முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / பணிநீக்கம் செய்யப்பட்டவரைத்தான் திருமணம் செய்ய வேண்டுமா..? நிச்சயம் முடிந்த பெண்ணின் கேள்வியால் நெட்டிசன்கள் அதிர்ச்சி!

பணிநீக்கம் செய்யப்பட்டவரைத்தான் திருமணம் செய்ய வேண்டுமா..? நிச்சயம் முடிந்த பெண்ணின் கேள்வியால் நெட்டிசன்கள் அதிர்ச்சி!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்த நபரை நிச்சயித்த பெண், வேலையை இழந்த நபரை தான் திருமணம் செய்துக் கொள்ள வேண்டுமா? என சோசியல் மீடியாவில் முன் வைத்த கேள்வி பலரையும் அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். ஆனால் இன்றைக்கு உள்ள சூழலில் இணையம்தான் திருமணத்தை நிச்சயிக்கிறதோ? என்ற கேள்வியை எழுப்பும் வகையில் அமைந்துள்ளது சோஷியல் மீடியாவில் வைரலாகும் ஒரு ட்விட். அப்படி என்ன தான்? நடந்து என நாமும் இங்கே தெரிந்து கொள்வோம்.

நிச்சயித்த பெண்ணின் டிவீட்  :  கூகுள், மைக்ரோாசாப்ட், அமேசான் உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் பல, கடந்த சில மாதங்களில் தங்கள் நிறுவன ஊழியர்களை செயல்திறன் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட சில காரணங்களுக்காக பணி நீக்கம் செய்தனர். குறிப்பாக கூகுள் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய 12 ஆயிரம் ஊழியர்களும் ஒவ்வொருவராக கடந்த சில நாள்களாக தங்கள் பணி நீக்கக் கதையை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த சூழலில் தான், மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்த நபரை நிச்சயித்த பெண், வேலையை இழந்த நபரை தான் திருமணம் செய்துக் கொள்ள வேண்டுமா? என சோஷியல் மீடியாவில் முன் வைத்த கேள்வி பலரையும் அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. திருமணத்திற்கு முன்னதாக வேலை பறிபோனதால், தனது வருங்கால கணவரை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமா? என்று நெட்டிசன்களின் உதவியை நாடி சோஷியல் மீடியாவில் கருத்து கேட்டிருந்தார். இந்த கேள்வியின் ஸ்க்ரீஷாட் தான் தற்போது இணையத்தில் காட்டுத்தீயாக பரவி, பலரும் அப்பெண்ணைக் கலாய்த்தும் திட்டியும் வருகின்றனர்.

Read More : வைரலாகும் மணப்பெண்ணின் சிகை மற்றும் நகை அலங்காரம்..! அப்படி என்ன ஸ்பெஷல்!

திருமணம் என்பது உங்களின் தனிப்பட்ட முடிவு. இதற்கு நீங்கள் வேறொருவரின் உதவியைக் கேட்பது என்பது கேளிக்கையாக உள்ளது எனவும், தனது வருங்கால கணவரை இன்னும் மூன்றாவது மனிதர் போல கருதி upcoming husband என தெரிவித்துள்ளது கோபத்தை ஆழ்த்துகிறது என தெரிவித்துள்ளனர். வேலைப் போனதால், சம்பந்தப்பட்ட நபரை கைவிட நினைக்கும் எண்ணம் சுயநலமாக இருந்தாலும், இப்படிப்பட்டவர்கள் ஏன் ஃபெமினிசம் குறித்தெல்லாம் பேச வேண்டும் என்பது போன்ற பல கேள்விகளை முன்வைத்துள்ளனர்.

இவ்வாறு பல்வேறு கேளிக்கைகள், எதிர்மறையான கருத்துக்களை முன்வைத்தாலும், இந்த பிரச்சனைக்கு நெட்டிசன் ஒருவர் மாற்று வழியைக் கொடுத்துள்ளார். இவருடைய திறமையால் தான் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியில் சேர்ந்திருப்பார் என்றும், சில சூழ்நிலை காரணமாக பணிநீக்கம் செய்தவர்களுக்கு பெரும் தொகை ஒன்று நிறுவனம் வழங்கும். இதோடு இவர் மீண்டும் மற்றொரு வேலையில் சேர்வார் என்பதால் எவ்வித யோசனையும் இன்றி திருமணம் செய்துக் கொள்ளலாம் என்பது போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது. என்ன தான் கூகுள் பல வகைகளில் உதவியாக இருந்தாலும், திருமணம் செய்துக்கொள்வதற்கு கூட இணையத்தில் தேடினால் நியாயமா? எனவும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

First published:

Tags: Trending, Viral