Home /News /trend /

கல்யாணத்தில் அவமானப்பட்ட மணமகள்.. கடுப்பாகி அடுத்தநாளே வேலையை உதறிய சீனப்பெண்.. அப்படி என்ன நடந்துச்சு?

கல்யாணத்தில் அவமானப்பட்ட மணமகள்.. கடுப்பாகி அடுத்தநாளே வேலையை உதறிய சீனப்பெண்.. அப்படி என்ன நடந்துச்சு?

திருமணம்

திருமணம்

திருமண நாள் அன்று, மணமகள் பணியாளரைத் தவிர, வேறு யாரும் வரவில்லை 70 பேரை அழைத்து ஒருவர் மட்டுமே வந்துள்ளார் என்று மிகவும் சங்கடப்பட்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai |
திருமண நிகழ்வுகள் மக்களின் வாழ்வில் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாகும். ஆனால் சீனாவில் ஒரு பெண்ணுக்கு, அவரது திருமணம் வேறொரு காரணத்திற்காக மறக்கமுடியாததாக மாறியுள்ளது. தனது திருமணத்திற்கு தன்னுடன் பணியாற்றுபவர்கள் யாரும் வராததால் அடுத்த நாளே வேலையை விட்டு நின்றுள்ளார்.

சீனாவில் ஒரு பெண் , ஒரு நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகளாக பணியாற்றுகிறார். அலுவலகத்தில் எல்லோருடனும் நட்பாக பழகினாலும் சிலரோடு மிக நெருக்கமாக இருந்துள்ளார். சமீபத்தில் அவருக்கு திருமணம் முடியாகியது. தனது சக ஊழியர்களை அழைக்க முடிவு செய்தார்.

அலுவலகத்தில் சிலரை மட்டும் அழைத்தால் மற்றவர்கள் வருத்தப்படுவர் என்று நினைத்தார். அதனால் அந்த அலுவலகத்தில் இருந்த எழுபது பேருக்கும் அழைப்பிதழ்களை அனுப்பினார்.

ஹாய் மக்களே.. ஐ அம் ரங்குஸ்கி.. உலக கொசுக்கள் தினம் இன்று..!

திருமண நாள் அன்று, மணமகள் பணியாற்றிய அலுவலகத்தில் இருந்து ஒரே ஒருவர் மட்டும் வந்துள்ளார். வேறு யாரும் வரவில்லை. 70 பேரை அழைத்து ஒருவர் மட்டுமே வந்துள்ளார் என்று மிகவும் சங்கடப்பட்டார். திருமணத்தில் தங்கள் சக ஊழியர்களுக்கு என்று ஒதுக்கிய ஆறு மேசைகள் மற்றும் உணவுகள் வீணாகியது. இதனால் அந்த பெண் தனது உறவினர்கள் முன்னிலையில் முற்றிலும் அவமானமாக உணர்ந்தார். இந்த மோசமான அனுபவத்தால் திருமணத்திற்கு அடுத்த நாளே அந்த நிறுவனத்தில் இருந்து விலகினார்.

ராஜினாமா நிகழ்வுகள் சமூக ஊடகங்களில் மிகவும் சலசலப்பையும் கேளிக்கையையும் உருவாக்கி வருகிறது. சீனாவில் பொதுவாக இறுதிச் சடங்குகளுக்கு அனுப்பும் இரங்கல் அட்டையை அவள் முதலாளிக்கு அனுப்பியுள்ளார். அட்டையில், "உங்கள் இழப்புக்கு வருந்துகிறேன்.நான் இன்னும் இரண்டு வாரங்களில் இந்த வேலையை விட்டுக் கிளம்பி விடுகிறேன்” என்று அவர் பெயருடன் கையெழுத்துப் போட்டு அனுப்பியுள்ளார்.
Published by:Ilakkiya GP
First published:

Tags: China, Marriage, Women Employees

அடுத்த செய்தி