வீட்டில் இருந்து பார்சல் கவரை திருடி செல்லும் அணில் - வைரல் வீடியோ!

வீட்டில் இருந்து பார்சல் கவரை திருடி செல்லும் அணில் - வைரல் வீடியோ!

வீட்டில் இருந்து பார்சல் கவரை திருடி செல்லும் அணில்

ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் நெட்டிசன்கள் கியூட்டான வீடியோக்களை ஷேர் செய்து வைரலாகி வருகி?

  • News18
  • Last Updated :
  • Share this:
ஒரு வீட்டில் இருந்து பார்சல் ஒன்றை அணில் திருடி செல்லும் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு குறும்புத்தனமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. குறிப்பாக கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் நெட்டிசன்கள் கியூட்டான வீடியோக்களை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர். அந்த வரிசையில், ஒரு திருட்டு வீடியோ ஒன்று மக்களை கடுமையாக சிரிக்க வைக்கிறது. பேஸ்புக்கில் ஷேர் செய்யப்பட்டுள்ள இந்த வீடியோவில், ஒரு அணில் ஒன்று ஒரு வீட்டிற்கு வெளியே இருந்த பார்சலை தூக்கி கொண்டு மிக விரைவாக ஓடுகிறது. சிகாகோவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

பல மாடி கட்டிடமாக அந்த வீட்டில் கீழிருந்து எடுத்து கொண்டு விரைவாக மேலே செல்கிறது. இந்த காட்சிகளை எதிர் வீட்டில் இருந்த பெண் ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார். நொய்மி குட்டரெஸ் என்ற பெண் இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்துள்ளார், அதில் ஒரு வேடிக்கையான தலைப்புடன் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த தலைப்பில், என் பக்கத்து வீட்டுக்காரர், கதவை தட்டி ஒரு அணில் உங்கள் வெயில் இருந்து ஒரு பார்சலை திருடி சென்றது என கூடினார் அவர் நம்புவாரா? நான் எடுத்த வீடியோவைக் காட்டாமல் சொன்னால் என்னை பைத்தியம் என நினைப்பார்" என குறிப்பிட்டுள்ளார். மேலும் #Squirrel #amazon #bandit மற்றும் #onlyinchicago என்ற ஹேஷ்டேக்குகளுடன் அவரது வீடியோவை ஷேர் செய்துள்ளார்.

Also read... மனைவியின் சுமையை குறைக்க எடுத்த முடிவு - 2 வயது குழந்தையுடன் டெலிவரி வேலை பார்க்கும் சீன நபர்!

இந்த வீடியோ பார்த்த அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது. மேலும் லட்சக்கணக்கான பார்வைகளையும், கமெண்ட்ஸ்களையும் பெற்றுள்ளது. பலர் இந்த வீடியோவிற்கு, LOL, ஹாஹா என பதிவிட்டுள்ளனர். "இது வேடிக்கையாக உள்ளது" என பேஸ்புக் யூசர் எழுதினார். “நிச்சயமாக இந்த வீடியோ வைரலாகும்" என்றும், எவ்வளவு அருமை, கியூட் அணில் என்றும் பல்வேறு கமெண்ட்ஸ்கள் வந்தவண்ணம் உள்ளது.

இதுபோல எண்ணற்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக சிங்கம், வாத்திடம் சேட்டை செய்த வீடியோ ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அந்த வீடியோவில், ஒரு சிங்கம் குளத்தின் அருகே நடந்து செல்கிறது. அப்போது, அந்த குளத்தில் நீந்திக்கொண்டிருந்த ஒரு வாத்தை அன்பாகத் தட்டிக்கொடுப்பதை போல அந்த காட்சிகள் அமைந்துள்ளன. தோற்றத்தை வைத்து பார்க்கும் போது சிங்கம் முரட்டு தனமாக தெரிந்தாலும், சிறிய பறவைக்கு உதவ முயற்சிப்பது போல தோன்றும் அந்த காட்சிகள் காண்போரின் நெஞ்சை உருக வைக்கும் வகையில் இருந்தது. மேலும் வெள்ளை நிற கிளி ஒன்று நாய்க்குட்டிக்கு "ஐ லவ் யூ" சொல்லும் வீடியோவும் வைரலானது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: