வண்ணத்து பூச்சியின் உடைந்த இறக்கையை சரிசெய்து வாழ்வளித்த பெண் - வைரல் வீடியோவால் குவியும் பாராட்டு

வைரல் வீடியோவால் குவியும் பாராட்டு

சிறகு உடைந்த பட்டாம்பூச்சிக்கு செயற்கை சிறகு அளித்த டிக்டாக் டஹ்லியாவின் அன்பான செயலுக்கு இணையத்தில் வாழ்த்து குவிந்து வருகின்றது.

 • Share this:
  ஒரு பெண் தான் வளர்த்து வந்த காயமடைந்த பட்டாம்பூச்சியின் உடைந்த இறக்கைக்கு பதிலாக செயற்கையாக சிறகு அளித்ததன் மூலம் அதற்கு மீண்டும் புது வாழ்வு அளித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் பலரின் கவனம் பெற்று வைரலாகி உள்ளது.

  டிக்டாக் பயனர் டஹ்லியா (@flosferox), பட்டாம்பூச்சிக்கு நெமோ-பக்கி பயோனிக் பட்டாம்பூச்சி என்று பெயரிட்டார். பட்டாம்பூச்சி தனது இறக்கைகளை மடக்க எப்படி போராடுகிறது என்பதை டஹ்லியா தனது வீடியோவில் காட்டியுள்ளார்.

  இது குறித்து வீடியோவில் அவர் தெரிவிக்கையில், "நாளுக்கு நாள், பட்டாம்பூச்சியின் சிறகு மேலும் மேலும் உடைந்து கொண்டிருந்தது, அதனால் நான் வேகமாக அதனை சரி செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும்'' என கூறிவிட்டு பின்னர் இறக்கைகளை சரி செய்வதற்காக டஹ்லியா ஒரு கைவினை கடைக்குச் சென்று பட்டாம்பூச்சியின் இறக்கையின் அளவுள்ள ஒரு இறகைக் கண்டுபிடித்தார். பட்டாம் பூச்சியின் இறக்கைக்கு கடையில் வாங்கிய இறகு பொருந்தியது.

  தினமும் பட்டாம் பூச்சிக்கு தேனை உணவாக கொடுத்து வந்த டஹ்லியா கடையில் தான் வாங்கிய இறகை பழுது பார்த்து பட்டம் பூச்சியின் உடலில் பொறுத்தியுள்ளார். முதலில் பட்டாம் பூச்சி பறக்கவில்லை. பின்னர் மெதுமெதுவாக படிப்படியாக பறக்க ஆரம்பித்துள்ளது.  ஒரு நாள், "மேலே, மேலே, உயர உயர பறந்து செயற்கை இறக்கைகளை கொண்டு வாழத் தொடங்கி விட்டது. பின்னர் ஒரு மரத்தில் உட்கார்ந்து" நன்றி "சொல்வது போல் அமர்ந்து விட்டு பின்னர் பறந்து சென்று விட்டது என தனது வீடியோவில் அவர் கூறியுள்ளார் . டஹ்லியாவின் அன்பான செயலுக்கு இணையத்தில் வாழ்த்து குவிந்து வருகின்றது.   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sankaravadivoo G
  First published: