’காதலுக்கு கண் இல்லை’ என்ற வசனத்தை உங்கள் வாழ்வில் அடிக்கடி நீங்கள் கேட்டிருப்பீர்கள். இந்த வாசகத்துடன் ஒத்துப் போகிறார் போல காதல் கதை ஒன்றை உங்கள் நிஜ வாழ்க்கையிலும் பார்த்திருக்கக் கூடும். இவ்வளவு ஏன்? பெரும்பாலான தமிழ் சினிமாக்களில் மிக ஏழையான ஹீரோவை, பெரிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ஹீரோயின் காதலித்து திருமணம் செய்வதாகத் தான் கதையம்சம் இருக்கும்.
அப்படியொரு அனுபவ கதையை பெண் ஒருவர் இன்டர்நெட்டில் பகிர்ந்து கொள்ள, அந்தச் செய்திதான் இப்போது டிரெண்டிங் ஆக உள்ளது. குறிப்பாக, சாலையோரத்தில் ஆதரவற்று இருப்பவர் யாரை பார்த்தாலும், நாம் உடனே மனமிறங்கி உதவி செய்வோம். அப்படியொரு சூழலில் பார்த்த ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறுகிறார் இந்தப் பெண். இப்போது உங்கள் மனதில் சட்டென்று ‘பிச்சைக்காரன்’ திரைப்படக் கதை நினைவில் வந்திருக்கும். ஆமாம், இந்தக் காதல் அனுபவமும் ஏறக்குறைய அதுபோல தான் இருக்கிறது.
ஜாஸ்மின் குரோகன் என்ற பெண் சில ஆண்டுகளுக்கு முன்பு, உணவுப் பொருட்களை வாங்குவதற்காக சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்றார். அங்கு, கடைக்கு வெளியே ஆதரவற்ற நபர் ஒருவர் இருப்பதை பார்த்த அவர், அந்த நபர் மீது இரக்கம் கொண்டு கொஞ்சம் பணத்தை வழங்கினார். ஆனால், அந்த நபர் பணத்தை பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்.
இதையடுத்து, கடைக்கு உள்ளே சென்று தனக்கு தேவையான பொருட்களை ஜாஸ்மின் குரோகன் வாங்கினார். அப்போதும், வெளியே சந்தித்த அந்த நபர் குறித்த நினைவுகள் மனதை விட்டு அகலவில்லை. மீண்டும் வெளியே வந்த போது, அதே நபரை பார்த்து, உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்படுகிறதா என்று ஜாஸ்மின் கேட்டார். ஆனால், அந்த நபர், “எனக்கு உதவி தேவையில்லை. வேண்டுமானால் சொல்லுங்கள், உங்களுக்கு உதவுகிறேன்’’ என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், ஜாஸ்மின் வாங்கிய பொருட்களை காரில் ஏற்றி வைப்பதற்கு உதவி செய்தார்.
Also Read : பதைப்பதைக்கும் வீடியோ: பைக் மோதி, பஸ் நொறுக்கி உயிர் தப்பிய சிறுவன்
ஜாஸ்மினுக்கு உதவி செய்த நபரின் பெயர் மெக்காலே முர்சி ஆகும். இவர் தான், தன் வாழ்க்கைத் துணையாக வரப் போகிறவர் என்று ஜாஸ்மின் கற்பனை கூட செய்திருக்கவில்லை. இருப்பினும், அதே நபரை மீண்டும், மீண்டும் சந்தித்தபோது ஜாஸ்மினுக்கு அவர் மீது கரிசனம் ஏற்பட்டது.
இதையடுத்து, ஒரு நாள் இருவரும் ரெஸ்டாரண்டில் ஒன்றாக சேர்ந்து இரவு உணவு சாப்பிட்டனர். அப்போது, வாழ்க்கை அனுபவங்கள் குறித்த பேச்சு வெகுநேரம் நீடித்தது. சில நாட்கள் கழித்து, மெக்காலேவுக்கு ஃபோன் ஒன்றை பரிசளித்தார் ஜாஸ்மின். இதைத் தொடர்ந்து, இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில், இறுதியாக அது காதலில் வந்து சேர்ந்தது.
Also Read : டிக் டாக் வீடியோ மூலம் பெரும் ஆபத்தில் இருந்து தப்பிய நபர்..
பின்னாளில் ஜாஸ்மினும், மெக்காலேவும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளன. இதற்கிடையே, மெக்காலேவும், அவரது தகுதிக்கு ஏற்றாற்போல வேலையில் சேர்ந்து விட்டார். தன் வாழ்க்கையை மிக மகிழ்ச்சிக்கு உரியதாக மெக்காலே மாற்றியிருப்பதாகவும், அவரின்றி இப்போது வாழ்க்கையை கற்பனை கூட செய்ய முடியாது என்று ஜாஸ்மின் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Love marriage, Trending