்டினத்தில் தேர்வு இருந்தது. இந்த நிலையில் அவர் தேர்வு எழுதச் செல்ல முடியாத அளவிற்கு மலை பெய்து அந்த பகுதியில் அனைத்து வகையான போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டு இருந்தது. அந்த பகுதியிலிருந்து வெளியில் செல்வதற்கு சம்பாவதி ஆற்றைக் கடந்து தான் செல்லவேண்டும்.

    Also Read : வினோத உணவுகளின் ரசிகரா நீங்கள்.. உங்களுக்காகவே ஜப்பானில் பச்சை தவளை கறி காத்துகொண்டு இருக்கிறது,,!

    இதனையடுத்து சம்பாவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால்,வெள்ளிக்கிழமை அன்று அந்த மாணவி தனது சகோதரர் மற்றும் உறவினர் உதவியுடன் ஆற்றில் இறங்கிக் கடந்துள்ளார். அந்த மாணவிக்கு நீச்சல் தெரியாத நிலையில் இருவரும் மாணவியைத் தோளில் தூக்கி  சம்பாவதி ஆற்றைக் கடந்துள்ளனர்.



    இந்த சம்பவம் எதிர்முனையிலிருந்து எடுக்கப்பட்ட 35 வினாடி காணொளியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆற்றின் வேகத்தின் காரணமாக அந்த மாணவி மூழ்கும் நிலையிலும் சகோதரர்கள் மாணவியைத் தோளில் தூக்கி சென்ற காட்சி பார்ப்பவர்களை நெகிழச் செய்துள்ளது.
    Published by:Janvi
    First published:

    Tags: Andhra woman, Exam, Flood

    அடுத்த செய்தி