உடலுறவு வைத்துக்கொள்ளாமல் தூங்கியவரை பழிவாங்க வீட்டிற்கு தீ வைத்த பெண்!

நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த துணையை தைஜா ரஸ்ஸெல் உடலுறவுக்கு அழைத்துள்ளார். ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததால் உடலுறவு கொள்வதற்கு ரஸ்ஸெல்லின் துணை மறுத்துவிட்டார்.

news18
Updated: August 21, 2019, 7:27 PM IST
உடலுறவு வைத்துக்கொள்ளாமல் தூங்கியவரை பழிவாங்க வீட்டிற்கு தீ வைத்த பெண்!
வீடு
news18
Updated: August 21, 2019, 7:27 PM IST
ஆம்.. நீங்கள் படித்த தலைப்பு சரிதான். நியூஜெர்ஸியைச் சேர்ந்த பெண், ஒருவரை உடலுறவுக்கு அழைத்திருக்கிறார். ஆனால் அவர் அதை நிராகரித்து உறங்கச் சென்றதால் ஆத்திரத்தில் வீட்டைக் கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

29 வயதான தைஜா ரஸ்ஸெலுக்கு, நியூஜெர்ஸியைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே உறவு இருந்துவந்துள்ளது. அண்மையில், நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த துணையை தைஜா ரஸ்ஸெல் உடலுறவுக்கு அழைத்துள்ளார். ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததால் உடலுறவு கொள்வதற்கு ரஸ்ஸெல்லின் துணை மறுத்துவிட்டார்.  இதனால் ஆத்திரமடைந்த தைஜா கண்டபடி திட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அப்படியிருந்தும் அவர், தூங்குவதில் தீவிரமாக இருந்துள்ளார். வீட்டை விட்டு வெளியேறியும் அவரால் அந்த நிராகரிப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இதற்கு தக்க பதில் தர வேண்டும் அவரை தூக்கத்தை விட்டு பதறி அடித்துகொண்டு வெளியேறும்படி செய்ய வேண்டும் என நினைத்துள்ளார். இதற்காக கொஞ்சம் மண்ணென்னெய் , லைட்டரை வாங்கியுள்ளார். வீட்டின் கூரை மேல் மண்ணெய் ஊற்றி வீட்டை பற்ற வைத்துள்ளார். தீ மளமளவென பற்றி எரியத் தொடங்கியுள்ளது. திடீரென விழித்துக்கொண்ட அவர் வீடு பற்றி எரிவதை கண்டறிந்து வீட்டு மர ஜன்னலை உடைத்துகொண்டு வெளியேறியதில் உயிர் தப்பியுள்ளார்.


இந்த சம்பவம் காலை நான்கு மணியளவில் நடந்துள்ளது. உடனே போலீஸ் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்துள்ளனர். சுமார் 4.30 மணியளவில் சம்பவ இடத்தை அடைந்துள்ளனர். விசாரணையில், அவர் அந்த பெண்ணுக்கும் இளைஞருக்கு தகாத உறவு இருந்ததும், அவர்தான் உடலுறவுக்கு அப்பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டு தூங்கியதாகவும் தெரிய வந்துள்ளது. அந்த கோபத்தில்தான் தைஜா இவ்வாறு நடந்துகொண்டுள்ளார் என்று நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

Watch Also:
First published: August 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...