ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

15 வருஷமா கைவிரலில் சிக்கியிருந்த மோதிரத்தை வெட்டியெடுத்த பெண்!

15 வருஷமா கைவிரலில் சிக்கியிருந்த மோதிரத்தை வெட்டியெடுத்த பெண்!

மாதிரி படம்

மாதிரி படம்

பெண்ணின் கை விரல்களில் கழற்ற முடியாமல் 15 ஆண்டு காலம் 3 மோதிரங்கள் சிக்கி இருந்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  சமூக வலைத்தளங்களில் தினம் தினம் நாம் எதிர்பாராத வண்ணம் பல வித்தியாசமான செய்திகளை கேள்விப்படுவதுண்டு. சில செய்திகளை படிக்கும் போது, அட! இதை நம் வாழ்விலும் நடந்துள்ளது என்று தோன்றும்.

  சாதாரணமாக கை விரல்களில் மோதிரம் போட்ட பின்பு அதனை கழற்றுவது பலருக்கு மிகப்பெரும் வேலையாக இருக்கும். நம் அனைவருக்கும் இந்த சூழ்நிலை ஏற்பட்டு இருக்கலாம். ஆனால் அதிகப்பட்சம் சில நிமிடங்களிலேயே எப்பாடுபட்டாவது அந்த மோதிரத்தை நாம் கழற்றி விடுவோம்.

  ஆனால் ஒரு பெண்ணிற்கு இவ்வாறு கை விரல்களில் போடப்பட்ட மோதிரம் 15 ஆண்டுகளாக கழற்ற முடியாமல் அவர் கைவிரல்களிலேயே இருந்தது என்றால் நம்ப முடியுமா. சமீபத்தில் டிக் டாக்கில் வெளியிட்ட ஒரு வீடியோவில் தான் இந்தப் பெண்ணைப் பற்றி தெரியவந்துள்ளது

  @jewelleryforever என்ற கணக்கில் டிக் டாக்கில் உள்ள ஒரு ரீடெய்லர் தான் இந்தப் பெண்ணின் கை விரல்களில் 15 ஆண்டு காலம் கழற்ற முடியாமல் 3 மோதிரங்கள் சிக்கி கொண்டதை பற்றிய வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

  அந்த வீடியோவில் வல்லுனர் ஒருவர் ஒரு சிறப்பு கருவியை பயன்படுத்தி அப்பெண்ணின் கைகளில் உள்ள மோதிரத்தை வெட்டுகிறார்.

  “அந்த மூன்று மோதிரங்களும் வெட்டுவதற்கு மிக கடினமானதாகவும் அதே சமயத்தில் அளவில் சிறியதாகவும் இருந்ததால் இந்த வேலை சற்று சிரமமாக இருந்ததாகவும் ஒரே நேரத்தில் அவை மூன்றையும் வெட்ட வேண்டியது ஏற்பட்டது” எனவும் அக்கடைக்காரர் தெரிவித்துள்ளார்.

  பெண்மணிக்கு இது முதன்முறை அல்ல. தன் வாழ்க்கையின் பல்வேறு இடங்களில் இந்த மோதிரங்களை வெட்டி தன் கை விரல்களில் இருந்து விடுவித்துக் கொள்ள பெரும் பாடுப்பட்டுள்ளார். சில மருத்துவமனைகளில் இதனை முயற்சித்து பார்த்தும் கூட அவர்களாலும் இந்த மோதிரத்தை வெட்டி எடுக்க முடியவில்லை

  நீங்கள் கணக்கில் புலியா? இந்த புதிருக்கு விடை கண்டுபிடிங்கள்!

   எனவே அங்குள்ள மருத்துவர்கள் ஏதேனும் நகை செய்பவர்களிடம் சென்று இந்த மோதிரத்தை வெட்டி எடுக்க பாருங்கள் என்று கூறியுள்ளனர். ஏனெனில் சில மருத்துவமனைகளில் மிக அவசர காலங்களைத் தவிர இதுபோன்று செயல்களை செய்வதில்லை என்றும் மருத்துவர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது

  அதிர்ஷ்டவசமாக அவர் சென்ற அந்த நகை கடைக்காரரிடம் கைவிரல்களில் இருந்த மோதிரத்தை நீக்குவதற்கு உண்டான பிரத்தியேக கருவி இருந்தது.

  எப்படியோ அப்பெண்ணின் கைவிரல்களில் இருந்து மோதிரத்தை நீக்கிய பிறகு மோதிரங்களினால் ஏற்பட்ட அந்த தழும்பு பெண்ணின் கைவிரல்களில் அப்படியே இருந்துள்ளது. அது மறைவதற்கு கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கும் மேல் ஆகும் என்று அந்த நகை கடைக்காரர் தெரிவித்துள்ளார்.

  தற்போது வரை மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ள இந்த வீடியோவை பார்த்து ஒவ்வொரு நெட்டிசன்களும் தங்களது வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.

  மொபைல் ஃபோன் பயன்படுத்தியபடி வாகனம் ஓட்டாதீர்கள் - விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட டெல்லி போலிஸ்

  அதில் ஒரு இணையவாசி எப்படி தன்னுடைய கைகளில் 20 வருடங்களாக மோதிரம் சிக்கி இருந்தது என்ற கதையையும், மற்றொரு இணையவாசி தான் கர்ப்பமாக இருந்தபோது தன் கைகளில் உள்ள மோதிரத்தை நீக்கிவிட்டு, நீண்ட நேரம் அழுததாகவும் தங்களது வாழ்க்கை அனுபவங்களை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Trending News, Viral News