Home /News /trend /

மாணவ சலுகைகளைப் பெற மகளின் அடையாளத்தை திருடிய அம்மா!

மாணவ சலுகைகளைப் பெற மகளின் அடையாளத்தை திருடிய அம்மா!

பெற மகளின் அடையாளத்தை திருடிய அம்மா

பெற மகளின் அடையாளத்தை திருடிய அம்மா

தன்னுடைய வயது 22 தான் என்பதை அனைவரும் நம்பும் வகையில் நாடகம் நடத்தி இளம் வயது ஆண்களுடன் டேட்டிங் சென்றுள்ளார்.

படிப்பதற்கு வயது தடையில்லை. பல நாடுகளில் எந்த வயதாக இருந்தாலும் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. மேலும் ஒருசில நாடுகள் மாணவர்களுக்காக பிரத்தியேகமான சலுகைகளையும், கல்விக் கடன்களையும் வழங்கி வருகின்றன. மகளை பிரிந்து வாழ்ந்து வரும் ஒரு அம்மா, மகளுக்கே தெரியாமல் அவரின் அடையாளங்களைப் பயன்படுத்தி வந்துள்ளார்.

அமெரிக்காவின் மிஸௌரியில் உள்ள மவுண்டைன் வியூ என்ற சிறிய ஊரைச் சேர்ந்தவர ஓக்லெஸ்பி என்ற பெண்மணி. இவர் தன்னுடைய மகளின் அடையாளச் சான்றுகளை முறைகேடாக பயன்படுத்தியுள்ளார். ஓக்லெஸ்பி, தன்னுடைய மகள் லாரென் ஹேஸ் அடையாளத்தை பயன்படுத்தி கல்லூரியில் சேர்ந்து, தன்னை இளம் வயது பெண்ணாக காட்டிக்கொண்டு பல்வேறு பித்தலாட்டங்களை செய்தது கண்டறியப்பட்டுள்ளது.

மேலோட்டமாக பார்க்கும் பொழுது இவர் படிப்பதற்காக தான் மகளுடைய அடையாள சான்றுகளை பயன்படுத்தியுள்ளார் என்பது போல தெரிகிறது. ஆனால் இவர் மிகவும் சாமர்த்தியமாக திட்டமிட்டு தன்னுடைய ஊரில் இருப்பவர்களை மட்டுமல்லாமல் அரசாங்கத்தையே ஏமாற்றியுள்ளார் என்பதை நியூயாரக் போஸ்ட் தெரிவித்துள்ளது.

ஏவரி மற்றும் வெண்டி பார்க்கர் என்ற ஜோடியுடன் இவர் மவுண்டன் வியூ என்ற இடத்தில் வசிக்கத் தொடங்கியுள்ளார். தான் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாவும் அதில் இருந்து தப்பித்து தனியாக வாழ்ந்து வருகிறார் என்றும் கதை கட்டிய ஓக்லெஸ்பிக்கு இந்த ஜோடி அடைக்கலம் கொடுத்துள்ளது. லாரென் ஹேஸ் என்ற தன் மகளின் பெயரையே தன்னுடைய பெயராக உள்ளூர்வாசிகளிடம் கூறியிருக்கிறார. உள்ளூர்வாசிகள் அனைவருமே இவரை லாரன்ஸ் என்ற பெயரிலேயே அழைத்து வந்தனர். மேலும் இவர் அந்த ஊரில் இருக்கும் ஒரு சிறிய நூலகத்திலும் பணியாற்றி வந்துள்ளார்.

இது மட்டுமின்றி தன்னுடைய வயது 22 தான் என்பதை அனைவரும் நம்பும் வகையில் நாடகம் நடத்தி இளம் வயது ஆண்களுடன் டேட்டிங் சென்றுள்ளார். ஒரு இடத்தில் தவறு செய்யத் தொடங்கினால் எல்லா இடத்திலும் அதை முறையாக பின்பற்ற வேண்டும் என்பதை நன்கு உணர்ந்த ஓக்லெஸ்பி சமூக வலைத்தள கணக்குகளும் தன்னுடைய மகள் பெயரிலேயே இயங்கி வந்தார். தோற்றத்தையும் இளமையாக காட்ட முயற்சித்து இளம் பெண்களுடைய வாழ்க்கைமுறை, ஆடை, மேக்கப் மற்றும் பெர்சனாலிட்டி என்று முழுமையாக பின்பற்றி உள்ளார்.

சவுத் வெஸ்ட் பாப்டிஸ்ட் பல்கலைக்கழகத்தில் மகளுடைய சோஷியல் செக்யூரிட்டி கார்டை பயன்படுத்தி அவரின் பெயரிலேயே ஒரு மாணவியாக சேர்ந்துள்ளார் அதேபோல தன்னுடைய மகளின் பெயரில் ஒரு வாகன லைசன்ஸும் பெற்றுள்ளார். மாணவியாக தன்னை காட்டிக் கொண்ட இந்தப் பெண்மணி அரசாங்கம் வழங்கும் மாணவர்களுக்கான நிதி உதவி, உதவித்தொகை, கிராண்ட் என்று இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 25 லட்ச ரூபாய்க்கும் மேலாக பெற்றுள்ளார்.

Also read... தயிர் பாக்கெட் வாங்குவதற்காக இடையில் ரயிலை நிறுத்தியதால் வேலையை இழந்த ஊழியர்!

சோசியல் செக்யூரிட்டி கார்டுகளை பற்றிய விசாரணைகளை அவ்வபோது அமெரிக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும். அப்படி ஒரு விசாரணையின் போது, மாணவர் பெயரில் நிதி மோசடி என்று சந்தேகித்த போலீஸ், ஓக்லெஸ்பியை விசாரித்தது. முதலில் குற்றம் செய்ததை மறுத்தாலும், பின்னர் தவறு செய்ததாக ஒப்புக் கொண்டுவிட்டார். அதற்கு பிறகு இவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்

தானாகவே தவறை ஒப்புக் கொண்டதற்காக தற்போது 5 ஆண்டுகள் மட்டுமே சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர் வேறு ஒருவரின் அடையாளத்தைப் பயன்படுத்தி குற்றம் நிரூபிக்கப்பட்டு விட்டதால், பல்கலைக்கழகத்திற்கு அவர் பெற்ற உதவித்தொகை மற்றும் ஸ்காலர்ஷிப் தொகை ஆகியவற்றை திருப்பி செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Trending

அடுத்த செய்தி