ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

காரில் உற்சாகமாக அமர்ந்து செல்லும் ஏலியன்..? - கூகுள் எர்த் செயலில் பதிவானதாக பெண் வெளியிட்ட புகைப்படம் வைரல்...

காரில் உற்சாகமாக அமர்ந்து செல்லும் ஏலியன்..? - கூகுள் எர்த் செயலில் பதிவானதாக பெண் வெளியிட்ட புகைப்படம் வைரல்...

ஏலியன்

ஏலியன்

காரின் பின் இருக்கையில் அமர்ந்து வந்த ஏலியன் போன்ற உருவத்தைப் பெண் ஒருவர் கூகுள் எர்த் மூலம் கண்டறிந்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • interna, IndiaAmericaAmerica

  கூகுள் எர்த் என்னும் செயலி மூலம் பெண் ஒருவர் ஏலியன் போன்ற உருவத்தை காரின் பின் இருக்கையில் பார்த்துள்ளார். அவர் பதிவிட்ட ஏலியன் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

  கூகுள் எர்த் செயலி மூலம் நாம் உலகின் எந்த பகுதியை வேண்டுமானாலும் பார்க்க முடியும். கூகுள் நிறுவனத்தின் ஒரு முக்கிய சேவையாகக் கூகுள் எர்த் இருக்கிறது. சாட்டிலேட் மூலம் கொடுக்கப்படும் புகைப்படங்களைப் பார்ப்பதும் அதன் மூலம் சுவாரஸ்யமான தகவலைப் பெறுவதைச் சிலர் வழக்கமாகவே வைத்துள்ளனர்.

  அப்படியிருக்க அமெரிக்காவில் ஒரு பெண் கூகுள் எர்த் செயலியை பயன்படுத்தி ஏலியனை கண்டறிந்துள்ளார். கிரிஸ்டல் பேட்டர்சன் என்ற அந்த பெண், கார்களை பழுதுபார்க்கும் விற்பனை நிலையத்தை தேடுவதற்காகக் கூகுள் எர்த் செயலியை உபயோகப்படுத்தியுள்ளார். அப்போது சாலையில் கார் ஒன்றை ஒருவர் சட்டை இல்லாமல் ஓட்டிச் செல்வதைப் பார்த்து, காரை சூம் செய்து பார்த்துள்ளார்.

  அவர் வெளியிட்ட புகைப்படம்

  அதில் தான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரில் பின் இருக்கையில் ஏலியன் போன்ற உருவம் அவருக்கு தென்பட்டுள்ளது. அதனை அப்படி ஸ்கிரீன் ஷாட் எடுத்து அவரின் சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த நிகழ்வு அமெரிக்காவின் மைனே என்ற இடத்தில் உள்ள மாப்பிள்டன் பகுதியில் நடந்துள்ளது.

  Also Read : ஒலிம்பிக்கில் சேருங்க... வைரலாகும் ஆணி அடிக்கும் விளையாட்டு வீடியோ

  அந்த பதிவில், யாராவது நான் பின் இருக்கையில் என்ன பார்க்கிறேன் என்று சொல்ல முடியுமா என்று கேட்டுள்ளார். அவர் பதிவிட்ட படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். அந்த புகைப்படம் பார்ப்பவருக்குச் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. புகைப்படத்திற்குப் பலர் அவர்களின் வியப்பான கருத்துக்களை வழங்கி வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

  இது போன்று கூகுள் மேப்ஸ் மூலம் ஏலியன் தென்பட்ட நிகழ்வுகள் கடந்த சில வருடங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த வருடம் நியூ யார்க்கில் உள்ள தோட்டத்தில் ஒரு உருவம் கூகுள் மாப்ஸ் மூலம் தென்பட்டது. அதே போல், பசிபிக் பகுதியில் செல்லும் விமானங்களின் விமானிகளும் ஏலியன் போன்ற உருவங்களை அவ்வப்போது கண்டதாகத் தெரிவித்துள்ளனர்.

  Published by:Janvi
  First published:

  Tags: Alien, America, Viral News