மெக்சிகோவில் உள்ள விமான நிலையத்தில் எமிரேட்ஸ் விமான நிறுவன ஊழியர்களை பெண் ஒருவர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நவம்பர் 1-ம் தேதி கைப்பற்றப்பட்ட வீடியோவில், பெண் ஒருவர் கத்துவதையும், சக பயணிகள் மீது சூட்கேஸை வீசுவதையும், பாதுகாப்புக்காக ஊழியர்கள் அழைத்தபோது செக்-இன் மேசையை நாசப்படுத்துவதையும் காட்டுகிறது.
மெக்ஸிகோசிட்டி விமான நிலையத்தில் தனது விமானத்தை தவறவிட்ட ஒரு பயணி, எமிரேட்ஸ் விமான நிறுவன ஊழியர் மீது தாக்குதல் நடத்தும் காட்சி சக பயணிகளால் காட்சியாக்கப்பட்டு இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
Moment woman throws punches at Emirates airline employee and hurls objects at bystanders after
missing her flight at #MexicoCity airport pic.twitter.com/sHsPEKkWzl
— Hans Solo (@thandojo) November 7, 2022
செவ்வாய்கிழமை தனது விமான நிலையத்திற்கு தாமதமாக வந்ததையடுத்து அந்த பெண் தனது விமானத்தை தவறவிட்டார். மேலும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் செய்தி குறிப்பின்படி தாமதமாக வந்த அந்த பெண் தனது காலாவதியான பாஸ்போர்ட்டுடன் விமானத்தில் செக்கின் செய்ய முயன்றதால் தடுக்கப்பட்டுள்ளார். அதில் கோபம் அடைந்த பெண் விமான நிறுவனத்தின் ஊழியர்களைத் தாக்கத் தொடங்கியுள்ளார்.
இதையும் படிங்க : விமான நிலையத்தில் திக்குமுக்காடிய வயதான தம்பதியர் - உதவிய நபருக்கு குவியும் பாராட்டு.!
அங்கிருந்த உபகரணங்களை தரையில் வீசியும், ஏர்லைனின் கவுண்டரின் மீது ஏறி மேசைகளின் மேல் நின்று கத்தியும் ரகளை செய்துள்ளார். பாதுகாப்பு ஊழியர்கள் அவரை கீழே இறங்கச் சொன்னதால் மேலும் கத்தி கூச்சலிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பரவி வருகிறது.
இதற்கிடையில்,கடந்த அக்டோபரில், அமெரிக்கப் பெண் ஒருவர் கேபின் பணியாளர்களை அலறவிட்டு, சக பயணிகள் மீது முழு தண்ணீர் பாட்டிலை வீசிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
அதே மாதம், இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவுக்குச் சென்ற துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம், போதையில் இருந்த பயணி, விமானப் பணிப்பெண்களுடன் சண்டையிட்டதால், அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Airport, Mexico, Passengers, Viral Video