"படுக்கையில் இருந்த பேய்" விர்ச்சுவல் டூரில் அதிர்ச்சியடைந்த பெண்!

விர்ச்சுவல் டூரில் அதிர்ச்சியடைந்த பெண்

டிக் டாக்கில் அவர் பகிர்ந்துள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

  • Share this:
விர்ச்சுவல் டூர் மூலம் வாடகைக்கு வீடு தேடிய பெண், அந்த வீட்டின் படுக்கையில் பேய் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

கொரோனா அச்சுறுதல் இருப்பதால் அனைத்து சேவைகளும் ஆன்லைன் வழியாகவே மேற்கொள்ளப்படுகின்றன. அமெரிக்காவில் வீடு வாடகைக்கு தேவைப்பட்டால், குறிப்பிட்ட வீட்டை விர்ச்சுவல் டூர் மூலம் பார்வையிட்டு, பிடித்திருந்தால் ஓகே சொல்லலாம். அப்படி, வீடு ஒன்றை வாடகைக்கு தேடிய பெண்ணுக்கு நேர்ந்த எதிர்பாராத அனுபவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

Streeteasy வழியாக அப்பார்ட்மென்ட் தேடிய பெண், அந்த வீட்டின் படுக்கையில் பெண் ஒருவர் படுத்திருப்பதை பார்த்துள்ளார். சிறிது நேரத்தில் அந்த பெண் உருவம் அங்கு இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், பேய் என நினைத்துள்ளார். சாரா வாண்டர்பிட் (Sarah Vanderbilt) என்ற பெண் டிக்டாக்கில் பிரபலமாக உள்ளார், அவரது ஐடியில் பகிரப்பட்ட வீடியோவில், வெர்ச்ஷூவல் டூர் மூலம் அப்பார்மென்ட் ஒன்றை பார்வையிடுகிறார். மிகவும் காஸ்டிலியாக வடிவமைக்கப்பட்ட அந்த வீட்டின் அனைத்து அறைக்களுக்குள்ளும் சென்று பார்வையிடுகிறார். அங்கு பார்வையிட்டபிறகு உடனடியாக பெட்ரூமுக்குள் செல்ல திரும்பும்போது படுக்கையில் பெண் ஒருவர் படுத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சில நொடிகள் தடுமாற்றத்துக்குப் பிறகு மீண்டும் அந்த பகுதியை பார்க்கும்போது, படுகையில் பெண் இல்லை. இதனால், அதிர்ச்சிடைந்த சாரா வாண்டர்பிட் பேயாக இருக்கலாம் என பயந்துள்ளார். டிக் டாக்கில் அவர் பகிர்ந்துள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. லைக்குகளையும், கமெண்டுகளையும் பதிவிட்டு வரும் நெட்டிசன்கள், அப்பார்மென்ட் வாங்குபவர்களுக்கு பேய் இலவசம் எனத் தெரிவித்துள்ளனர். மற்றும் சிலர், பேய் அப்பார்ட்மென்ட் உங்களின் வருக்கைக்காக காத்திருக்கிறது என்றும், விர்ச்சுவல் ரியாலிட்டி டூரில் பெண் உருவம் எப்படி? தெரியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Also read... GPS மூலம் பறவைகள் துல்லியமாக கண்காணிப்பு - ஆய்வாளர்கள் மகிழ்ச்சி!

மேலும், டிக் டாக் வீடியோவுக்காக எடுக்கப்பட்டுள்ள வெர்ச்ஷூவல் டூராக இருக்கலாம் எனக் கூறியுள்ள நெட்டிசன்கள், இதில் அச்சமடைய ஒன்றும் இல்லை எனக் கூறியுள்ளனர். தன்னுடைய அனுபவம் குறித்து சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ள சாரா வாண்டர்பாட், "வாடகைக்காக வீடு ஒன்றை தேடிக் கொண்டிருந்தேன். streeteasy வலைதளம் வழியாக 3டி இமேஜில் வீட்டை பார்வையிட்டேன். பார்ப்பதற்கு மிகவும் காஸ்டிலியாக இருந்தது. திடீரென பெட்ரூமை பார்க்கச் செல்லும்போது பெண் ஒருவரின் உருவம் தெரிந்தது. சில நொடிகளில் அந்த உருவம் காணாமல் போனதால் பயந்துவிட்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், அந்த வீடியோவில் இருந்த பெண் விளக்கம் அளித்துள்ளார். வீடியோவில் இருக்கும் அப்பார்ட்மென்ட் தன்னுடையது என்றும், நான் தான் வீடியோவில் இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார். அவருக்கு சாரா வாண்டர்பாட் அளித்துள்ள பதிலில், என்னுடைய வீடியோ உங்கள் கவனதுக்கு வந்தது மகிழ்ச்சி, இந்த நாளையும் நீங்கள் வேடிக்கையான நாளாக மாற்றிவிட்டீர்கள் என தெரிவித்துள்ளார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: