Home /News /trend /

‘அய்யய்யோ அப்போ கொரோனா, இப்போ போர்’... தப்பிக்க வழி தேடிய பெண்மணியின் பலே ஐடியா! 

‘அய்யய்யோ அப்போ கொரோனா, இப்போ போர்’... தப்பிக்க வழி தேடிய பெண்மணியின் பலே ஐடியா! 

rowan mackenzie tiktok

rowan mackenzie tiktok

Tiktoker Rowan Mackenzie | அடுத்த நாள் என்ன நடக்கும் என்பது நம் அனைவருக்குமே தெரியாது. அழிவுக்கான நாளை எதிர்கொள்ள அனைவருமே தயாராக இருப்பது நல்லது.

வரலாற்று ரீதியாக பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை இயற்கை பேரழிவு ஏற்பட்டு உலகம் அழிந்ததாகவும், அதன் பின்னர் புதிய உயிர்கள் தொடங்கியதாகவும் அறிவியல் ரீதியாக படித்திருப்போம். தற்போது இயற்கையை அழித்து வரும் மனித இனத்தால் அவ்வப்போது கணிக்கவே முடியாத இயற்கை சீற்றங்கள் ஏராளமாக நடந்து வருகின்றன. மனிதனால் கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து வரும் உலகம் வெப்பமயமாதல், காற்று மாசு, அணு உலை, போர், தண்ணீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பல காரணங்களால் பேரழிவுக்கு ஆளாகலாம் என இயற்கை ஆர்வலர்கள் பலரும் நம்புகின்றனர்.

ரஷ்யா - உக்ரைன் இடையே கடுமையாக சண்டை நடந்து வருகிறது. உலக நாடுகளின் கண்டனங்களையும் கடந்து போரை தொடர்ந்து வரும் ரஷ்யா, எங்கே மூன்றாம் உலகப்போரை மூள வைத்துவிடுமோ என மக்கள் அச்சத்தில் உள்ளனர். பேரழிவில் இருந்து தப்பிப்பதற்காக 38 வயதான பெண்மணி ஒருவர் வீட்டில் பங்கர் ஒன்றை வடிவமைத்து, அதில் தண்ணீர், உணவு, ஆயுதங்கள் ஆகியவற்றை சேமித்து வைத்துள்ள விநோத சம்பவம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

38 வயதான ரோவன் மெக்கென்சி என்பவர் டிக்-டாக்கில் தனது பதுங்கு குழி பற்றி வெளியிட்ட ஒரே ஒரு வீடியோ மூலமாக உலக பேமஸ் ஆகியுள்ளார். தற்போது டிக்-டாக் செலிபிரிட்டியாகவும் கலக்கி வருகிறார். ஹாலிவுட் படங்களில் காண்பிப்பது போல் உலகம் என்றாவது ஒருநாள் பேரழிவை சந்திக்க நேர்ந்தால் எப்படி நம்மை காத்துக்கொள்வது? என்ற சந்தேகம் நாம் அனைவருக்கும் இருக்கும். அப்படித்தான் 11 ஆண்டுகளுக்கு முன்பு ரோவன் மெக்கென்சிக்கும் தோன்றியுள்ளது.எனவே எப்படிப்பட்ட பேரழிவு ஏற்பட்டாலும் தன்னை காத்துக்கொள்ள வேண்டும் என முடிவெடுத்து, தனது வீட்டின் அடித்தளத்தில் பங்கர் எனப்படும் பதுங்கு குழியை உருவாக்கியுள்ளார். அத்தோடு அதில் இரண்டு ஆண்டுகளுக்குத் போதுமான அளவு தண்ணீர் மற்றும் உணவு பொருட்களை சேமித்து வைத்திருக்கிறார். இதன் கட்டுமானத்திற்காக 7 ஆயிரத்து 650 கிலோ எடையுள்ள பொருட்களை பயன்படுத்தியிருக்கிறார்.

Also Read : வீடு இன்றி, தெருவோரத்தில் வசித்த நபரை காதலித்து திருமணம்.. வைரலாகும் இளம் பெண்ணின் காதல் கதை

மேலும் பல்வேறு சோதனைகளை முயற்சித்து, நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க கூடிய, உணவு பொருட்களை முறையாக சேமித்து வைக்கவும் கற்றுக்கொண்டுள்ளார். ஒரு குடும்பத்திற்கு 3 முதல் 2 ஆண்டுகளுக்கு தேவையான அரிசி, பீன்ஸ் உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் தண்ணீரை சேமித்து வைத்துள்ளார்.ரோவனின் இந்த பேரழிவில் இருந்து தப்பி வாழும் முயற்சி வெறும் உணவு மற்றும் தண்ணீர் உடன் முடிந்துவிடவில்லை. பாதுகாப்பு காரணத்திற்காக பல ஆயுதங்களையும் வாங்கி, பத்திரப்படுத்தியுள்ளார்.

Also Read : வீட்டை விற்க மறுத்த மூதாட்டி - Shopping Mall Developer எடுத்த முடிவு!

இதுகுறித்து ரோவன் கூறுகையில், “அடுத்த நாள் என்ன நடக்கும் என்பது நம் அனைவருக்குமே தெரியாது. அழிவுக்கான நாளை எதிர்கொள்ள அனைவருமே தயாராக இருப்பது நல்லது. போர் மூளும் போது உணவு பற்றாக்குறை ஏற்பட்டு, விலை உச்சத்தில் இருக்கும் என்பதால் இப்படியொரு இடத்தை முன்கூட்டியே தயார்ப்படுத்தி வைத்துக்கொள்வது நல்லது” எனத் தெரிவித்துள்ளார்.
Published by:Selvi M
First published:

Tags: Trending

அடுத்த செய்தி