Home » News » Trend

கடையில் பொருளை திருடிவிட்டு குழந்தையை மறந்துவிட்டுச் சென்ற பெண்கள் - சிசிடிவி காட்சிகள்

கடையில் பொருளை திருடிவிட்டு குழந்தையை மறந்துவிட்டுச் சென்ற பெண்கள் - சிசிடிவி காட்சிகள்
சிசிடிவி காட்சிகள்
  • News18
  • Last Updated: August 27, 2019, 2:20 PM IST
  • Share this:
குழந்தைகளுக்கான பொருட்கள் விற்கும் கடைக்கு வந்த 3 பெண்கள், குழந்தையை உட்காரவைத்துச் செல்லும் தள்ளுவண்டியை திருடியுள்ளனர். ஆனால், அவர்கள் தங்களுடன் கூட்டி வந்த குழந்தையை கடையிலேயே விட்டுச் சென்றனர். இந்த சிசிடிவி காட்சிகளை கடை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தின் மிடில்டவுன் நகரில் குழந்தைகளுக்கான பொருட்கள் விற்கும் கடை ஒன்று உள்ளது. இந்த கடைக்கு 3 குழந்தைகளுடன், 3 பெண்கள் சென்றுள்ளனர். பொருட்கள் வாங்குவது போல அந்த பெண்களில் 2 பேர் கடை ஊழியரிடம் பேச்சு கொடுத்துள்ளனர். அந்த நேரத்தில் 3வது பெண் அங்கிருந்த ஸ்டிராலர் (குழந்தையை உட்கார வைத்துக் கொண்டு செல்லும் தள்ளுவண்டி) ஒன்றை யாருக்கும் தெரியாமல் திருடிக் கொண்டு கடையை விட்டு வெளியேறினார்.

இதனை அடுத்து மற்ற இரண்டு பெண்களும் கடையில் இருந்து வெளியேறியுள்ளனர். ஆனால், திருடிய பெண் தன்னுடன் வந்த குழந்தையை மறந்து கடையிலேயே விட்டுவிட்டு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்தே அவர்களுக்கு குழந்தையை கடையில் விட்டுச்சென்றது தெரியவந்துள்ளது. சில நிமிடங்கள் கழித்து மீண்டும் கடைக்குள் வந்த அந்தப் பெண் கடைக்கு வந்து குழந்தையை அழைத்துச் செல்கிறார்.


இந்த வீடியோக்களை கடையின் உரிமையாளர் சமூக வலைதளத்தில் வெளியிட, வைரலாக பரவி வருகிறது.



இதுபற்றி கடை உரிமையாளர் எனெலியோ ஆர்டிகா கூறுகையில், “வாழ்வதற்காக ஒரு பொருளை திருட வேண்டிய தேவை உங்களுக்கு ஏற்பட்டால் அது தனிப்பட்ட பிரச்னை. தனிப்பட்ட விவகாரம். ஆனால் என்ன நடக்கிறது என்பது தெரியாத குழந்தைகளை நீங்கள் கொண்டு வருவது, பின்பு அதனை கவனிக்காமல் விட்டு செல்வது ஆகியவை என்னை அதிகம் பாதித்து விட்டது. அதனாலேயே இந்த வீடியோவை நான் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த திருட்டிலும் ஒரு சுவாரஸ்யம் நடந்துள்ளது. அந்தப் பெண் எடுத்து சென்ற ஸ்டிராலர் உண்மையில் 300 அமெரிக்க டாலர் மதிப்புடையது. ஆனால் அவர் எடுத்து சென்ற ஸ்டிராலருக்கு பின்னால் இருந்த மற்றொரு ஸ்டிராலர் 1000 அமெரிக்க டாலர் விலை கொண்டது என எனெலியோ கூறினார்.

இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு 3 பேரில் 2 பெண்களை பிடித்து வழக்குப்பதிவு செய்து பொருளை மீட்டுள்ளனர்.
First published: August 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading