Home /News /trend /

ரூ.2.5 லட்சத்துக்கு ஆன்லைனில் திருமண உடையை வாங்கிய பெண் - கடைசியில் ஏமாற்றமே மிச்சம்

ரூ.2.5 லட்சத்துக்கு ஆன்லைனில் திருமண உடையை வாங்கிய பெண் - கடைசியில் ஏமாற்றமே மிச்சம்

ரூ.2.5 லட்சத்துக்கு திருமண ஆன்லைனில் உடையை வாங்கிய பெண்

ரூ.2.5 லட்சத்துக்கு திருமண ஆன்லைனில் உடையை வாங்கிய பெண்

திருமண உடைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து அதிக செலவு செய்வதில் இந்திய பெண்கள் முன்னணியில் இருப்பார்கள் என்றாலும் கூட, வெளிநாட்டுப் பெண்களும் கூட இதில் விதிவிலக்கு இல்லை. அதை உறுதி செய்யும் வகையிலான நிகழ்வு அண்மையில் நிகழ்ந்திருக்கிறது.

மேலும் படிக்கவும் ...
    பெண்கள் தங்களுடைய திருமண உடைக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தன் வாழ்நாளில் அதுவரை இல்லாத அளவுக்கு அழகாக, ஒரு தேவதையைப் போல காட்சியளிக்க வேண்டும் என்பது அனைத்து இளம்பெண்களின் ஆசையாக இருக்கும். அதற்காக திருமண உடையை பார்த்து, பார்த்து தேர்வு செய்வார்கள். பெரும்பாலும் சில பல ஆயிரங்களில் தொடங்கி, லட்சங்களில் கூட திருமண உடையை வாங்குகின்றனர்.

    இப்படி திருமண உடைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து அதிக செலவு செய்வதில் இந்திய பெண்கள் முன்னணியில் இருப்பார்கள் என்றாலும் கூட, வெளிநாட்டுப் பெண்களும் கூட இதில் விதிவிலக்கு இல்லை. அதை உறுதி செய்யும் வகையிலான நிகழ்வு அண்மையில் நிகழ்ந்திருக்கிறது.

    ரூ.2.5 லட்சத்திற்கு உடை

    கெல்லி மேரி கேம்பல் என்ற பெண்ணுக்கு, தனது திருமண உடை மிக ஆடம்பரமாக, பிரம்மிப்பூட்டும் வகையில் இருக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. இவருக்கு திருமணத் தேதி நிச்சயிக்கப்பட்டு, கொரோனா பெருந்தொற்று காரணமாக 3 முறை திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. இறுதியாக கடந்த 31ஆம் தேதி இவருக்கு திருமணம் நடைபெற்று முடிந்தது. இந்தத் திருமணத்திற்காக ரூ.2.5 லட்சம் மதிப்பிலான உடையை கெல்லி மேரி வாங்கியிருந்தார். ஆனால், அவரது உடல் அளவைக் காட்டிலும் 3 மடங்கு பெரியதாக இருந்த அந்த உடை அவருக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.

    முன்கூட்டியே ஆர்டர் செய்யப்பட்ட உடை

    திருமணத்திற்கான உடையை ஸி பிரைடல் என்னும் நிறுவனத்திடம் வாங்குவதற்கு கெல்லி மேரி முடிவு செய்தார். இந்த நிறுவனத்திற்கான உடையை, இஸ்ரேலை அடிப்படையாகக் கொண்ட ரிகி தலால் என்ற டிசைனர் நிறுவனம் உற்பத்தி செய்து கொடுக்கிறது. இவர்களுடைய உற்பத்தி பிரிவு ஒன்று உக்ரைனில் செயல்பட்டு வருகிறது.

    ALSO READ |   குடிபோதையில் கல்யாணத்தையே மறந்த மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. பேச்சலர் பார்ட்டியால் ட்விஸ்ட்..

    போர் காரணமாக தாமதம்

    கெல்லி மேரி தனது திருமண உடைக்கு முன்கூட்டியே ஆர்டர் செய்திருந்த நிலையில், திருமணத்திற்கு 6 முதல் 8 வாரங்கள் முன்பாக அது வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திருமணத்திற்கு 4 வாரங்கள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையிலும், உடை வந்து சேரவில்லை. இதனால், கெல்லி மேரி பதற்றம் அடையத் தொடங்கினார்.

    இதைத் தொடர்ந்து ஸி பிரைடல் நிறுவனத்தை அவர் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசினார். ஆனால், அவர்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்றும், காத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். இதற்கிடையே, மேலும் ஒரு வாரம் கழிந்து விட்டது. இப்போது திருமணத்திற்கு 3 வாரம் மட்டுமே எஞ்சியிருந்தது. அப்போது, உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதன் காரணமாக, உக்ரைன் எல்லையில், திருமண உடையின் பார்சல் சிக்கிக் கொண்டுள்ளது என்று கெல்லி மேரிக்கு தகவல் தெரிவித்தனர்.

    ஏமாற்றமே மிச்சம்

    பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு, ஒரு வழியாக திருமணத்திற்கு ஒரு வாரம் எஞ்சியிருந்த நிலையில் உடை வந்து சேர்ந்தது. ஸி பிரைடல் நிறுவனத்திற்கு வந்து டிரையல் பார்த்துக் கொள்ளுமாறு கெல்லி மேரிக்கு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, கடைக்குச் சென்று உடையை அணிந்து பார்த்த அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

    ALSO READ |  11ஆம் வகுப்பு மாணவியை பஸ் ஓட்டுவதற்கு அனுமதித்த டிரைவர் - சர்ச்சையில் சிக்கிய விபரீத முயற்சி
     

    அதாவது, கெல்லி மேரியின் உடல் அளவைக் காட்டிலும் மூன்று மடங்கு பெரியதாக அது இருந்தது. இதுகுறித்து பிரைடல் நிறுவனத்திடம் அவர் கேட்டபோது, நீங்கள் முன்பு இருந்ததை விட இப்போது எடை குறைந்துவிட்டீர்கள் என்று பதில் அளித்தார்களாம்.

    ஆல்டர் செய்தும் பயனில்லை

    அளவில் பெரியதாக இருந்த உடைக்கு, கூடுதல் கட்டணம் செலுத்தி ஆல்டரேசன் செய்தார் கெல்லி மேரி. அதற்குப் பிறகும் கூட, அந்த உடை அவருக்கு சௌகரியமானதாக இல்லை. திருமணம் செய்ய திட்டமிடும் இளம்பெண்கள் யாரும் தன்னைப் போல ஆன்லைனில் ஆர்டர் செய்து ஏமாந்துவிடக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார் அவர்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Viral Video

    அடுத்த செய்தி